Published:Updated:

இந்தியாவை அதிரவைத்த பொருளாதாரச் சவால்கள்!

இந்தியாவை அதிரவைத்த பொருளாதாரச் சவால்கள்!
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவை அதிரவைத்த பொருளாதாரச் சவால்கள்!

நாணயம் புக் செல்ஃப்சித்தார்த்தன் சுந்தரம்

இந்தியாவை அதிரவைத்த பொருளாதாரச் சவால்கள்!

நாணயம் புக் செல்ஃப்சித்தார்த்தன் சுந்தரம்

Published:Updated:
இந்தியாவை அதிரவைத்த பொருளாதாரச் சவால்கள்!
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவை அதிரவைத்த பொருளாதாரச் சவால்கள்!

ரே அறிவிப்பில் புழக்கத்திலிருந்த பணத்தொகையில் 86% மதிப்பு நீக்கம் செய்யப்பட்டுத் திரும்பப் பெறப்படும் என்கிற அறிவிப்பு மிகப்பெரிய, கொடூரமான, நிதி சார்ந்த அதிர்ச்சி’’ என்கிறார் அர்விந்த் சுப்ரமணியன். இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்து  2018 ஜூன் மாதம் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்தவர் இவர்.

அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக் கும் புத்தகம் `ஆஃப் கவுன்சல்: தி சேலஞ்சஸ் ஆஃப் தி மோடி - ஜெட்லி எகானமி (Of Counsel: The Challenges of the Modi – Jaitley Economy). ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆவதற்குமுன்பு அவர் வகித்து வந்த தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு 2014 அக்டோபர் மாதம் நியமிக்கப் பட்டவர் அர்விந்த். இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவர் இருந்த நான்கு வருடங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், சவால்களையும், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளையும் ஓரளவுக்கு நடுநிலைமையோடு எழுதியிருக்கிறார் அர்விந்த் சுப்ரமணியன்.

இந்தியாவை அதிரவைத்த பொருளாதாரச் சவால்கள்!

இந்தியப் பொருளாதாரம், நிதிக் கொள்கை, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல், விவசாயம் எனப் பல விஷயங்கள் குறித்து அவர் இந்தப் புத்தகத்தில் எழுதியிருந்தாலும்,   பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி, விவசாயம் போன்ற மூன்று முக்கிய விஷயங்கள் பற்றி அவர் என்ன எழுதி இருக்கிறார் என்பதைப் பார்ப்போம். வாராக் கடன் பிரச்னைக் குறித்த சவால் களையும் அவர் இந்த நூலில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

பணமதிப்பு நீக்கம்

நவம்பர் 8, 2016. யாராலும் மறக்க முடியாத நாள் இது. நவீன உலக வரலாற்றில் வழக்கமான பொருளாதாரச் சூழலில் இயங்கிவரும் எந்தவொரு நாடும் செய்யாத ஒன்றை நமது அரசு செய்தது. ரூ.500, ரூ 1,000 ரூபாய் நோட்டுகள் அன்றிரவிலிருந்து செல்லாது என அதிரடியாக அறிவித்தது. இதற்கு மூன்று / நான்கு நோக்கங்கள் (கறுப்புப்பண ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு, தீவிரவாதச் செயல்பாட்டுக்கான நிதி முடக்கம், அதன்பின் சேர்க்கப்பட்டது டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகப் படுத்துவது) சொல்லப்பட்டன. அதன் விளைவாக, நாட்டில் புழங்கிவந்த 86%  பணம் அதன் மதிப்பை உடனடியாக இழந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவை அதிரவைத்த பொருளாதாரச் சவால்கள்!

பொதுவாக, பணமதிப்பு நீக்கம் என்பது படிப்படியாகச் செய்யப்படவேண்டிய ஒன்றாகும் (ஐரோப்பிய மத்திய வங்கி 500 யூரோ நோட்டை 2016-ல் பணமதிப்பு நீக்கம் செய்தது). அதுவும் போர், கட்டுக்கடங்காத பணவீக்கம், நிதி நெருக்கடி, அரசியல் கொந்தளிப்பு (வெனிசூலா, 2016) ஆகிய தீவிரமான சூழ்நிலைகள் இருக்கும்பட்சத்தில்தான் ஒரு நாடு இந்த நடவடிக்கையை எடுக்கும். ஆனால், இந்தியாவில் அப்படி அசாதாரணமான சூழல் ஏதுமில்லை.   இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனபின்பும் இந்த நடவடிக்கைக்கான காரணம் என்ன, இதனால் விளைந்த நன்மை என்ன என்பது குறித்து மர்மம் நீடித்து வருகிறது.

என்றாலும், இது சம்பந்தமாக நூலாசிரியருக்கு இரண்டு குழப்பங்கள். ஒன்று, அரசியல் ரீதியானது இன்னொன்று, பொருளாதார ரீதியானது.

பணமதிப்பு நீக்கத்தினால் நாடெங்கிலும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளானது அனைவரும் அறிந்ததாகும். அப்படியிருந்தும், அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றது எப்படி என்பது ஆசிரியருக்கு ஒரு புரியாத புதிராக இன்றைக்கும் இருந்து வருவதாகக் கூறியிருந்தாலும், அதற்கான ஊகங்களாகச் சிலவற்றை அவர் குறிப்பிட்டிருக் கிறார்.

அதில் முக்கியமானது, பணமதிப்பு நீக்கத்தின் முக்கிய நோக்கம் கறுப்புப்பண ஒழிப்பு என்பதால் சாதாரண மக்கள், “நியாயமான வழியில் சம்பாதித்த நாமே இப்படிச் சிரமப்படும்போது, முறையற்ற வகையில் சொத்து சேர்த்தவர்கள் நம்மைவிட அதிகம் சிரமப்படுவார்கள். அதாவது, ‘நானே எனது ஆட்டை இழக்கும்போது செல்வந்தர்கள் அவர்களது மாட்டை இழப்பார்கள்’ என்கிற எண்ணத்திலும், நாட்டின் நலன் என்கிற பெரிய நோக்கத்திற்காகத் தற்காலிகமாக நாம் சிரமப்பட்டாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்திலும் அவர்கள் இதைச் சகித்துக்கொண்டிருந்திருப்பார்கள்” என்கிறார்.

என்றாலும், இந்த ஊகத்தால் அவர் சமாதானம் அடையவில்லை. ஏனெனில், செல்வந்தர்கள்  முறைகேடாகச் சேர்த்த சொத்தினை வெளிக் கொண்டுவர வருமானத்தின்மீது அதிக வரி விதிப்பது, ரெய்ட் எனப் பல வழிகள் இருக்கும் போது, ஏன் இந்த வழியை மத்திய அரசாங்கம் எடுத்தது? ‘உயர்ந்த லட்சியத்தை அடைவதற்குத் தியாக உணர்வு என்பது அவசியமான நிபந்தனையாக இருக்க வேண்டும்’ என்று மகாத்மா காந்தி கூறி வந்தது இந்த விஷயத்தில் உண்மையாக இருக்குமோ? அரசியல்ரீதியாகப் பார்த்தால், `குறைபாடே (பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட சிரமம்) புனிதமானதோ (ஆளுங்கட்சியின் வெற்றி)’ என்கிற ஊகம் சரியானதா நூலாசிரியரின் குழப்பம் நீடிக்கிறது.

பொருளாதாரக் குழப்பம்

அடுத்தக் குழப்பம், பொருளாதாரரீதியிலானது. பணப்புழக்கத்தில் 86 சதவிகித்தைக் குறைத்த இந்தக் கொடூரமான அறிவிப்பு பொருளாதார வளர்ச்சியில் ஏன் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை? பணமதிப்பு நீக்கத்துக்குமுன்பான ஆறு காலாண்டுகளில் நமது ஜி.டி.பி-யின் சராசரி வளர்ச்சி 8.1%, அதற்குப்பின் ஏழு காலாண்டுகளில் இது 6.2 சதவிகித அளவுக்குச் சரிந்தது. இருந்தாலும், பணப்புழக்கத்தில் ஏற்பட்ட சரிவோடு ஒப்பிடும்போது, இது மிகப்பெரிய தாக்கமில்லை. இதற்குப் பல ஊகங்கள் இருக் கின்றன. அவற்றில் முக்கியமானது, இந்தியாவில் ஜி.டி.பி கணக்கிடப்படும் முறை.

இந்தியாவில் முறைசாராத் துறையின் செயல்பாடுகள் குறித்த அளவீடுகள் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. எனவே, முறைசார்ந்த  துறையின் அளவீடுகளைக்கொண்டே இந்த வளர்ச்சி விகிதம் கணக்கிடப்படுகிறது. வழக்கமான சூழ்நிலையில் முறைசார்ந்த துறையின் வளர்ச்சி பெரும்பாலும் முறைசாராத் துறையின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும். ஆனால், பணமதிப்பு நீக்கம் போன்ற அதிரடி அறிவிப்பு பெரும்பாலும் முறைசாராத் துறையில்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அதுகுறித்த துல்லியமான அளவீடுகளை உடனடியாகக் கணிக்க இயலாது என நூலாசிரியர் கூறுகிறார்.

சரி, இனி சரக்கு மற்றும் சேவை வரிக்கு வருவோம். `ஒரே இந்தியா, ஒரே சந்தை, ஒரே வரி’ என்கிற பெயரில் இந்த வரி அமர்க்களமாக அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த வரியால் மூன்று நன்மைகள் ஏற்படக்கூடும். முதலாவதாக, வறுமை ஒழிப்பு மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியை ஓரளவுக்கு இதன்மூலம் பெறலாம். இரண்டாவதாக, இந்தியாவெங்கும் ஒரே வரி என்பதால், மாநிலங்களுக்கிடையே வரிவிதிப்பில் இருந்துவருகிற வித்தியாசங்கள் மறைந்து `ஒரே இந்தியா’ என்கிற நிலைமை ஏற்படும். மூன்றாவதாக, உள்ளீட்டு வரியின் அடிப்படையில் கடனைக் (Input Tax Credit – ITC) கோர வேண்டுமெனில், ஒவ்வொரு பரிவர்த்தனையும் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதால், வரி மேலாண்மையும் அதற்கான இணக்கமும் (compliance) குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்படும்.         

ஜி.எஸ்.டி-யின்கீழ் சில பொருள்களையும், சேவை களையும் கொண்டுவராமல் இருப்பது அதன் பலவீனமாக இருந்தாலும், கூட்டுறவுக் கூட்டாட்சிக்கான ஒரு பரிசோதனையும், சாதனை யும் ஆகும் என்பதால்,       ஜி.எஸ்.டி-யைத் தொடர்ந்து பின்பற்றுவது அவசியமாகும்.

இன்றைக்குக் கட்சியின் வெற்றி, தோல்விகளை விவசாயத் துறையும், விவசாயி களின் கஷ்டநஷ்டங்களும் தீர்மானிப்பதாகப் பலரும் பேசிவரும் நிலையில் அர்விந்த் சொல்வதென்ன? பணவீக்கம், விவசாயிகளின் துயர், அதனால் ஏற்படும் அரசியல் அமைதி / குழப்பம் எனப் பலவற்றையும் தீர்மானிப்பதில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தியாவை அதிரவைத்த பொருளாதாரச் சவால்கள்!

உற்பத்தி அதிகமிருந்தால் அந்தப் பொருள்களுக்கான சந்தை விலை சரிகிறது; வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டால், விலை உயர்வதுடன்,  விவசாயிகளின் வருமானமும் பாதிக்கப்படுகிறது. எனவே, பொருளாதாரரீதியிலும், தொழில்நுட்பரீதியிலும் விவசாயிகளின் வருமானத்துக்குத் தீர்வு காணாத வரை அவர்களின் பிரச்னை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். கடன் தள்ளுபடி அரசியலுக்கு ஏற்றதாக இருக்கலாம்; ஆனால், பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறும் அவர், தெலங்கானா அரசின் `ரைது பந்து (Rythu Bandhu – விவசாயியின் நண்பன்)’ திட்டத்தைப் பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் எழுதியிருக்கிறார்.

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஓர் ஏக்கருக்கு வருடத்திற்கு (இரண்டு சாகுபடி காலத்தின் அடிப்படையில்) ரூ.8,000 வீதம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதன்மூலம் சுமார் 58 லட்சம் விவசாயிகள் பயனடைகிறார்கள். இதற்கான நிதி ஒதுக்கீடு வருடத்துக்கு ரூ.12,000 கோடி. இதற்கு அடிப்படையான சுமார் 1.42 கோடி ஏக்கரின் நில ஆவணங்கள் சீர்செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்டது மிகப்பெரிய வேலை. அதை அந்த அரசு செய்துமுடித்திருப்பது பாராட்டுக்குரியது.

எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்கும்படிப் பொருளாதார ரீதியில் வசதியான நுகர்வோர் களை அரசு கேட்டுக்கொண்டது போல, இந்தத் திட்டத்தின் கீழும் செல்வந்த விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளுக்காக மானியத்தை விட்டுக் கொடுக்கும்படி மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு முன்னுதாரணமாக, முதலமைச்சர் விட்டுக் கொடுத்தி ருக்கிறார். இந்தத் திட்டத்தை தேசிய அளவில் நடைமுறைப் படுத்துவது சாத்தியமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

அர்விந்த் சுப்ரமணியன் எழுதிய இந்தப் புத்தகம்  பொருளாதாரம் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட கொள்கை களையும், திட்டங்களையும் பற்றி விரிவாகப் பேசியிருந்தாலும், பணமதிப்பு நீக்கம் குறித்த அத்தியாயம் சற்று ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. இந்த முடிவு எதற்காக, எப்படி எடுக்கப்பட்டது, இந்த `தடாலடி’ அறிவிப்பின் பலாபலன் என்ன என்பது குறித்த பகுப்பாய்வு எதையும் ஆசிரியர் குறிப்பிடவில்லை. அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னணி அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதைச் சொன்னால், சர்ச்சை வரலாம் என்று நினைத்து அவர் அதைத் தவிர்த்திருக்கலாம்!)

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் மோடியின் ஆட்சியில் பொருளா தாரம் தொடர்பான விஷயங்கள் எப்படி எல்லாம் நடந்தன என என்பதைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் ஒருமுறை படிக்கலாம்!