Published:Updated:

கதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை! - தீபா கிரண்

கதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை! - தீபா கிரண்
பிரீமியம் ஸ்டோரி
கதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை! - தீபா கிரண்

கலை வித்தகி

கதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை! - தீபா கிரண்

கலை வித்தகி

Published:Updated:
கதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை! - தீபா கிரண்
பிரீமியம் ஸ்டோரி
கதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை! - தீபா கிரண்

லகளவில் கதை சொல்லும் கலையில் பிரபலமானவர்களில் ஒருவர், தீபா கிரண். இரானில் நடைபெற்ற சர்வதேச கதை சொல்லும் திருவிழாவில் கலந்துகொண்ட முதல் இந்தியப் பெண் என்கிற பெருமைக்குரியவர். இவர் தமிழ்ப் பெண் என்பது, நமக்கான கூடுதல் பெருமை. ஹைதராபாத்தில் வசிக்கிற தீபாவுக்கு, உரையாடலின்போதுகூட கண்கள் கதை பேசுகின்றன!

‘`சென்னையில் பிறந்தேன். தி.நகரில் எங்கள் வீடு. என் அப்பாவும் தாத்தாவும் விகடன் வாசகர்கள். அப்படி ஆர்வமாக அதில் என்ன படிக்கிறார்கள் என்று அதைப் புரட்டியபோது, கதைகள் என் கைகளுக்கும் வந்தன. அப்பா நிறைய கதைகள் சொல்வார். என் அம்மாவுக்குப் பூர்வீகம் பாலக்காடு. பல வருடங்கள் மேற்குவங்கத்தில் வசித்தேன். அதனால் தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், பெங்காலி உட்பட பல மொழிகள் தெரியும்’’ என்கிறவர், தான் கதைசொல்லியான தருணத்தைப் பகிர்கிறார்.

கதை சொல்லத் தெரிந்தால் அரசு வேலை! - தீபா கிரண்

‘`2008-ம் ஆண்டு நாசிக் நகரில் முதன்முதலில் ‘ஸ்டோரி டெல்லிங்’ கோடை முகாமை நடத்தினேன். சிறுவயதில் என் அப்பாவிடம் முறைப்படி பயின்ற பரத நாட்டியம் மற்றும் வீணை, நடனக் கலைஞர்களுக்கே உரிய நளினத்துடன் முகத்தில் பல்வேறு பாவங்களைக் காட்டி, அதை இசையுடன் கோத்துக் கதைகளைச் சொல்ல எனக்கு உதவியது. புதியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வமும், இயற்கையிலேயே அமைந்திருந்த படைப்பாற்றலும் என் முயற்சியில் எனக்குக் கைகொடுத்தன. கதையின் போக்கில் குழந்தைகளில் சிலரை மேடைக்கு அழைத்து, அவர்களையும் கதாபாத்திரங்களில் ஒருவராகப் பங்கு பெறச் செய்தேன்’’ என்கிற தீபா சொல்லும் தெனாலிராமன் கதைகள், மிகப் பிரபலமானவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`கதை சொல்லும்போது, அந்தக் கதையின் சாரம், அதைக் கேட்பவர்கள், கதை சொல்லும் இடம் என அனைத்தும் முக்கியம். புராணக் கதைகளில் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்த பெரும் புலவர்களின் கதைகளை ‘ஹரிகதா’ பாணியில் சொன்னபோது வயதானவர்களும் ரசித்துக் கேட்டனர். இசையால் உலகை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

வியட்நாம் மற்றும் இரான் நாடுகளில் கதை சொல்லியிருக்கிறேன். இரான் நாட்டு வரலாற்றில் ஏராளமான கதைகள் விரவிக் கிடக்கின்றன. அந்த நாட்டு அரசாங்கம் கதை சொல்வதற்கென்றே பலரைப் பணிக்கு அமர்த்துகிறது. அவர்களுக்கு உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் அளிக்க, பெரும் தொகையை ஒதுக்குகிறது’’ என்று ஆச்சர்யப்படுத்துகிற தீபா, கதை சொல்லும் பழக்கத்தை வலுப்படுத்த தான் எடுத்திருக்கும் முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டார். 

‘`2013-ல் ‘Royal Mistake’ என்ற கதைப் புத்தகத்தை ஆடியோவுடன் வெளியிட்டேன். நம் பாரத நாட்டு கலாசாரத்தையும் பண்பாட்டையும் கதைகள் மூலம் காக்கும் முயற்சியாக, ‘Story Arts India Hyderabad’ என்ற அமைப்பை உருவாக்கினேன். ஆசிரியர்கள் வகுப்பறைகளில் கதை சொல்வதை வலியுறுத்தும்விதமாக, அவர்களுக்குப் பிரத்யேக பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறேன்’’ என்கிறவர்,

‘`கதை சொல்லும்போது, தெளிவான உச்சரிப்புடன் பாடல்களையும் இடையே சேர்த்து, கை, கால், கண் என உடலையும் பேசச் செய்து, கதைக்கு நடுவே கேள்விகளைக் கேட்டு,  குழந்தைகள் யோசிப்பதற்குப் போதுமான நேரம் ஒதுக்கிக் கதை சொல்லும்போது... அந்த மழலைகளின் முகத்தில் தெரியும் ஆர்வமும் மகிழ்ச்சியும்தான் இந்தக் கதைசொல்லிக்கு டானிக்!” - புன்னகை பிரியாமல் சொல்கிறார் தீபா கிரண்.

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism