அஜய் பங்கா, விக்ரம் பண்டிட், இந்திரா நூயி, சஞ்சய் ஜா, நிதின் நொஹோரியா, தீபக் ஜெயின், சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, சாந்தனு நாராயண், பத்மஸ்ரீ வாரியர் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி களாக இருப்பதுதான். எஸ் அண்டு பி 500 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளில் அமெரிக்கர்களை அடுத்து, அதிகமாக இருப்பது இந்தியர்கள்தான். இதற்குக் காரணம் இவர்கள் இந்தியாவில் வளர்ந்த சூழல் மற்றும் குடும்பங்களின் அமைப்புதான் எனக் கூறுகிறது ‘தி மேட் இன் இந்தியா மேனேஜர் (The Made in India Manager)’ என்னும் புத்தகம்.

டாடா சன்ஸ் இயக்குநர் குழு உறுப்பினரான ஆர்.கோபாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் & ரிசர்ச்-ன் டீன் ரஞ்சன் பானர்ஜி ஆகிய இருவரும் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கின்றனர். இந்தப் புத்தகத்தின் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்தப் புத்தகம் குறித்து புத்தகத்தின் ஆசிரியர்கள் இருவரும் கூறியதன் சுருக்கம் இனி...

எப்போதும் தயாராக...

“ இந்தியாவுக்கென சில பிரத்யேக தன்மைகள் உள்ளன. இந்தத் தன்மைகள் அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது, அதற்கென பிரத்யேகமான திறன் உருவாகிறது. இந்தியாவில் போட்டி அதிகமாக இருக்கிறது. அதனால் இந்தியாவில் இருப்பவர்கள் எப்போதும் போட்டிக்குத் தயாராகவே இருப்பார்கள். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் சேருகிறவர்களைவிட, அதற்கான போட்டியில் பங்கெடுப்பவர்கள் பலமடங்கு அதிகம். அதைவிட வங்கித் தேர்வு என்றால்கூட பலமடங்கு போட்டிகளுக்குப் பிறகுதான் வேலை கிடைக்கிறது. அதனால், போட்டியும், அதற்குத் தயார்படுத்துதலும் முக்கியம்.

ஐ.ஐ.எம்-க்கு தயார் செய்பவர்களுக்கு ஐஐஎம்-ல் இடம் கிடைக்காமல் போகலாம். ஆனால், லண்டன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸில் இடம் கிடைக்கும். இதில், ஆச்சர்யப்பட ஏதும் இல்லை என்பதே எங்களின் எண்ணம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதாக இருந்தால்கூட சில மாதங்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும். இந்தத் திட்டமிடல்தான் இந்திய மேனேஜர்களை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்கிறது.
அடுத்தது பிளான் பி. இந்தியர்கள் எப்போது ஒரே விஷயத்தில் தேங்கிக்கொள்ள மாட்டார்கள். ஒரு விஷயம் நடைபெறவில்லை எனில், அடுத்த மாற்று என்ன என்பது குறித்தும் திட்டமிடுவார்கள். இங்கிருக்கும் போட்டி சூழலால் நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்பதையே அது காட்டுகிறது.

கற்றுத்தந்த குடும்பங்கள்

இந்தியர்களின் வெற்றிக்குப் பின்னால் அவர்களின் குடும்பங்கள் உள்ளன. கல்வியால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கு செல்ல முடியும் என்பதைச் சொல்லிசொல்லி வளர்க்கப் படுகிறார்கள். கல்வி மட்டுமல்ல, விளையாட்டு உள்ளிட்ட எந்தத் துறையில் சாதித்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குப் பின்னால் குடும்பம் என்னும் அமைப்பு இருக்கும்.

இந்தியாவில் வெற்றியடைந்த பத்தில் எட்டு நபர்களுக்கு குடும்பத்தின் பங்களிப்பு இருக்கும். ஒவ்வொரு நிறுவனங்களிலும் வேல்யூ ஸ்டேட்மென்ட் என எழுதப்பட்டிருக்கும். நம் குடும்பங்களில் இப்படிப்பட்ட ஸ்டேட்மென்ட் இல்லையென்றாலும், அவை பயிற்றுவிக்கப் பட்டிருக்கும். வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு அவர்கள் குடும்பங்களில் இருந்து ரோல் மாடல்கள் 20% இருந்தாலே அதிகம். ஆனால், இந்தியாவில் 80 சதவிகிதக் குழந்தைகளுக்கு குடும்பங்களில்தான் ரோல் மாடல்கள் இருப்பார்கள்.

பிரச்னையும் தீர்வும்

பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் மேனேஜ்மென்ட். இந்தியாவில் தினசரி பிரச்னைகளுடனே நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் வளர்பவர் களுக்குத் தீர்வு கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் கிடையாது. உதாரணத்துக்கு, சில பல ஆண்டு களுக்கு முன்பு கொல்கத்தாவில் எட்டு மணி நேரம் அளவுக்கு மின்சாரம் இருக்காது. ஆனால், எந்த எட்டு மணி நேரம் என்பது தெரியாது. இந்தச் சூழலில்தான் இந்தியர்கள் வளர்கிறார்கள். அதனால் இந்திய மேனேஜர்களுக்கு பிரச்னைகளைத் தீர்ப்பது என்பது இயல்பாக இருக்கிறது.

அதேபோல பல கலாசார/ சமூகங்களுடன் இந்தியர்களான நாம் வாழ்ந்து வருகிறோம். அதாவது மாற்று கலாசாரத்தைப் புரிந்து அவர்களுடன் இணைந்து செயல் படுகிறோம். இது பணிச்சூழலில் இந்திய மேனேஜர்களுக்கு உதவியாக இருக்கிறது. அதனால்தான் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளின் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் உயரதிகாரிகள் இங்குள்ள சூழலைப் புரிந்துகொள்ளச் சிரமப்படுகிறார்கள்.

போட்டிகளை எதிர்கொள்ளும் திறமை, குழப்பமான சூழ்நிலைகளைக் கையாளுதல், குடும்பத்தின் பங்களிப்பு, இந்திய சமூகத்தில் வாழ்ந்திருத்தல், ஆங்கிலம் உள்ளிட்ட பல காரணங்களால் இந்திய மேலாளர்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இந்தக் காரணங்களில் ஒன்றிரண்டு வெவ்வேறு நாடுகளிலும் இருக்கலாம். ஆனால், இவை அனைத்தும் ஒருங்கிணையும்போதுதான் ஒரு மாற்றம் நிகழ்கிறது.

யார் இந்திய மேனேஜர்கள் என்னும் கேள்வி வரும். இந்தியாவில் வளர்ந்து, இந்தியாவில் கல்வி கற்று இந்திய சூழ்நிலைகளுடன் வாழ்பவர்களை மட்டுமே இந்திய மேனேஜர்கள் என்று அழைக்க முடியும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் குழந்தைகளை அப்படி அழைக்க முடியாது.

அடுத்த தலைமுறை

எப்போதுமே அடுத்த தலைமுறை அவ்வளவு சிறப்பாக இல்லை என்னும் எண்ணம் இயல்பாகவே நமக்கு இருக்கிறது. ஆனால், அடுத்த தலைமுறையில் இன்னும் அதிக அளவில் மேட் இன் இந்தியா மேனேஜர்கள் உருவாகி வருவார்கள். இப்போதைய மேனேஜர்கள் அவர்களாக உருவானவர்களே. அடுத்த தலைமுறையினர் சர்வதேச அளவிலான வெற்றிகளைப் பெற தொடங்கியிருக்கிறார்கள். வளரும் தலைமுறை இன்னும் அதிக உயரத்துக்குச் செல்லும்.

சில தலைமுறைகளுக்கு முன்பு மொகஞ்சதாரோ நாகரிகம் குறித்துத் தெரியாது. ஆனால், தற்போது அவை குறித்துத் தகவல் கள் மூலம் நாம் தெரிந்து கொண்டி ருக்கிறோம். அதுபோன்ற ஒரு தொடக்கமாக இந்திய மேனேஜர்கள் குறித்து நாங்கள் எழுதியிருக்கிறோம். மொகஞ்சதாரோ நாகரிகத்தை உலகம் அறிந்துகொண்டதைப்போல வரும் காலத்தில் இந்திய மேனேஜர்கள் என்னும் சமூகம் சர்வதேச அளவில் மிளிரும் என நம்புகிறோம்” என்றார்கள் அவர்கள்.

சூப்பர் பவர் மேனேஜர்களை உருவாக்குவதில் இந்தியா கில்லியாக இருப்பது நமக்குப் பெருமைதான்!

படங்கள் : ப.சரவணகுமார்