Published:Updated:

அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள்

அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள்
பிரீமியம் ஸ்டோரி
அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள்

நாணயம் புக் செல்ஃப்

அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள்

நாணயம் புக் செல்ஃப்

Published:Updated:
அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள்
பிரீமியம் ஸ்டோரி
அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள்

மெரிக்காவில் பணியாளர் களிடம் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் 61 சதவிகிதத்தினர் பணியிடத்தில் இருக்கும் மன அழுத்தத்தின் காரணமாக  நோய்வாய்ப் படுவதாகவும், ஏழு சதவிகிதத்தினர் அதன் காரணமாக மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணி ரீதியான மன அழுத்தத்தினால் ஆண்டொன்றுக்கு 300 பில்லியன் டாலர்  (இந்திய ரூபாய் மதிப்பில் 2.10 லட்சம் கோடி ரூபாய்) அளவிலான நஷ்டமும், 1.20 லட்சம் பேர் இறந்துபோவதாகவும் ஆய்வுத் தகவல் ஒன்று சொல்கிறது.

சீனாவில் இந்த பணிரீதியான மன அழுத்தத்தின் காரணமாக கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் மரணமடைவதாகச் சொல்கிறது இன்னொரு தகவல்.

அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள்

இன்னொரு கோணத்தில் பார்த்தால்,  இவர்கள் அனைவரும் சம்பளத்துக்காக (pay check) மரணமடைகிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை நிறுத்துவது குறித்து சிந்திக்கவேண்டாமா? அதற்காக எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம். நவீனகால நிறுவன மேலாண்மை முறைகள் நிறுவனங்களின் செயல் பாட்டையும் பணியாளர்களின் உடல் நலத்தையும் எப்படிப் பாதிக்கின்றன என்பதை விளக்கமாகச் சொல்கிறது  ‘டையிங் ஃபார் எ பே செக்’ எனும் புத்தகம். இதன் ஆசிரியர் ஜெஃப்ரி பீஃபர். இவர் ஸ்டார்ன்ஃபோர்டு கிராஜ்வேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் பேராசிரியர் ஆவார்.

ஒரு காலத்தில் நிலக்கரி சுரங்கம், கச்சா எண்ணெய் எடுக்கும் ரிக்குகள் (Rigs), கெமிக்கல் பிளான்டுகள், கட்டுமான பணியிடங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர் களுக்குத்தான் (புளூ காலர்) பணி சார்ந்த நோய்கள் வந்து மரணமடைவதற்கான வாய்ப்புகள் இருந்துவந்தது. இன்றைக்கு ஒயிட் காலர் பணிகளில் இருப்பவர்கள் பலருமே பணியிடப் பிரச்னைகளினால் புளூ காலர் பணியாளர்கள் அளவுக்கு மரணமடையும் வாய்ப்புடனேயே பணியில் இருக்கின்றனர். பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்திற்கென (Occupational Safety and Health Administration (OSHA)) அமெரிக்க அரசாங்கம் தனி அமைப்பையே நடத்தி வருகிறது. இது புளூ காலர் பணியாளர்களுக்கான பல்வேறு பணியிடப் பாதுகாப்பு வசதிகளை நிர்ணயம் செய்து அவை இருக்கிறதா என்று ஆய்வு செய்கிறது. இதனால் புளூ காலர் பணியாளர் களின் பணியிட இறப்பு என்பது 1970-ல் இருந்ததைவிட 2015-ல் கிட்டத்தட்ட 65% குறைந்துவிட்டது. அதே காலகட்டத்தில் பணியிடத்தில் காயமடைதல் என்பது கிட்டத்தட்ட 72% குறைந்துவிட்டது. ஒயிட் காலர் பணியாளர்கள் OSHA அமைப்பின் கீழ் வரமாட்டார்கள். இதே காலகட்டத்தில் தான் மேலே சொன்ன 61% ஒயிட் காலர் பணியாளர்கள் பணிசார்ந்த மன அழுத்தத் தினால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்பதும், அதில் ஏழு சதவிகிதத்தினர் மரணமடைகின்றனர் என்பதும் கண்டறியப் பட்டுள்ளது.

அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள்

இந்த வகையான உடல்நலப் பாதிப்பையும் மரணத்தையும் தவிர்க்க வேண்டுமல்லவா? புளூ காலர் பணியாளர்களைவிட ஒயிட் காலர் பணியாளர்களைத் தீவிரமாக ஆராய்ந்தால், நிலைமையின் வீரியம் புள்ளிவிவரங்களைவிட அதிதீவிரமாக இருக்கிறது என்பது புரியும்.

