உங்களுடைய பிசினஸிற்காகப் பயன்படும் புத்தகங்களைப் புத்திசாலித்தனமாக, திட்டமிட்டு எழுதுவது எப்படி? இதுகுறித்துச் சொல்லித் தருகிறது அலிசன் ஜோன்ஸ் எனும் பெண்மணி எழுதிய ‘திஸ் புக் மீன்ஸ் பிசினஸ்’ என்னும் புத்தகம்.

‘எந்தப் புத்தகம் உங்களுடைய வாழ்க்கையை அதிரடியாக மாற்றியமைக்கும் என்றால், அது நீங்கள் எழுதப்போகும் உங்களைப் பற்றிய உங்களுடைய புத்தகம் தான்’ என்ற சேத் கோடின் என்பவரின் பொன்மொழியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

புத்தகம் எழுதிப் பணக்காரராக முடியுமா என்ற கேள்வியைக் கேட்கும் நபர்கள் அனைவருக்கும், ஒரு டாலரைத் தரும் அளவுக்கு என்னிடம் பணம் இருந்தால், நான் அவர்கள் அனைவருக்குமே புத்தகம் எழுதுவதன் மூலம் பணக்காரராக முடியும் என்பதை உணர்த்தும் வண்ணம் ஒரு டாலரைக் கொடுப்பேன் என்கிறார் ஆசிரியை.

புத்தகம் எழுதி விற்று, பணக்காரராக வேண்டும் என்பதைவிட, புத்தகம் எழுதுவதற்குத் தேவையான அதிமுக்கிய காரணங்கள் பல இருக்கின்றன. மில்லியன்கள் எண்ணிக்கையில் விற்கும் ஆசிரியர்களும், புத்தகத்திற்கான முன்பணமாக ஆறு இலக்க அட்வான்ஸ் தொகையைப் பெறும் ஆசிரியர்களும் இருக்கவே செய்கின்றனர்.

ஆனால், அவர்கள் ஒரு சிலரே என்பதை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அதனால் பணத்தை ஒரு இலக்காக வைப்பதை விட்டுவிட்டு, உங்களால் சில விஷயங்களைச் சொல்லி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்றால், நீங்கள் ஒரு பாரம்பர்யத்தை மக்களுக்கு விட்டுச்செல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் சீட்டில் அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்து டைப் செய்ய ஆரம்பியுங்கள் என்று ஊக்கப்படுத்துகிறார் ஆசிரியை.

வெறுமனே வெற்றுக் காகிதமாக இருக்கும் உங்கள் வாழ்க்கை நீங்களே சற்றும் எதிர்பாராதவிதமாக அமேசான் வரை சென்று, அதையும் தாண்டி ஆச்சர்யமளிக்கும் பயணத்தைச் செய்ய வாய்ப்புள்ளது. அதிலும் நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருந்தால் இதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்றே சொல்லலாம்.

இந்தப் புத்தகம் நான்கு பிரிவாக எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தின் மூலம் உங்களுடைய வியாபாரத்தை வளர்ப்பது, உங்களுக்கான சரியான மேடையை அமைத்துக் கொள்வது, உங்களுடைய நெட்வொர்க்கை வளர்த்துக் கொள்வது மற்றும் உங்களை வளர்த்துக்கொள்வது என்பதே அந்த நான்கு பிரிவுகள்.

உங்களுடைய பிசினஸ் என்பது உங்களின் ஆர்வத்தை யும், தனித் தன்மையையும் பொருளாதார ரீதியாக உலகுக்குக் காட்டுவதாகும். கதாசிரியர்களுக்கும் ஏனைய கற்பனையல்லாத கதைப் புத்தகங்கள் எழுதும் ஆசிரியர்களுக்கும் புத்தகம் என்பது ஒரு இறுதியான விற்பனைப் பொருள் என்பதைத் தவிர வேறேதுமில்லை. ஆனால், பிசினஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எழுதுபவர்களுக்கோ புத்தகம் என்பது வேறு மாதிரியான சக்தியைக் கொண்டு வருவதாகும்.

