Published:Updated:

வினோபாவின் தியானம்!

வினோபாவின் தியானம்!
பிரீமியம் ஸ்டோரி
வினோபாவின் தியானம்!

வினோபாவின் தியானம்!

வினோபாவின் தியானம்!

வினோபாவின் தியானம்!

Published:Updated:
வினோபாவின் தியானம்!
பிரீமியம் ஸ்டோரி
வினோபாவின் தியானம்!

பர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியடிகளுடன் தங்கியிருந்த ஆச்சார்ய வினோபாபாவே, எவருடனும் அளவுக்கு அதிகமாகப் பேசமாட்டார்; தானுண்டு தனது வேலையுண்டு என்று இருப்பார். ஓய்வு நேரங்களில் பகவத் கீதை படிப்பார்.

ஒரு நாள், சபர்மதி ஆஸ்ரமத்துக்கு ஆச்சார்ய கிருபளானி வந்தார். காந்திஜியைச் சந்தித்த அவர், ``பாபுஜி, தியானம் என்றால் என்ன?'' என்று கேட்டார்.

வினோபாவின் தியானம்!

உடனே, ``வாசலில் உட்கார்ந்திருக்கிறார் பார், வினோபா. அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்'' என்றார் காந்திஜி.

வாசலுக்கு வந்த கிருபளானி, வினோபாவை பலமுறை அழைத்தும் அவர் கண்டுகொள்ள வில்லை. கிருபளானி தன்னை அழைப்பதைக் கவனியாமல், பகவத் கீதை படிப்பதில் மும்முரமாக இருந்தார் வினோபாஜி.

இதனால் கிருபளானி சலிப்படைந்தார். அவர் மீண்டும் காந்திஜியிடம் சென்று, ``நான் வந்ததையே வினோபாஜி கண்டுகொள்ளவில்லை. நான் அழைப்பதைக்கூடக் கவனிக்காமல், படித்துக்கொண்டே இருக்கிறார்!'' என்றார்.

காந்திஜி புன்சிரிப்புடன் சொன்னார்... ``தியானம் என்றால் என்னவென்று கேட்டாயே, அது இதுதான். மனத்தில் சிறிதுகூட சஞ்சலம் ஏற்படாமல், கவனத்தை ஒரே விஷயத்தில் செலுத்தியிருக்கிறாரே, அதுதான் தியானம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கே.கண்ணன், கோவை-2 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism