Published:Updated:

`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்!'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்

`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்!'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்
`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்!'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்

மதுரை நகரம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நவீனமயமாக்கப்பட உள்ளது. அதன் ஒருகட்டமாக, பெரியார் பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்கும் பணி தொடங்க இருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைக்கிறார்.

`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்!'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்

மதுரையில் நான்கு தலைமுறையாய் வாழ்ந்த, வாழுகின்ற மக்கள் தினசரி உச்சரித்து வரும் பெயர், `பெரியார்' மதுரை நகர்ப்பேருந்துகளின் நிலையமாக இயங்கிவந்த இந்தப் `பெரியார் பஸ் ஸ்டாண்ட்' புதிய கட்டுமானப் பணிகளுக்காகத் தற்போது மூடப்பட உள்ளதையொட்டி, அங்கிருந்த அனைத்துக் கடைகளையும் உரிமையாளர்கள் அகற்றிக்கொண்டிருக்கின்றனர். 

`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்!'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்

50-க்கும் அதிகமான மரங்கள், பழைய கண்காணிக்கோட்டைப் பூங்கா எனக் காற்றோட்டமாகப் பெரியவர்களின் ஓய்விடமாகவும், பேச்சு, சிரிப்பு எனப் பள்ளிக் கல்லூரி மாணவர்களின் ஜாலி ஏரியாவாகவும் திகழ்ந்தது, 'பெரியார்'பேருந்து நிலையம். இரவு எந்நேரமும் வயிற்றுப்பசியைப் போக்கும் கடைகள் இயங்குகிற ஹாட்ஸ்பாட்டாகவும் விளங்கிவந்தது இந்த பஸ் ஸ்டாண்ட். 

`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்!'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்

பஸ் ஸ்டாண்டினுள் 38 ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருந்த 'வைரவி' டீக்கடையைக் காலிசெய்துவிட்டுப் புறப்பட்ட வைரமுத்துவிடம் பேசினோம். திடீர் நகரில் வீடு. மனைவி, சாந்தி. மகன்கள் அஜய்குமார், அருண்குமார். மூத்த மகன், ஐடிஐ. 12-ஆம் வகுப்புப் பயிலும் இளையவருக்கு டாக்டர் கனவு. ``காலை 4 மணிக்குத் தெறந்து நைட்டு 12 மணிக்கு கடையை மூடுவேன். எனக்கு இந்தக் கடையைத் தவிர வேற எதுவும் தெரியாது. இதுலதான் போதுமான வருமானம் கிடைச்சது. இனி கைவண்டிக்கடைதான் வைக்கணும். லாபம் எப்படிக் கிடைக்குமோ, ஒண்ணும் புரியலை" என்கிறார்.

`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்!'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்

பஸ் ஸ்டாண்டின் காம்ப்ளக்ஸ் பகுதியில் வழக்கமாகக் கூவிக்கூவி அழைத்து, பூக்கள் விற்கிற 70 வயது மீனாட்சிப் பாட்டி, கடைவிரித்து ஏனோ மௌனமாக அமர்ந்திருந்தார். 'என்ன பாட்டி, ஏன் இப்பிடி உட்காந்திருக்க எனக் கேட்டதற்கு, ``பஸ் ஸ்டாண்ட மூடுறாகய்யா. என்னால நடக்க முடியாது. வீட்டில ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க. 40 வருஷமா இங்க வியாபாரம் பண்றேன். இனி, என்ன பண்றதுன்னே தெரியலைய்யா" எனக் கூறினார்.  

`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்!'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்

புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானத்துக்குத் துணை முதல்வர் வந்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்காக முக்கிய சாலையான பெரியார் பஸ்ஸ்டாண்ட் சாலையை அடைத்து நடுரோட்டில் மேடை அமைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. பேருந்துகளும் மாற்றி விடப்படுவதால் தங்கள் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்துக் காவலர் ஒருவரிடம் பேசுகையில், ``சரியான திட்டமிடலும் அறிவிப்பும் இல்லாமல் ஒரே நாளில் மாற்றங்கள் செய்வதால்தான் இந்தச் சிக்கல். இவற்றால் பொதுமக்கள் எங்களையும் திட்டிவிட்டுச் செல்கின்றனர்" எனத் தலையில் அடித்து நொந்துகொண்டார்.

20 வருடங்களாக அப்பகுதியில் ஜவுளிக்கடை வைத்திருந்தவரிடம் கேட்கையில், ``இங்கிருக்கும் சங்கத்தினரிடம் ஒற்றுமை இல்லை. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டதும் அதில் எங்கள் கடைகளுக்கான இடத்துக்குப் போராட வேண்டிய நிலைதான் ஏற்படும்போல எனத் தற்போதைய சூழல் உணர்த்துகிறது’’ என்று குறை கூறினார். 

`பெரியார் பஸ் ஸ்டாண்டை இடிக்கப்போறாங்களாம்!'’ - 38 வருட நினைவை பகிரும் கடைக்காரர்கள்

பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் ஆவதில் அனைவரும் இங்கு `ஹேப்பி’ ஆனால், இந்தப் பணியால் ஏற்படவுள்ள பாதிப்புகளை, சிரமங்களை நுணுக்கமாகக் கண்டறிந்து களைய வேண்டியதே தற்போது அவசியப்படுகிறது. இது, பஸ் ஸ்டாண்ட் மூடும் விவகாரம் மட்டுமல்ல, வணிகர்கள், அவர்களின் குடும்பம் என ஏறத்தாழ 3,000 பேரின் வாழ்வாதாரம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சீக்கிரம் புதிய நிலையத்தைக் கட்டிமுடித்துத் திறக்க வேண்டும் எனப் பொதுமக்களும், எந்தவிதமான அரசியல் தலையீட்டுக்கும் ஆளாகாமல் புதிய கட்டடத்தில் பழைய கடைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வணிகர்களும் அரசு மற்றும் மாநகராட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லாண்டுக் காலமாக வாழ்ந்துவந்த வீட்டைவிட்டுப் பிரிகையில் நெஞ்சம் விம்மிக் கண்கள் பொங்குமே அந்தச் சோகம்தான் பஸ்ஸ்டாண்ட் கடைக்காரர்கள், பயணிகள், பொதுமக்கள் என ஒவ்வொருவர் கண்களிலும்!  தாயைப் பிரியும் பிள்ளைபோல தவிக்கத் தொடங்கியிருக்கிறது, மதுரை மாநகர். பொதுமக்களுக்காகப் புதுப்பிக்கப்படட்டும், 'பெரியார் பேருந்து நிலையம்'!