ஒரு பிசினஸ் புத்தகம் எப்போது வெற்றி பெறுகிறது என்றால், அதில் சொல்லப்பட்டி ருப்பவற்றை நடைமுறைப்படுத்தி தொழில்கள் வெற்றிஅடையும்போதுதானே! இதனாலேயே பிசினஸ் குறித்த புத்தகங்கள் எழுதுபவர்களுக்குப் பணத்தைத் தாண்டிய பல்வேறு பெருமைகள் வந்துசேர்கின்றன என்கிறார் ஆசிரியை.

பல்வேறு அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளில் பேச அழைப்புகள் வரவும், நீங்கள் பேசுவதை அனைவரும் கவனத்துடன் காதுகொடுத்துக் கேட்கவும் நீங்கள் எழுதிய புத்தகமே அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறது. கூட்டத்திலிருந்து விலகி, தனி ஒருவனாக சிகரம் தொட உங்களுக்கு நீங்கள் எழுதிய புத்தகம் உதவியாக இருக்கும்.

அடுத்தபடியாக, உங்களுடைய நெட்வொர்க்கை வளர்த்துக்கொள்ள புத்தகம் கைகொடுக்கிறது. எந்தவொரு தொழில்முனைவோருக்கும் தங்களுடைய நெட்வொர்க்கே சிறந்த மூலதனமாக இருக்கிறது. அவர்களுடைய வாடிக்கை யாளர்கள், அவர்கள் இருக்கும் சோஷியல் மீடியாவில் அவர்களைப் பின்தொடர் பவர்கள், அவர்களுடைய இ-மெயில் லிஸ்ட்டில் இருப்பவர்கள் என அவர்களுடைய நெட்வொர்க்கே அவர்களுக்குப் பெரும்பாலான சமயம் கைகொடுப்பதாக அமைகிறது. அதேசமயம், தொழில்முனைவோருக்கு தொடர்ந்து நெட்வொர்க் விரிவாக்கம் என்பது தேவைப் பட்டுக்கொண்டே இருக்கிறது.

தொழில்முனைவோர் ஒருவர் புத்தகத்தை எழுதி வெளியிடும்போது இந்தவித புதிய நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்து கொள்வது சுலபமான ஒன்றாகிறது. உங்கள் புத்தகங்களைப் படிப்பதன்மூலம் உங்களைப் புதியவர்கள் புரிந்துகொண்டு உங்களுடன் நெட்வொர்க் செய்துகொள்ளுதல் என்பது சுலபமானதாக இருக்கும். இவர்களில் பலரும் வெறுமனே சாதாரண நபர்கள் என்றில்லாமல், உங்களின் எதிர்கால வாடிக்கையாளர்களும், நீங்கள் செயல்படும் துறையில் பிரசித்தி பெற்றவர்களும் இருக்க வாய்ப்புள்ளது.

உங்களுடைய புத்தகத்தில் நீங்கள் சொல்லும் கருத்துகள் உங்களுக்கு அருமையான நெட்வொர்க்கை அமைத்துத்தர நல்லதொரு வாய்ப்புள்ளது என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை. மேலும், இந்தப் பிரிவில் எப்படி புத்தகத்தின் மூலம் நெட்வொர்க்கை வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் சொல்லியுள்ளார்.

கடைசிப் பிரிவில் ஆசிரியை, புத்தகம் எழுதுவதன் மூலம் உங்களை நீங்களே செம்மையாக்கிக்கொள்வது எப்படி என்பதைச் சொல்கிறார். எழுதுதல் என்பது உங்களுடைய சிந்தனைத்திறனை சீர்படுத்த வல்லது. தெளிவாகச் சிந்திக்க வைப்பது, புதுப்புது ஐடியாக்களை உங்களுக்குள் கொண்டு வரவல்லது. அதனால் நீங்கள் ஒரு தொழில்முனைவோராக புத்தகம் எழுதினால் உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சியும் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார் ஆசிரியை.

