அடப்போங்கப்பா... மாற்றம், மாற்றம் என்கிறீர்கள். ஆனால், முன்னேற்றத்தைக் காண வில்லையே...” என்று புலம்பும் ஆளா நீங்கள்? இதோ உங்களுக்கானதுதான் இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம்.

ஸ்வென்ட் ப்ரிங்க்மான் என்பவர் எழுதிய ‘ஸ்டாண்ட் ஃபர்ம்’ எனும் புத்தகம், மாற்றத்தால் வரும் முன்னேற்றம் என்று சொல்லித் திரியும் கூட்டத்திலிருந்து விலகி நிற்பது எப்படி என்பதை விளக்கமாக எடுத்துச்சொல்கிறது.

நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் பலவற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றே நம்மில் பெரும்பாலான வர்களுக்குத் தோன்றுகிறது. டெக்னாலஜி, பணியிடத்தில் நடைமுறைப்படுத்தப்படும் மாறுதல்கள், உணவுகளில் வரும் மாறுதல்கள், ஃபேஷன் எனப் பல விஷயங்களிலும் வேகமான மாறுதல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்ன காலம் போய், மாற்றம் ஒன்றே அன்றாடம் தொடர்ந்து நடப்பது என்று சொல்லும் நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். மாற்றமே நிதர்சனம் என்றாகிவிட்ட இந்தக் காலத்தில், நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பது யாருக்காவது தெளிவாய் தெரியுமா என்றால், அதுவும் தெரியவில்லை. உலகமயமாக்கல்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர், உலக மயமாக்கலால் வந்த பிரச்னை இது என்கிறார்கள்.

நிறுவனங்கள் வேகவேகமாக மாறும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது, அவை தேடும் பணியாளர்கள் தங்களை வேகவேகமாக மாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்கின்றன. “சுலபமாக மாறும் குணம்கொண்ட, புதியவற்றைச் சுலபத்தில் நடைமுறைப்படுத்திக் கொள்ளும் திறன்கொண்ட மற்றும் தனிநபர்/துறை சார்ந்த மேம்பாடுகளைத் தொடர்ந்து செய்துகொள்ளக்கூடிய மனநிலைகொண்ட பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தவே விரும்புகிறோம்” என்று நிறுவனங்கள் சொல்வது இன்றைக்கு மிகச் சாதாரணமாகிவிட்டது.

“இல்லீங்க... இதெல்லாம் நமக்குச் சரிப்படாது. நான் செய்கிற வேலையை சிறப்பாகச் செய்கிறேன். மாற்றம் என்பதே முன்னேற்றம் என்பதெல்லாம் நமக்கு ஆகாது” என்று சொல்லி, இருக்கின்ற இடத்திலேயே இருந்துகொள்ள ஒருவர் துணிந்தால் என்னவாகும்..?

எல்லோரும் வேகவேகமாக ஓட்டம் எடுக்கும்போது, அவர் பின்தங்கிப் போய்விடுவார். இருக்கிற இடத்திலிருப்பதே பெரிய பாவமாகக் கருதப்படும் காலகட்டத்தில் பின்தங்கி விடுவது எவ்வளவு கொடூரமான விஷயம்!

விருப்பு வெறுப்பற்ற (ஸ்டாயிசிஸம்) என்பதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக் கொண்டால், இந்த நிலையை நீங்கள் அடையலாம். இந்த ஸ்டாயிசிஸம் என்ன சொல் கிறது என்பதற்கான உதாரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ, அது அத்தனைக்கும் ஆசைப் படுங்கள் என்று பாசிட்டிவ் விஷயங்கள் புகட்டப்படும் இந்த உலகில், ஸ்டாயிசிஸம் நிலையில் இருப்பவர்கள் நெகட்டிவ் விஷயங்களை முன்னெடுத்துக் கொள்பவர்கள். அத்தனை விஷயங்களையும் அடைய வேண்டும் என்று நினைப்பதற்குப் பதில், உன் கையில் இருக்கும் அத்தனையையும் இழந்தால் என்னவாகும் என்று யோசி என்பவர்கள் இவர்கள்.

“உலகமே வாய்ப்புகளால் குவிந்திருக்கிறது புறப்படு மனிதா புறப்படு. வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்” என்று கூக்குரலிடும் சமூகத்தில் இவர்கள், “தம்பி... உன்னிடம் என்ன தகுதியிருக்கிறது என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பார்’’ என்பார்கள்.

