தொடர்கள்
Published:Updated:

கனவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்

கனவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்
பிரீமியம் ஸ்டோரி
News
கனவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்

இரா.சின்னசாமி, ஓவியம் : ரமணன்

கனவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்

றக்கம் வருவதற்குமுன்பே ஓடிவந்து

கனவுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்


இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன
வேண்டாதவன் வீட்டுக்குள் நுழைந்தபோது
பிடரியில் கைவைத்து
வெளியே தள்ளப்பட்டு;
நிலைதடுமாறி விழப்போய்
எழுந்து நிற்பதைப்போல்
வாசலில் அலைந்து நிற்கிறது உறக்கம்.
கனவு புகுந்த இடம் இருட்குகை
வயிற்றுக்குக் கொள்ளமுடியாத
பெருந்தீனியை விழுங்கிவிட்ட
நீண்டு பெருத்த மலைப்பாம்பு
பாறைக்கடியில்
சருகுக் குவியலுக்கிடையே நெளிகிறது
அவனால் உதறமுடியவில்லை
எங்கே உடலைச் சூழ்ந்து
கழுத்தைச் சுற்றி முகத்துக்குமுன்
கொத்துவதற்குத் தோதாய்
தலைநீட்டிவிடுமோவென்ற அச்சம்
போர்வை ஏன் இப்படி
அடைபட்ட அறைக்குள்
ஊதப்பட்ட சாம்புராணிப் புகையென
மிதந்துகொண்டிருக்கிறது.
குட்டைக்கு வந்துசேரும்
மழைக்காலச் செந்நீர்ப் பாதைகளென
ஏனிந்தக் கைகளும் கால்களும்
நீண்டு கிடக்கின்றன
எழுந்து நின்று நளினம்புரிய
அவளுக்கு மட்டும் எப்படியொரு
தாமரை கிடைத்தது
பிரவகித்து வந்து ஓசையெழுப்பிச் செல்லும்
பெருவெள்ளத்தினை
தரைப்பாலத்தில் நின்று
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்.
மலைப்பாம்பின் வயிறு கிழிகின்றது.
பொன்முலாமிட்ட குழி மேடுகளாலான
செங்கோலொன்று பலவண்ண
மினுமினுப்புகளோடு தீப்பந்தமாய்
எழுந்து நிற்க
தூறல்களைப் பாதங்களால் அள்ளிக்கொண்டு
பெருங்காளானென
வளர்ந்துகொண்டிருக்கிறான்.