அடுத்ததாக, புத்தகம் எழுதுவது எப்படி என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியை. ஏனென்றால், தொழிலதிபர்கள் ஒரு புரஃபஷனல் எழுத்தாளர் களாக இருக்கத் தேவையில்லை என்று சொல்லும் ஆசிரியர், எழுதும் கலையில் இருக்கும் சூட்சுமங்களையும், தள்ளிப் போடாமல் திட்டமிட்டபடி எழுதி முடிப்பது எப்படி என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியை.

புத்தகமா, நானா என்றெல்லாம் எந்தவித பயமும் கொள்ளாதீர்கள். பலரும் இந்தப் பயத்துடனேயே இருக்கின்றனர் என்பது வேறு விஷயம். எழுத முடியாமல் போய்விடுமோ, வெற்றி பெறாமல் போனால் என்ன ஆவது, என்ன பெரிதாக எழுதிவிட்டீர்கள் என்று யாராவது குற்றம் சொல்லிவிட்டால், என்ன ஆவது, புத்தகம் ஒருவேளை பெரிய அளவில் பாப்புலராகிவிட்டால், எங்கே போனாலும் நம்மை அடையாளம் கண்டுகொள்வார்களோ, ஒரு ஐடியாவைப்பற்றி தெளிவாக எழுதிவிட்டு அதை நாமே ஒரு காலகட்டத்தில் கைவிட்டால் ஊரே நம்மைப் பார்த்து சிரிக்காதா என்பது போன்ற எண்ணங்களே உங்கள் மனதை மறைந்திருந்து தாக்கும் பயஉணர்வுகளாகும். இந்தவிதமான பயங்களே உங்களை இதுபோன்ற விஷயங்களைத் தள்ளிப்போடவும் எழுதினால் சூப்பராக எழுதவேண்டும் என்று நினைக்கத் தூண்டுபவையாகவும் இருக்கும்.

வாழ்க்கையில் பல விஷயங்கள் முடிவெடுத்தலினாலேயே உங்களுக்கு அமைகிறது. அதிலும் துணிச்சலான முடிவுகளே அதிக பலனை அளிக்கிறது. உலகில் இருக்கும் பலரில் உங்களைப்போன்று தொழிலை ஆரம்பிக்கத் துணிந்தவர்கள் ஒரு சிலரே. அதேபோல், புத்தகம் எழுதத் துணிந்தவர்களும் ஒரு சிலரே.

தொழில் செய்யத் துணிந்த சிலரில் ஒருவரான நீங்கள் புத்தகம் எழுத நிச்சயமாகத் துணிந்து இறங்கி வெற்றி பெறுவீர்கள். கொஞ்சம் ஆழ்ந்து ஆராய்ந்தால், எல்லா எழுத்தாளர்கள் மத்தியிலுமே இந்தப் பயம் இருக்கவே செய்யும். பயத்தைப் பயனுள்ளதாக மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக எழுதலாம்; எழுத நினைக்கும் ஐடியாவில் உரை நிகழ்த்தலாம்; இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உங்களால் புத்தகம் எழுதுவதை நோக்கி வெற்றிகர மாக நகர முடியும் என்கிறார் ஆசிரியை.

ஒரு தொழிலை ஆரம்பிப்பதும் ஒரு புத்தகத்தை எழுதுவதும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பல விஷயங்கள்தான். இந்த இரண்டுக்குமே கொஞ்சம் கடின உழைப்புத் தேவை. அதேசமயம், இவை இரண்டுமே அளவில்லா பலனை வழங்கக்கூடியது என்கிறார் ஆசிரியை. ஒரு தொழில்முனைவோராக ஒன்றை நீங்கள் முழுவதுமாக உணர்ந்து கொண்டிருப்பீர்கள். வாருங்கள். ஒரு புத்தகம் எழுதி மற்றொன்றின் பலன்களையும் முழுமையாக உணர்ந்துகொள்ளலாம் என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியை.

- நாணயம் டீம்