“நினைத்ததைச் செய்; பிடித்ததைச் செய்” என்று உரக்கச் சொல்கிற இந்த உலகில் இவர்கள், “கொஞ்சம் ஒழுக்கமாய் இரு; உன்னுடைய உணர்ச்சிகளை அடக்கி, உலக நடைமுறைகளுக்குக் கட்டுப்படு” என்பார்கள்.

‘‘ஐயோ, மரணம்’’ என்று பயங்காட்டும் இந்த உலகில் இவர்கள், “இன்றைக்கு நீ மரணமடைந்தால் என்னவாகும் என்று யோசி. வாழ்க்கைக்கும் உடனிருப்பவர்களுக்கும் அன்றாடம் நன்றி கூறிவிடு. ஏனென்றால், திடீரெனக் கிளம்ப உத்தரவு வந்தால், நன்றிக் கடனை வைத்துவிட்டுப் போய்விடுவாய்” என்பார்கள்.

இதுபோன்ற மாற்றுச் சிந்தனைகளைக்கொண்டு இன்றைய பரபரக்கும் கலாசாரம் குறித்துச் சிந்தனை செய்தால், எப்படி இந்தப் பரபரப்பிலிருந்து வெளியேவந்து செளகர்யமாக வாழ்வது என்பது உங்களுக்குப் புரியும் என்கிறார் ஆசிரியர்.

ஏழு படிநிலைகள் இந்த முறையில் இருக்கின்றன என்று சொல்லும் ஆசிரியர், அவற்றைத் தனித்தனி அத்தியாயமாகத் தந்துள்ளார்.

‘‘இந்தப் புத்தகம் எதிர்மறை எண்ணங்களைத் தருவதாக இருக்கும். ஆனால், அந்த எதிர்மறை எண்ணங்கள், புதுமாதிரியான சிந்தனைகளை உங்களுக்கு நிச்சயம் தரும்’’ என்கிறார் ஆசிரியர்.

உங்கள் வாழ்வில் உங்களுக்கே உண்டான கடமைகள், பொறுப்புகள் போன்றவற்றை அறிவுறுத்துவதே இந்த புத்தகத்தின் நோக்கமாகும். எதற்கென்றே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிற இந்த உலகத்தில், நாம வேறமாதிரி என்று சொல்லியாயிற்று. எப்படி இதை நடைமுறைப் படுத்துவது?

முதலில் நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பொதுவாக, அனைவருமே அவர்கள் யாராக இருக்கவேண்டும் என்று உலகம் சொல்கிறதோ, அவ்வாறு இருக்கவே முயற்சி செய்கின்றனர். அதற்காக உன்னைப் பற்றி அறிய உனக்குள்ளே உன்னைத் தேடு என்று சொல்வேனென்று நினைக்காதீர்கள். உங்களுக்குள் தேட ஒன்றும் இல்லை என்பதே நிஜம். பிடித்ததைச் செய், மனசு சொல்வதை செய் என்பதெல்லாம் தவறானது; நியாயமானதைச் செய் என்பதே சரியான பாதையாக இருக்கும். மனசு சொல்வதை கேட்பது என்பது கேலிக்கூத்து என்பதைப் புரிந்து கொண்டீர்களா?

அடுத்து நீங்கள் செய்யவேண்டியது, உங்களிடம் இருக்கும் குறைகளைக் கவனிப்பது. நினைவிருக் கட்டும், உலகமே போகும் பாதை பாசிட்டிவ் சைக்காலஜி எனும் ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற வழுக்குப் பாதை. கையில் இருக்கும் விஷயம் கைநழுவிப்போனால் என்னவாகும் என்று சிந்தியுங்கள். ஒரு மனிதரோ, ஒரு பொருளோ... நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்று இல்லாதுபோனால் என்னவாகும் என்று யோசியுங்கள். அதன்பின்னால் அதன்மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும், பெறும் மகிழ்ச்சியும் பலமடங்கு அதிகரிக்கும். இல்லாததைக் கற்பனை செய்வதை விட்டுவிட்டு, இருப்பதின் அருமை பெருமையைச் சிந்திக்க ஆரம்பியுங்கள்.