வேகமாக வளர்ந்துவரும் மெடிக்கல் சர்வீஸ்  நிறுவனம் ஒன்றின் மூத்த ஃபைனான்ஸ் துறை பெண் பணியாளர் சொல்வதைப் பாருங்கள். “பணியிடத்தில் இருக்கும் எதிர்பார்ப்புகள் சாமான்யமாகப் பூர்த்தி செய்யக்கூடியவையாக இல்லை. அடிக்கடி இரவு முழுவதும் வேலை பார்க்கவேண்டியுள்ளது. அதனால் ஊக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. பலதடவை ஆல்கஹாலிக் டிரிங்க்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கடைசியில் எதற்கு இவ்வளவு பாடுபடவேண்டும் என்று நினைத்தால் ஊக்க மருந்துக்கும் ஆல்கஹாலுக்கும் அடிமையாக வேறு மாறிவிட்டேன். இறுதியாக மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் போதைகளிலிருந்து சிகிச்சை எடுத்து வெளிவந்தேன். உடனடியாக அந்த வேலையில் இருந்தும் வெளியேறினேன்” என்கிறார் அவர்.

டிவி நியூஸ் புரடியூசர் ஒருவர் சொல்கிறார்... “நிறுவனத்துக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்ட எங்கேயும் எப்போதும் போகத் தயாராக இருந்து பணி செய்தேன். வேளாவேளைக்கு சாப்பாடு, தூக்கம், உடற்பயிற்சி என்பது எள்ளளவும் இல்லாதுபோக, கிடைத்ததைச் சாப்பிட்டு, கிடைத்த நேரத்தில் தூங்கி நான் பெற்றது என்ன தெரியுமா? மிகவும் குறுகிய காலத்தில் 60 பவுண்ட் எடை கூடியதுடன்,  குடும்பத்தில் தகராறு வந்து விவாகரத்து ஆனது தான் மிச்சம்” என்கிறார்.

‘‘இந்தவிதப் பிரச்னைகளை ‘நிறுவனங்கள் உருவாக்கும் சமூக மாசுபாடு (social pollution)’ என்றார் ஒரு பேராசிரியர். அது மிக மிகச் சரியான சொற்பதம் என்பதை இன்றைக்கு நாம் உணர ஆரம்பித்துள்ளோம்’’ என்கிறார் ஆசிரியர்.

இதில் கொடுமை என்னவென்றால், இப்படி மன அழுத்தத்தைத் தரும்வகையில் நிறுவனங்கள் செயல்படுவதால் பணியாளர்களின் நலம் மட்டுமல்ல, நிறுவனங்களின் நலனும் பெருமளவு கெட்டுப்போகவே செய்கிறது என்கிறார் ஆசிரியர். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை  (Sustainability) குறித்து வாய்கிழிய பேசும் இந்த நிறுவனங்களில் பலவும் மனிதர்களின் நிலைத்தன்மை (Human sustainability) குறித்து கவலை கொள்வதேயில்லை. இது ஒரு தோல்வி-தோல்வி (lose-lose) சூழலையே பணியாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தருகிறது என்கிறார் ஆசிரியர்.

அதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம்! - அதிர வைக்கும் ஆய்வுகள்

லாபமில்லை என்று சம்பள உயர்வு தராமலும், குறைந்த கால அறிவிப்பில் பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தியும் உடனடியாகச் செலவைக் குறைக்க நினைக்கும் நிறுவனங்கள் அலுவலக வளாகத்தில் லேண்ட் ஸ்கேப்பிங் செலவை மட்டும் குறைவில்லாமல் செய்வதைப் பார்க்கிறோம். செடி கொடிக்குக் கிடைக்கும் மரியாதை மனிதனுக்கு இல்லையே என்ற எண்ணமே மேலோங்குகிறது என் மனதில் என்கிறார் ஆசிரியர்.

இதையெல்லாம் விடுங்கள். நிறுவனங்கள் உபயோகிக்கும் சொற்பதங்களைப் பார்த்தாலே மனிதனுக்கு என்ன மரியாதை என்பதும் அதில் உள்ள சூசகமான இரட்டை எதிர்மறை எண்ணங்களும் உங்களுக்குத் தெளிவாகப் புரியும். நிறுவனத்தின் பணியாளர்களை மனிதவளம் (Human resources), மனிதவள மூலதனம் (Human capital) என்று சொல்கின்றனர்.

அதேசமயம், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், ஆரோக்கியத்திற் கான வசதிகளைப் பணியாளர் களுக்கான விலை (Employee cost), பணியாளர் ஆரோக் கியத்திற்கான விலை             (Healthcare cost) என்கின்றனர். இதிலிருந்தே பணியாளர்களின் நிலை என்ன என்பது தெளி வாகப் புரிகிறது இல்லையா? என்று கிண்டலாகக் கேட்கிறார் ஆசிரியர்.

பணிக்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் கணவன், மனைவி, மகன், மகள் என்ற பாத்திரத்தைக் குடும்பத்தில் கொண்டவர்கள். அவர்கள் பணி முடித்து வீடு திரும்பும் போது அவர்கள் அந்தப் பாத்திரத்திற்கு ஏற்ற மன மற்றும் உடல்நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள் வது நிறுவன நிர்வாகத்தின் தார்மீக பொறுப்பு இல்லையா என்று காரசாரமாகக் கேட்கிறார் ஆசிரியர்.

சுற்றுச்சூழலைக் காப்பாற்ற இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. 2010-ம் ஆண்டில் அமெரிக்க நிறுவனம் ஒன்று, தன்னுடைய தற்போதைய தொழிலை விரிவாக்க இந்தந்த விஷயங்களைச் செய்யப்போகிறோம். அப்போது சுற்றுச்சூழல் இப்படியெல்லாம் பாதிக்கப்படும். அதைச் சரிசெய்ய இந்த விஷயங் களையெல்லாம் செய்யப் போகிறோம் என்று ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய ரிப்போர்ட்டைத் தந்து அனுமதி பெற்றது. விரிவாக்கத்தின்போது அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒருவருட காலம் விரிவாக்கம் நடைபெற்றது. விரிவாக்கத்தின் போது அங்கு ஏற்கெனவே பணியிலிருந்த பணியாளர்களின் நிலைமை என்ன, சம்பளம் தரப்படுமா என்பதைப் பற்றியெல்லாம் பெரிய அளவில் யாருமே கவலைப்படவில்லை.

2010 என்பது பெரியதொரு பொருளாதார சுணக்கத்திலிருந்து அமெரிக்கா மீண்டுவந்து கொண்டிருந்த காலம். வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடிய காலம். சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிற போது பணியாளர் பாதிப்புக்கான (Human Impact Report) அறிக்கை தரப்பட வேண்டாமா, மனிதன் அவ்வளவு கிள்ளுக்கீரையா, சுற்றுச்சூழல் காப்பாற்றப்படுவது மனிதனுக்காகத்தானே என்கிறார் ஆசிரியர்.

பணியிட நச்சு சூழ்நிலை, பணிநீக்கம் குறித்த மற்றும் பொருளாதாரரீதியான பயம், ஆரோக்கியக்குறைவின் தாக்கம், நீண்ட பணி நேரத்தால் விழையும் கேடுகள், ஆரோக்கியமான பணியிடச் சூழல் நிலவ உதவும் இரண்டு முக்கியக் காரணிகள், என்னதான் கடுமையான சூழலாக இருந்தாலும் பணியாளர் கள் தொடர்ந்து பணியில் இருப்ப தற்கான காரணம் போன்றவை அனைத்தையும் விலாவாரியாகச் சொல்லியுள்ள ஆசிரியர், என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவந்தால் இந்த நிலையை மாற்றமுடியும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பணம், பணம் என்று பணத்தைச் சுற்றியே நிறுவனங்கள் நடக்கின்றன. லாபமில்லை, அதனால் இத்தனை பேரை வேலையைவிட்டு அனுப்புகிறோம் என்று நிறுவனம் சொன்னால் சபாஷ் என்று முதலீட்டாளர்கள் கைதட்டுகிற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இத்தகைய நிறுவனங்களைத் தலைமையேற்று நடத்துபவர்கள் நிச்சயமாக இறுதிநாள்களில் படைத்தவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டியிருக்கும் என்று தத்துவார்த்தமாக முடிக்கிறார் ஆசிரியர்.

பணியிடச் சிக்கல்களும் அழுத்தங்களும் அளவுக்கு அதிகமாக அதிகரித்துவரும் கால கட்டத்தில், அதுகுறித்துத் தீவிரமாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்