மித்ரா வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்தால், வீட்டின் பின்பக்கம் ஒரு குளம் தெரியும். அங்கே வரும் பறவைகள், சின்னச் சின்ன உயிர்களைப் பார்ப்பது என்றால், மித்ராவுக்கு மிகவும் பிடிக்கும். அன்று காலை சீக்கிரமே எழுந்துவிட்டாள். ஜன்னல் அருகே வந்து பார்த்தபோது ஆச்சர்யம். இதுவரை செய்தியாக மட்டுமே கேள்விப்பட்டிருந்த அழகிய அன்னப்பறவை ஒன்று, குளத்தைச் சுற்றிச் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தது. அதன் கழுத்தில் ஐபேட் இருந்தது.

மித்ரா மெதுவாக அங்கே சென்று அன்னப்பறவையை நெருங்கி தொட்டுப் பார்த்தாள். அதன் மீதேறி அமர்ந்தாள். அன்னப்பறவை பறக்கத் தொடங்கியது. ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி மித்ராவை ஒரு வீட்டின் முன் நிறுத்தியது அன்னப்பறவை. அந்த வீட்டிலிருந்து ஒரு தாத்தாவும் பாட்டியும் வெளியே வந்தனர்.

தாத்தா: வாம்மா, நல்லா இருக்கியா என்னம்மா சாப்பிடுறே?

மித்ரா: நான் குளிச்சுட்டுத்தான் சாப்பிடுவேன். எனக்கு ஹாட் வாட்டர் வேணுமே!

தாத்தா: அதெல்லாம் எதுக்கு செல்லம். வா அருவியில் குளிச்சுட்டு வரலாம்.

இருவரும் அருவிக்கு சென்று குளித்துவிட்டு வர, பருத்தி ஆடைகளை கொடுத்து அணிந்துவரச் சொன்னார் பாட்டி.

பாட்டி: என்ன கண்ணு சாப்பிடுற? கேழ்வரகு அடை, குழிபணியாரம், திணை பொங்கல்...

மித்ரா: போதும் பாட்டி, நீங்க சொல்ற பெயர்களே புரியலை. புதுசா இருக்கு.

பாட்டி: சரி சரி, குழிபணியாரம் நல்லா இருக்கும் சாப்பிடு!

குழிபணியாரத்தைப் பார்க்கவே எச்சில் ஊறியது. ருசித்து சாப்பிட்டாள் மித்ரா.

மித்ரா: நல்லா இருந்துச்சு பாட்டி. குடிக்கிறதுக்கு கூல்டிரிங்க்ஸ் ஏதாவது கிடைக்குமா?

பாட்டி: பழச்சாறு, இளநீர், பதநீர், பானகம்... எது வேணும்?

மித்ரா: பானகம் பெயரே வித்தியாசமா இருக்கு. அதையே கொடுங்க.

வாங்கிக் குடித்த மித்ரா, ‘ஆஹா செம டேஸ்ட்’ என்றாள்.

திடீரென அன்னப்பறவை அங்கே வந்தது. அதன் ஐபேட் சிணுங்கியது. அதிலிருந்து கேள்விகள் ஒலித்தன.

கேள்வி: இங்கு உனக்குத் தரப்பட்ட உணவின் பெயர் என்ன?

மித்ரா: குழிப்பணியாரம்.

கேள்வி: இங்கு நீ அருந்திய பானம்?

மித்ரா: பானகம்.

சரியான பதில். இப்போது அடுத்த லெவலுக்குச் செல்வோம்.

பாட்டி வீட்டின் பின்புறக் கதுவு திறந்துகொள்ள, அங்கே வேறோர் இடம். அம்மா, அப்பா வயதில் இருவர் இருந்தனர். உள்ளே நுழைந்தாள் மித்ரா.

மித்ரா: வணக்கம் ஆன்ட்டி!

பெண்: அத்தை என்று கூப்பிடு மித்ரா.