இந்த இரண்டு படிநிலைகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்றால், அடுத்த நிலை என்பது ‘நோ’ சொல்லத் தெரிந்து கொள்வதாகும். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகில் மாறுதல்களுக்கு ‘யெஸ்’ எனச் சொல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. அலுவலகத்தில் நீங்கள் எத்தனை ‘யெஸ்’ என்ற தொப்பிகளை வைத்திருக்கிறீர்களோ, அதே அளவிற்கான ‘நோ’ எனும் தொப்பிகளையும் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தைப் பொறுத்தவரை, புதிய முயற்சிகள் பலவுமே முன்னேற்றம் என்ற போர்வையில் உங்களிடம் தள்ளிவிடப்படும்.

உதாரணத்திற்கு, கையில் இருக்கும் வேலை களை முடிக்கும் முன்னரே புதிய வேலை உங்களிடம் தரப்படும்போது, “சார், இது இப்போது முடியாது’’ என்பதைச் சொல்லிப்பழக வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

அடுத்தபடியாக, உங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ளுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், அலுவலக விஷயங்களில் இது மிகமிக அவசியம் என்கிறார். உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று ஒருவரிடம் கேட்கும் தருணங்கள் இப்போது மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது. இது உங்களைக் கொந்தளிக்க வைப்பதற்காகவே கேட்கப்படும் விஷயம். எதிராளி, எமோஷனைத் தூண்டுகிறார் என்பதை அறிந்துகொண்டு, நான் வெட்கப் பட்டால் அது உங்களுக்காகவும் உங்கள் நிறுவனத்திற்காகவும்தான் என்பதற்கான காரண காரியங்களை மனதில் எடைபோட்டு சமன்படுத்திக்கொண்டு, அமைதியாக இருக்கப் பழகவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

உங்களுடைய பயிற்சியாளரைக் கழட்டிவிடுவது அடுத்த நிலை. கொஞ்சம் அப்படி இப்படி என நீங்கள் இருந்தால், உடனே நிறுவனத்தின் கைதேர்ந்த பயிற்சியாளரிடத்தில் உங்களை அனுப்பி சமன்செய்யச் சொல்வார்கள். செல்ஃப் டெவலப்மென்ட் வேண்டும் என்ற முத்திரையில், அலுவலகத்தில் இருக்கும் வேண்டாத வெட்டிப் பயல்களுடன் நீங்கள் சுமுக உறவு வைத்திருப்பதை அலுவலகம் ஊக்குவிப்பதாகக் கணக்கெழுதும் விஷயம்தான் இந்தப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுதல் என்பது என்கிறார் ஆசிரியர்.

மாற்றம் என்பதே முன்னேற்றம் என்று கூக்குரலிடும் இந்த உலகம், இன்றைய பொழுதையும் நாளைய பொழுதையும் மட்டுமே கணக்கில்கொண்டு செயல்படுவது. நமக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அதைச் சற்றும் மதிக்காதது இந்த முன்னேற்றத்திற்குப் பாடுபடும் கோஷ்டி. நம் கடந்தகாலம் எப்படி இருந்தது, நாம் தடுமாறியபோதெல்லாம் எப்படித் தப்பித்தோம், எது நமக்கு உதவியது, எது நம்மை இடறியது என்பதையெல்லாம் ஆழ்ந்து சிந்தியுங்கள். அது உங்களுக்கு மிகவும் வலிமையான விடைகளைத் தரும். நீங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள உங்களுக்குத் தேவை நிலையான தன்மையே தவிர, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மாறும் தன்மையல்ல என்று முத்தாய்ப்பான கருத்தைச் சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

எதற்காக ஓடுகிறோம் என்று தெரியாமலேயே அனைவரும் ஓடிக் கொண்டிருக்கும் பரபரப்பு மிகுந்த இந்த உலகில், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங் களைக் கடைப்பிடிப்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான் என்று புத்தகத்தின் ஆசிரியரே சந்தேகத்துடன் சொல்லியிருக்கிறார்.

நாம் வாழும் வாழ்க்கைக்கு எதிரான கருத்தைச் சாமர்த்தியமாகச் சொல்லியிருக்கும் இந்தப் புத்தகத்தை ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்!

நாணயம் டீம்