Published:Updated:

சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி!

சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி!
பிரீமியம் ஸ்டோரி
சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி!

நாணயம் புக் செல்ஃப்

சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி!

நாணயம் புக் செல்ஃப்

Published:Updated:
சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி!
பிரீமியம் ஸ்டோரி
சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி!

ரு நிறுவனம் லாபம் சம்பாதிக்கத் திணறுகிறது என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு முக்கியமான காரணம், ஊழியர்கள் முழுச் சுதந்திரம் இல்லாமல், முழுப் பொறுப்பு உணர்வுடன் செயல்பட முடியாமல் இருப்பதாகும். ஊழியர்களுக்கு எப்படி முழுச் சுதந்திரத்தைத் தந்து, முழுப் பொறுப்பு உணர்வுடன் நடந்துகொள்வது என்பதைச் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் தலைமைப் பணியாளர் திறன் அதிகாரியாகப் (Chief Talent Officer) பணியாற்றிய மெக்கார்ட் என்கிற பெண்மணி இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். ‘பவர்ஃபுல்’ என்கிற இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் உண்மையிலேயே பவர்ஃபுல்லாக இருக்கிறது.

சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி!

‘‘நெட்ஃபிளிக்ஸைப் பொறுத்தவரை நிர்வாகம் பணியாளர்களிடம் கடைப்பிடித்த தீவிரமான நேர்மை என்பதே வெற்றிக்கு அடிப்படையான ஒன்றாக இருந்தது. 20-ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டு கடைப்பிடிக்கப்பட்ட பணியாளர் மேலாண்மை குறித்த விஷயங்கள் எதுவுமே 21-ம் நூற்றாண்டிற்கு எள்ளளவும் பொருந்தாது என்பதை நாங்கள் முதலில் தெளிவாகக் கண்டறிந்தோம். பணியாளர்கள் சக்திமிக்கவர்கள். அவர்களுடைய சக்தியை முழுவதுமாக உபயோகிக்க/பிரயோகிக்க அனுமதிக்க வேண்டும் என்பதை முதலில் நாங்கள் உணர்ந்துகொண்டோம். பணியாளர்கள் எங்களுக்கும் உடன் பணிபுரிவர் களுக்கும் சவால்களை விடுக்கவேண்டும். பணியாளர்கள் தங்களின் ஐடியாக்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், நிர்வாகத்திடமும் உடன் பணிபுரிபவர்களிடமும் சர்வசாதாரணமாக தர்க்கம் செய்ய முடிகிற மாதிரியான சூழ்நிலையை உருவாக்கவேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை, யாருமே எந்த ஒரு பிரச்னையையோ,  முக்கியமான நுண்ணறிவையோ (Insights) மற்றவர்களிடம் பகிராமல் இருக்கக்கூடாது என்பதே குறிக்கோளாக இருந்தது. நிர்வாகத்தில் உயர்பதவியில் இருப்பவர்கள் அனைத்துப் பணியாளர்களுடனும் தொடர்பில் இருந்தோம். அனைவராலும் எங்களைக் கேள்வி கேட்கவும் முடியும்; கருத்துக்களைச் சொல்லவும் முடியும் என்ற நிலையில் வைத்திருந்தோம். இதற்கு ஒருபடி மேலேபோய், பணி யாளர்கள் மத்தியில் திட்டமிட்ட விவாதங்கள் எல்லாம் நடத்தியிருக்கின்றோம்.

நெட்ஃபிளிக்ஸைப் பொறுத்தவரை, அலுவலக நடைமுறைகள் எல்லாம் அடிப்படையிலிருந்து புதியதாக எழுதப்பட்டது என்று நினைக்காதீர்கள். நாங்கள் நடைமுறைக்கு எதிர்மறையான விஷயங்களைச் செய்ய ஆரம்பித்தோம். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறையில் இருந்து விலக்கிக்கொண்டே வந்தோம். ஒரு விஷயம் எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. நடைமுறையிலிருக்கும் குழுக்களை உருவாக்குவது, நிர்வகிப்பது குறித்த நடைமுறைகள் அனைத்தும் மொத்தமாகக் காலாவதியான ஒன்று என்பதுதான் அது. ஏனென்றால், இன்றைக்கு இருக்கும் இன்னோவேஷன் மற்றும் டிஸ்ரப்ஷனின் வேகத்திற்கு இந்த நிர்வாக நடைமுறைகள்  ஈடுகொடுக்காது என்பதே உறுதியான ஒன்றாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி!

இதனாலேயே நாங்கள் எங்களுடைய நிறுவனத்தில் பின்வரும் விஷயங்களைத் திட்ட வட்டமாகக் கடைப்பிடிக்க முடிவு செய்தோம்.

* பணிபுரிபவர்கள் அனைவரும் தாங்கள் செய்யும் வேலையில் இருக்கும் சவால்கள் குறித்து, தங்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் தெளிவான தொடர்ச்சியான தொடர்பு (Constant communication) இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* பணியாளர்கள்  முழுமை யான நேர்மையுடன் செயல்பட வேண்டும். உள்ளதை உள்ளபடி அனைவரிடத்தும்  காலதாமதம்  இல்லாமல் ஒளிவு மறைவின்றி சொல்லவேண்டும்.

* பணியாளர்கள்  தங்களிடம் இருக்கும் உண்மையான தகவலின் அடிப்படையிலான அபிப்ராயங்களைத் தைரியமாக வாதிடத் தயாராக இருக்க வேண்டும்.

* பணியாளர்கள்  நிறுவனத்துக்கும் வாடிக்கை யாளர்களுக்கும் பயனளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, தாங்கள் நினைத்ததோ, சொல்லியதோ சரி என்பதை நிரூபிப்பதற்கான நடவடிக்கை களை எடுக்கக் கூடாது.