மித்ராவை அன்புடன் வரவேற்ற அத்தை, தலைசீவி, பூ வைத்து அழகுப்படுத்தினார். மாமாவுடன் சேர்ந்து தோட்டம், வயல் வரப்புகளை சுற்றிப் பார்த்தாள். வயலில் நாற்று நடுவதை நின்று கவனித்தாள். தோட்டத்தில் காய்களையும் கனிகளையும் பறித்தனர். ஒரு கன்றுக்குட்டி ஓடிவந்து மித்ராவை அன்பாக முட்டியது. அதைத் தூக்கி மித்ராவிடம் தந்தார் மாமா.

மித்ரா: இது மிகவும் அழகாக உள்ளது.

மாமா: மூன்று வாரத்துக்கு முன்பு பிறந்த குட்டி.

மித்ரா: இங்கு நிறைய பசுக்கள் உள்ளன. இதன் அம்மா எது மாமா?

மாமா: கன்றை இறக்கிவிடு. அது தன் தாயிடம் ஓடும்.

மித்ரா கன்றை இறக்கிவிட்டதும் தன் தாயிடம் ஓடி, பால் குடிக்க ஆரம்பித்தது. அதை ரசித்து பார்த்தாள்.

உணவுடன் வந்த அத்தை, தோட்டத்து மண் தரையிலே இலையை விரித்து உணவு பரிமாறினார். கூட்டு, பொறியல், வத்தல் என வகை வகையாக இருந்தது.

மித்ரா: மிகவும் ருசியாக இருந்தது அத்தை.

உணவுக்குப் பிறகு, மரத்துக்குக் கீழே போட்டிருந்த கயிற்று கட்டிலில் படுத்தாள். சிலுசிலு காற்றில் சொக்கி உறங்கிப்போனாள் மித்ரா.

மாலையில் எங்கிருந்தோ சிறுமிகளும் சிறுவர்களும் வந்துசேர்ந்தனர். பாண்டியாட்டம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி என விதவிதமாக விளையாடி மகிழ்ந்தாள்.

அப்போது, மீண்டும் அன்னப்பறவை வந்தது. அதன் கழுத்தில் இருந்த ஐபேட் சிணுங்கியது. கேள்விகள் வந்தன.

கேள்வி: உன் வீட்டில் சாப்பிட்ட உணவுக்கும் இங்கு சாப்பிட்ட உணவுக்கும் என்ன வித்தியாசம்?

மித்ரா: ஊரில், பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் வெரைட்டி ரைஸ் அல்லது நூடுல்ஸ்தான். இங்கே பல காய்கறிகள் மூலம் நிறைய சத்துகள் பெற்றேன்.

கேள்வி: விளையாட்டு பற்றி உன் கருத்து

மித்ரா: நான் இதுவரை கோடை விடுமுறையில், கீபோர்ட் கிளாஸ், இந்தி கிளாஸ், ஸ்விம்மிங் கிளாஸ், டான்ஸ் கிளாஸ் என்று பணம் கொடுத்துச் செல்லும் விளையாட்டுகளுக்குத்தான் சென்றிருக்கிறேன். ஆனால், நம் மண்ணின் விளையாட்டே உடலுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் இருப்பதை இப்போது அறிந்துகொண்டேன்.

அன்னப்பறவை புன்னகைத்தது. ‘`நீ இரண்டு லெவல்களை முடித்துவிட்டாய். இப்போது, உன் வீட்டுக்கே செல்ல விரும்புகிறாயா?

மித்ரா: ஆமாம்... என் அப்பா, அம்மாவை உடனே சந்திக்க வேண்டும். இந்த விடுமுறைக்கு என் சொந்த பாட்டி வீட்டுக்கும் அத்தை வீட்டுக்கும் சென்றுவருகிறேன் என்று சொல்ல வேண்டும்.

சற்று நேரத்தில் மித்ரா அவள் வீட்டின் பின்பக்கம் உள்ள குளத்தின் அக்கரையில் நின்றிருந்தாள். மிகவும் உற்சாகமாக வீட்டை நோக்கி ஓடினாள்.