Published:Updated:

எத்திசையும் புகழ் மணக்க!

எத்திசையும் புகழ் மணக்க!
பிரீமியம் ஸ்டோரி
எத்திசையும் புகழ் மணக்க!

உழவது கைவிடேல்

எத்திசையும் புகழ் மணக்க!

உழவது கைவிடேல்

Published:Updated:
எத்திசையும் புகழ் மணக்க!
பிரீமியம் ஸ்டோரி
எத்திசையும் புகழ் மணக்க!
எத்திசையும் புகழ் மணக்க!

``சிதம்பரம் அருகேயுள்ள வல்லம்படுகைதான் பிறந்த ஊர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து, பாரீஸ் பல்கலைக்கழகத்தில் 1980-ல் முனைவர் பட்டம் பெற்றேன். இப்போது பாரீஸில் ‘உயர் கல்வி ஆய்வு’ நிறுவனத்தில் (EPHE) ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறேன்.’’ சுறுக்கென அறிமுகம் கொடுக்கிறார் அப்பாசாமி முருகையன். 150 ஆண்டுகளுக்கு முன் கடல் கடந்து போன தமிழர்களின் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்கிற ஆய்வுகளைத் தொடர்ச்சியாக  முன்னெடுத்துவருகிறார். சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்தோம்.

எத்திசையும் புகழ் மணக்க!

“புலம்பெயர் தமிழர்கள் பற்றிய உங்கள் ஆய்வு எப்படித் தொடங்கியது?’’

‘`1840களில் தோட்டத் தொழில்களுக்காக இந்தியா முழுவதிலுமிருந்து வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தமிழர்களும் பல நாடுகளுக்குச் சென்றார்கள். இன்று மலேசியாவில் 10%, தென்னாப்பிரிக்காவில் 2% (விழுக்காடு குறைவு என்றாலும்கூட, எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர்), சிங்கப்பூரில் 7%, மொரீஷியஸில் 8%, பிஜித்தீவுகளில் 5%, மர்த்தினிக் தீவில் 4%, குவாதலூப் தீவில் 5-6% ரியூனியனில் 33% புலம்பெயர் தமிழர்கள் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட 15 நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டில் தோட்டத் தொழில்களுக்காகச் சென்றவர்கள்தாம் இதில் பெரும்பாலானோர். இவர்கள் தற்போது எப்படி வாழ்கிறார்கள், மாறியிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் வர இந்த ஆய்வில் இறங்கினேன். என்னுடைய ஆய்வு ரியூனியன், மர்த்தினிக், குவாதலூப் ஆகிய மூன்று பிரஞ்சுத் தீவுகளைப் பற்றியது மட்டுமே. இந்த மூன்று தீவுகளும் பிரான்ஸின் கடல் கடந்த மாநிலங்கள். இத்தீவுகளில் உள்ள இந்திய வம்சாவளியினரில் 80% தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள். இந்த ஆய்வுகள் மூலம் உலகத் தமிழர்களிடையே ஒரு பாலம் உண்டானால் எனக்கு மகிழ்ச்சி!’’

‘`அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அந்த மக்களுடைய வாழ்க்கையில் பூர்வீக அடையாளங்கள் இருக்கின்றனவா?’’

எத்திசையும் புகழ் மணக்க!

‘`வசதி வாய்ப்புகளோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள், இன்னும் தோட்டத் தொழிலாளர்களாகவே தொடர்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆல்பர்ட் அய்யாசாமி, மாரிமுத்து, ஃபிராங்க் முத்துசாமி என அவர்களது பெயரில் தமிழ் அடையாளம் இருக்கிறது. மாரியம்மன் விழா, தைப்பூசம், பொங்கல் இவற்றை இதே பெயர்களில் கொண்டாடுகிறார்கள். மாரியம்மன், மதுரைவீரன், காத்தவராயன் போன்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள். தப்படித்து ‘மாரி மகமாயி மழைபொழியும் தாயே...’ எனப் பாடி, ஆடு கோழி பலியிடு கிறார்கள். தமிழ் இனக்குழு வாழ்க்கை முறை, சடங்குகள், வழிபாடுகள் எல்லாமும் தமிழ்நாட்டு நடைமுறைகளோடு ஒத்துப்போகின்றன. சொல்லப்போனால், தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இல்லாத சடங்கு முறைகள்கூட புலம்பெயர் தமிழர்களிடம் இருக்கின்றன.’’

எத்திசையும் புகழ் மணக்க!

‘`புலம்பெயர் தமிழர்களின் தற்போதைய நிலை என்ன?”

‘`பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். தொழிலதிபர், டாக்டர், இன்ஜினீயர், அரசியல் பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். தங்கள் பூர்வீகத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவிற்குப் பயணம் வரத் தொடங்கியிருக்கிறார்கள். பிரச்னைகள் அல்லது தீராத நோய்களுக்கு மாரியம்மனை வழிபடுகிறார்கள். அடிக்கடி விழா நடக்கிறது. காவு கொடுக்கப்படுகிறது. பலிகொடுக்கப்பட்ட ஆடு பகிர்ந்து உண்ணப்படுகிறது. மொரீஷியஸ் தமிழர்களிடம் `ஏழு கறி’ என்ற பெயரில், ஏழு விதமான காய்கறியைச் சமைத்து வழிபடுகிற முறை இருக்கிறது. இது தமிழ்நாட்டில் இல்லாத ஒரு வழிபாட்டுமுறை.’’

எத்திசையும் புகழ் மணக்க!

‘`தமிழ்மொழிக்கும் அவர்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?”

``தமிழ்மொழி வழிபாட்டு மொழியாக மட்டுமே பயன்பட்டு வருகிறது. திருவிழாவில் நல்ல தங்காள், ராஜா தேசிங்கு, மதுரைவீரன் நாடகங்கள் பாடப்படுகின்றன. சிலசமயம் கூத்து கட்டுகிறார்கள். பாடும் உச்சரிப்பில் பெரிய அளவுக்கு மாற்றம் இருக்கிறது. ‘ராமர்’ என்பதை ‘லாமெரு’ என்றும், கிடா வெட்டை ‘காவு’ என்றும், சீர் வரிசை கொடுப்பதை `வர்ச’ என்றும் அழைக்கிறார்கள். மொரீஷியஸ், ரியூனியனில் பேசப்படும் கிரியோல் மொழியில் நிறைய தமிழ் வார்த்தைகள் கலந்திருக்கும். வயதில் மூத்தவர்களை ‘அணே’ என்பார்கள். மர்த்தினிக் தீவில் `கொழம்பு’ என்பது தேசிய உணவு. அவல்கா(அவரைக்காய்), பாவொக்கா (பாகற்காய்), முலுங்கீலே (முருங்கைக் கீரை) என இன்னும் பல சொற்கள் வழக்கத்தில் உள்ளன. தமிழ் கற்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.’’

எத்திசையும் புகழ் மணக்க!

``இந்திய அரசிடமிருந்து புலம்பெயர் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?”

‘`தங்கள் மூதாதையர்களின் வேர்களைத் தேடும் படலத்தில் இருக்கிறார்கள். அந்த மூதாதை யர்களின் பண்பாடு, ஆன்மிகம், மொழி, கலை போன்ற தொட்டு உணரமுடியாத பாரம்பர்யத்தைத் தங்களுடை யதாக ஆக்கிக்கொள்ள விரும்பு கிறார்கள். இதைக் காதுகொடுத்துக் கேட்கத்தான் யாரும் தயாராக இல்லை. இந்திய அரசு, அவர்களுடைய தென்னிந்தியப் பயணம் சிக்கல்கள் இல்லாமல் நடைபெற உதவிகள் செய்யலாம். அவர்கள் ‘இந்திய வம்சாவளியினர்’ என்ற அங்கீகாரத்திற்காக PIO, OCI போன்ற இந்திய அரசின் சான்றிதழ் பெற, பல சிக்கல்கள் இருப்பதால் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் இந்த முயற்சியில் ஈடுபடுவதே இல்லை. அதைச் சரிசெய்ய வேண்டும்.’’

வெ.நீலகண்டன், கே.ஜி.மணிகண்டன் - படம்: பா.காளிமுத்து