Published:Updated:

எமோஜி மரப்பாச்சி

எமோஜி மரப்பாச்சி
பிரீமியம் ஸ்டோரி
எமோஜி மரப்பாச்சி

கவிதை: அழகிய பெரியவன், ஓவியம்: மணிவண்ணன்

எமோஜி மரப்பாச்சி

கவிதை: அழகிய பெரியவன், ஓவியம்: மணிவண்ணன்

Published:Updated:
எமோஜி மரப்பாச்சி
பிரீமியம் ஸ்டோரி
எமோஜி மரப்பாச்சி
எமோஜி மரப்பாச்சி

ம்மாவிடமிருந்து மரப்பாச்சியை 
வாங்கி விளையாடியிராத அவள்
மரங்கள் அழிபட்டிருந்த காலமொன்றில்
இணையம் வழியாக அதை
அறிந்துகொண்டாள்

அதற்கவள் அம்மா எவ்விதத்திலும் பொறுப்பாகாள்

இவள் பிறந்த சமயத்தில் கடைத்தெருவிலும்
மால்களிலும் பிளாஸ்டிக் பொம்மைகள் தம்
சிரிப்பைத் தொடங்கியிருந்தன

பிளாஸ்டிக் பரவவிடும் வெருட்டும் நவீனத்தின்
வாசனையைக் 
கொண்டிருந்த பொம்மைகளில்
செஞ்சந்தன
மணமில்லாதது குறித்த நுகர்நினைவேதும்
இல்லாததனால்
மகளுக்கு எந்தப் புகாருமில்லை

பிளாஸ்டிக் நிகர்த்து
காலமும் தன் பல்படியாக்க வினையை
ஆற்றத்தொடங்கியிருந்த ஆண்டொன்றில்
பிளாஸ்டிக் பொம்மையை வைத்து
விளையாடியிராத தன் அம்மாவுக்குப் பரிசாக
மகள் வாங்கிக் கொடுத்த
கைப்பேசியில்
மரப்பாச்சி மற்றும் பிளாஸ்டிக் பொம்மைகளின்
நினைவுகளோடு
எமோஜி மற்றும் ஸ்மைலி பொம்மைகளை
அனுப்பிக்கொள்கிறார்கள்
இருவரும்.