Published:Updated:

`சிறிய பஞ்சு தானே...'

`சிறிய பஞ்சு தானே...'
பிரீமியம் ஸ்டோரி
`சிறிய பஞ்சு தானே...'

`சிறிய பஞ்சு தானே...'

`சிறிய பஞ்சு தானே...'

`சிறிய பஞ்சு தானே...'

Published:Updated:
`சிறிய பஞ்சு தானே...'
பிரீமியம் ஸ்டோரி
`சிறிய பஞ்சு தானே...'

ன் ஆசிரமத்தில் உள்ள சாலையில் நடந்து கொண்டிருந்தார் காந்திஜி. வழியில், இரண்டு அங்குல நீளமுள்ள பஞ்சு ஒன்று சாலையில் கிடப்பதைக் கண்டார். தன்னுடன் வருபவர்களிடம் அதைச் சுட்டிக்காட்டிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் காந்திஜி. உடன் வந்தவர்களில் ஒரு பெண்மணி, அதை எடுத்துக் கொண்டாள்!

மாலையில் தனது ராட்டையை எடுத்து நூல் நூற்க அமர்ந்தவர், சாலையில் இருந்து எடுத்து வந்த பஞ்சுத் துண்டை தரும்படி அந்தப் பெண்ணிடம் கேட்டார்.  அவள் திகைத்தாள். ‘’சிறிய பஞ்சுதானே என்று அதைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டேன் பாபுஜி’’ என்றாள். காந்திஜியின் முகம் மாறிற்று. ‘’இதுவே, ஒரு தம்பிடியாக இருந்திருந்தால், மிகச் சொற்பமான காசுதானே என்று தூக்கி எறிந்திருப்பாயா?’’ என்று கேட்டார்.

`சிறிய பஞ்சு தானே...'

‘’எறிந்திருக்க மாட்டேன்’’ என்றாள் அவள்.

‘’பருத்தியைப் பயிரிடுவதிலும் அதைச் சுத்தப்படுத்திப் பஞ்சாக்குவதிலும் எவ்வளவு உழைப்பு செலவாகிறது என்று உனக்குத் தெரியாதா? உழைப்பின் மதிப்பை உணராத நீ குற்றம் செய்தவள் ஆகிறாய். போ... போய் அதைக் கொண்டு வா!’’ என்றார் காந்திஜி.

ஓடோடிச் சென்ற பெண்மணி, அந்த பஞ்சைத் தேடிப் பிடித்து எடுத்து வந்தாள். அதை வாங்கிக் கொண்ட காந்திஜி, ‘’துணியாக நெய்த பிறகு, இதன் அழுக்கை எளிதில் அகற்றி விடலாம்’’ என்றபடி, தான் ஏற்கெனவே வைத்திருந்த பஞ்சுடன் சேர்த்து நூல் நூற்க ஆரம்பித்தார். அவரது எளிமை மற்றும் சிக்கனத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்!

-மு. ஜெகந்நாதன், சென்னை-73

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism