மலைப்பாம்பைத் தோளில் சுமந்து
செல்வது போலிருக்கிறது அவனது
நட்பு.

பழகிய பாம்புதானெனினும்
சில சமயம் கழுத்தை நெறிக்கிறது.

சுருட்டு சாராயம் கோழிக்குழம்பு
இதெல்லாம் இஷ்டமதற்கு.
சாராயம் குடித்து சுருட்டைப் புகைத்து
பல சமயம் பாசத்தைக் கொட்டும்
சில சமயம் கோபத்தில் சீறும்.

போதை ததும்பும்
அழகிய தனது விழிகளால்
அன்றொரு நாள் எனது
கவிதைகளை வாசிக்கத் துவங்கியது.

நான் மண்ணைப் பற்றி எழுதிய கவிதையை
வாசித்தபோது அதற்கு பருந்தின் கூடு
நினைவிற்கு வந்திருக்க வேண்டும்.

கழுத்தில் அதைக் காணவில்லை
`பருந்தின் முட்டைகளைக் குடித்துவிட்டு

என் கழுத்துக்கு வந்துவிடுமது இன்றிரவு.

மலைப்பாம்பைத் தோளில் சுமந்தபடிக்கு
எனக்குக் கடன் கொடுத்தவனிடம்
வாய்தா வாங்கிக்கொண்டிருக்கிறேன்.

அவனையே உற்று நோக்கியது அது.
அவன் கழுத்திலும் ஒரு மலைப்பாம்பு
இருந்தது.

நானும்
அவனும்
அறிந்திருக்கவில்லை
அவ்விரு மலைப்பாம்புகளின் உரையாடலை.

நான் உறங்க முயற்சிக்கிறேன்
தன் பிடியை இன்னும் இறுக்கி
என் சுவாசத்தைச் சிதைக்கிறது
மலைப்பாம்பு.

நான் உறக்கம் வருவதற்காக
ஒரு புத்தகத்தை வாசிக்க எடுக்கிறேன்
என் பார்வையில் தனது கரிய
நிழலைப் படரவிடுகிறது.

நான் மது அருந்த நினைக்கிறேன்
பிடியை மெள்ளத் தளர்த்தி
எனது கண்ணாடிக் கோப்பைக்கு
முத்தம் தந்தபடி

என்னோடு மதுவருந்தும் பொழுதின்
அற்புதத்திற்காகக் காத்திருப்பதாகச்
சொன்னது.

நான் புகைபிடிக்க நினைக்கிறேன்
இப்போது எனது கழுத்தில் அது இல்லை.

எனது பிறந்த நாளுக்கு
ஒரு சட்டை வாங்க வேண்டுமென
ஆயத்த ஆடையகத்துக்கு
கூட்டிப்போனது மலைப்பாம்பு.
நிறத்தேர்வு என்னிஷ்டப்படியில்லை
கடைசியில் அது ஒரு
சட்டை வாங்கித் தந்தது
நாட்டுக்கோழி முட்டை ஓட்டின் நிறத்தில்.

அது பரிசளித்த சட்டையை
அணிந்துகொண்டு காதலியைப்
பார்க்கப் போகிற வழியில்
எனது தனிமைக்காக அதனிடம்
கெஞ்சினேன்.
அவள் வீட்டு வாசலருகே
அது பார்த்துவிட்டக்
கோழிக்குஞ்சொன்றைப்
புசித்து முடிப்பதற்குள்
வந்துவிட வேண்டுமென்றது.

சாணம் மெழுகிய தரையில்
நெல் மூட்டைகள் அடுக்கிய
அறையில் அவளோடு
தனிமையிலிருந்தேன்.
வெளியே
கோழிக்குஞ்சின் உயிர் பிரியும்
சத்தம் கேட்டது.
நான் விடைபெறும்போது
அதற்குள் என்ன அவசரம்
என்றாள்.

மலைப்பாம்பு கருவுற்றிருப்பதாக
என்னிடம் சொன்னது.
எல்லாக் குட்டிகளுக்கும்
எனது கழுத்து தாங்காதென்றேன்.

சிரித்துக்கொண்டே
ஒவ்வொரு குட்டிக்கும்
ஒவ்வொரு கழுத்தை
முன்பதிவு செய்திருக்கிறேன்
என்றது.

மலைப்பாம்பைத் தோளில் சுமந்து
செல்வது போலிருக்கிறது அவனது
நட்பு.

பழகிய பாம்புதானெனினும்
சில சமயம் கழுத்தை நெறிக்கிறது.

சுருட்டு சாராயம் கோழிக்குழம்பு
இதெல்லாம் இஷ்டமதற்கு.
சாராயம் குடித்து சுருட்டைப் புகைத்து
பல சமயம் பாசத்தைக் கொட்டும்
சில சமயம் கோபத்தில் சீறும்.

போதை ததும்பும்
அழகிய தனது விழிகளால்
அன்றொரு நாள் எனது
கவிதைகளை வாசிக்கத் துவங்கியது.

நான் மண்ணைப் பற்றி எழுதிய கவிதையை
வாசித்தபோது அதற்கு பருந்தின் கூடு
நினைவிற்கு வந்திருக்க வேண்டும்.

கழுத்தில் அதைக் காணவில்லை
`பருந்தின் முட்டைகளைக் குடித்துவிட்டு

என் கழுத்துக்கு வந்துவிடுமது இன்றிரவு.

மலைப்பாம்பைத் தோளில் சுமந்தபடிக்கு
எனக்குக் கடன் கொடுத்தவனிடம்
வாய்தா வாங்கிக்கொண்டிருக்கிறேன்.

அவனையே உற்று நோக்கியது அது.
அவன் கழுத்திலும் ஒரு மலைப்பாம்பு
இருந்தது.

நானும்
அவனும்
அறிந்திருக்கவில்லை
அவ்விரு மலைப்பாம்புகளின் உரையாடலை.

நான் உறங்க முயற்சிக்கிறேன்
தன் பிடியை இன்னும் இறுக்கி
என் சுவாசத்தைச் சிதைக்கிறது
மலைப்பாம்பு.

நான் உறக்கம் வருவதற்காக
ஒரு புத்தகத்தை வாசிக்க எடுக்கிறேன்
என் பார்வையில் தனது கரிய
நிழலைப் படரவிடுகிறது.

நான் மது அருந்த நினைக்கிறேன்
பிடியை மெள்ளத் தளர்த்தி
எனது கண்ணாடிக் கோப்பைக்கு
முத்தம் தந்தபடி

என்னோடு மதுவருந்தும் பொழுதின்
அற்புதத்திற்காகக் காத்திருப்பதாகச்
சொன்னது.

நான் புகைபிடிக்க நினைக்கிறேன்
இப்போது எனது கழுத்தில் அது இல்லை.

எனது பிறந்த நாளுக்கு
ஒரு சட்டை வாங்க வேண்டுமென
ஆயத்த ஆடையகத்துக்கு
கூட்டிப்போனது மலைப்பாம்பு.
நிறத்தேர்வு என்னிஷ்டப்படியில்லை
கடைசியில் அது ஒரு
சட்டை வாங்கித் தந்தது
நாட்டுக்கோழி முட்டை ஓட்டின் நிறத்தில்.

அது பரிசளித்த சட்டையை
அணிந்துகொண்டு காதலியைப்
பார்க்கப் போகிற வழியில்
எனது தனிமைக்காக அதனிடம்
கெஞ்சினேன்.
அவள் வீட்டு வாசலருகே
அது பார்த்துவிட்டக்
கோழிக்குஞ்சொன்றைப்
புசித்து முடிப்பதற்குள்
வந்துவிட வேண்டுமென்றது.

சாணம் மெழுகிய தரையில்
நெல் மூட்டைகள் அடுக்கிய
அறையில் அவளோடு
தனிமையிலிருந்தேன்.
வெளியே
கோழிக்குஞ்சின் உயிர் பிரியும்
சத்தம் கேட்டது.
நான் விடைபெறும்போது
அதற்குள் என்ன அவசரம்
என்றாள்.

மலைப்பாம்பு கருவுற்றிருப்பதாக
என்னிடம் சொன்னது.
எல்லாக் குட்டிகளுக்கும்
எனது கழுத்து தாங்காதென்றேன்.

சிரித்துக்கொண்டே
ஒவ்வொரு குட்டிக்கும்
ஒவ்வொரு கழுத்தை
முன்பதிவு செய்திருக்கிறேன்
என்றது.