* பொதுவாக ஒரு வெற்றியில் நம்முடைய பங்கும் இருக்கிறது என்பதே சிறந்ததொரு ஊக்க சக்தியாக இருக்கும் என்பதை நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனாலேயே ஒரு குழுவில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் சவால்களை எதிர்கொள்வதில் நம்முடைய பங்களிப்பும் இருக்கிறது என்பதை உணரும்வண்ணம் குழுக்கள் செயல்படவேண்டும். நாம் இதைச் செய்து முடித்தால் வெற்றி என்பதை முழுமையாக உணர்ந்த குழுவே வெற்றிக்கு வழிவகை செய்யும். இதுபோன்ற குழு அமைய சட்டம், பாலிசி, நடைமுறை, அனுமதி போன்ற எதுவுமே இடையூறாக அமைந்துவிடாமல் இருக்க நிர்வாகம் வழிவகை செய்யவேண்டும்’’ என்கின்றார் ஆசிரியை.

மேலும், நிறுவனத்தில் பணியில் இருக்கும் அனைத்துப் பணியாளரும் நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது என்றும், அதில் வெற்றிக்கு வழிவகை செய்ய என்னென்ன விஷயங்களைத் தாங்கள் செய்யவேண்டும் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.

‘‘நிறுவனத்தின் செயல்பாடு குறித்து உண்மையான தகவல்கள் அனைவருக்கும் தரப்பட வேண்டும். அவர்களுக்கு அந்தத் தகவல் தேவையானது மட்டுமல்ல, அவர்கள் எதிர்பார்ப்பதும் அதுவேயாகும்.  இதில் உண்மையும் வெளிப்படைத் தன்மையும் எந்த அளவிற்கு இருக்கிறதோ, அந்த அளவிற்கு பிரச்னைகளும் முதுகில் குத்துதலும் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

உதாரணத்திற்கு, உங்களுடைய வேலை எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என்பதை ஒரு பணி யாளரிடம் நேரிடையாகச் சொல்ல முடியாவிட்டால் அநாவசியமாக அவருடைய திறமையின்மையை அந்த நிர்வாகி தன்னுடைய தோளில் சுமக்க வேண்டியிருக்கும் இல்லையா’’ என்று கேட்கிறார் ஆசிரியை.

‘‘நிறுவன செயல்பாட்டில் எடுக்கும் வியாபார முடிவுகளைத் தேவையான அளவிற்கு விவாதியுங் கள். அப்படி விவாதம் செய்யும்போது பல்வேறு விஷயங்கள் அனைவருக்கும் புரியவரும். சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து விவாதம் செய்வதே எங்களுடைய அனுபவத்தில் சிறந்ததாக இருக்கிறது.

சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி!

நல்ல திறமையான மேலாளர்களைப் பணியில் அமர்த்துவதே ஒரு நிறுவனத்தின் தலையாய கடமையாகும். ஒரு குழுவானாலும் சரி, நிறுவன மானாலும் சரி, தொடர்ந்து சரியான திறமையுள்ள ஆட்களை தங்களிடத்தே சேர்த்துக்கொண்டே இருப்பதே அதன் வெற்றிக்கு வழிவகுக்கும். எங்கள் குழுவில் பல ஆண்டுகளாக பலபேர் இருக்கிறார்கள் என்பது மட்டுமே ஒரு சிறந்த குழுவிற்கான வழிவகையைச் செய்யாது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இந்த வேலைக்கு இந்த சம்பளம் என்பதை விட்டு, இந்த திறமைக்கு இந்த சம்பளம் என்ற நடைமுறைக்கு வந்துவிடுவது நல்லது. எல்லாப் பணியாளர்களுக்கும் இது சாத்தியமில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட லெவலுக்கு மேலே உள்ளவர்களுக்காவது இதுபோன்ற சம்பள நடைமுறையைக் கொண்டு வருவதே நல்லது’’ என்கிறார் ஆசிரியை.

இறுதியாக, ‘குட் பை’ எப்படிச் சொல்வது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். ஆண்டுக் கொரு முறை பணியாளர்களின் திறனைச் சீர்தூக்கிப் பார்ப்பது என்ற நடைமுறையை முடிந்தால் கைவிடுங்கள் என்று சொல்லும் ஆசிரியை, இது ஒரு நேரத்திற்குப் பிடித்த கேடு என்று சொல்கிறார்.

அன்றாடப் பணியில் தெரியாத ஒன்றும் இதில் தெரிந்துவிடப் போவதில்லை. திறமையை வளர்த்துக்கொள்ள மனதார்ந்த வாய்ப்புகளைக் கொடுங்கள். அப்படிக் கொடுத்த வாய்ப்புகள் சரியாக பயன்படுத்தப்படாவிட்டாலோ அல்லது அவை சரிவர பலனளிக்காமல் போனாலோ அந்த நபர்கள் வேறுவேலை தேடிக்கொள்ள நிர்வாகிகளே உதவி செய்வதே நல்லது. நமக்கு உதவாதவர் உலகுக்கே உதவாமல் போகிறவர் அல்ல. பல சமயம் ‘குட் பை’கூட மிக நல்ல ஒரு விஷயமே’’ என்று முடிக்கிறார் ஆசிரியை.

போட்டி நிறைந்த இன்றைய உலகில், இன்னோவேஷனும் டிஷ்ரப்ஷனும் பெருமளவில் தொழில்களை பாதித்துவரும் இந்த சூழ்நிலையில், பெருவெற்றி பெற்ற நிறுவனம் ஒன்றில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளை இலகுவாய் விளக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.

- நாணயம் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism