அம்மாவின் கைகள்
பக்கத்து வீட்டிலிருந்து பலகாரம் கொடுத்தனுப்பும்போதெல்லாம்
பாத்திரத்தில் நாலுபிடி
சர்க்கரையிட்டுத் திருப்பிக் கொடுப்பாள் அம்மா.

சாப்பிட்டு முடித்துக் கழுவுவதற்குப் போடும் சோற்றுப் பானையில்
ரெண்டுபிடிச் சோறிருக்கும்.
ஒருபோதும்
பாத்திரத்தைத் துடைக்கமாட்டாள்
அம்மா.

மூடை அரிசி தீர்ந்தாலும் புதிதாய்
வாங்கும் வரை நாலுபிடி அரிசியாவது மிச்சமிருக்கும்
அரிசிச் சாக்குப்பையில்.

ஒருபோணி இட்லி மாவுக்கு
அரைப்பிடி உப்பிடுவாள்.

சோறூட்டும்போதெல்லாம்
தட்டின் விளிம்போரம் கைப்பிடி
சோற்றுக் கொழுக்கட்டையை
மோதிரம் மினுங்க
வரிசையாய் அடுக்குவாள்.

நெற்றியில் பெரிதாய் குங்குமம்
அப்பி நடுவீட்டில் கிடத்தியிருக்கையில்
அம்மாவின் விரித்தபடி உறைந்திருக்கும் கைவிரல்களைப்
பார்த்தபடியே விம்முகின்றன
ரத்த சொந்தங்கள்.

- ஜெயாபுதீன்

நினைவில் காடுள்ள நான்
எனக்கும் அந்த யானைக்கும்
ஏதோ இருந்திருக்கிறது
காடு பிடிக்கும் என்பதையும் தாண்டி
யானை கோயில் யானை ஆவதில்
எல்லாம் எந்த விருப்பமும்
இல்லை எனக்கு
கல்லூரி நாள்கள் முழுக்க
யானை கட்டியிருக்கும்
கோயில் வீதி வழியே சென்றது
எங்கள் தொடர்பின் நம்பிக்கை
திருவிழா நாள்களில்
சீவி சிங்காரித்து பட்டாடை உடுத்தி
ஊர்வலம் வரும்போதெல்லாம்
ரகசியமாய்ப் பார்த்துக்கொள்வோம்
வயதானதோ என்னவோ
யானை செத்துப்போனது தெரிகையில்
யானை எடைக்குக் கூடுதலாக
துக்கமிருந்தது
அதன்பிறகு அவ்வழியே
செல்லும் போதெல்லாம் என்னையும்
அறியாமல் மெல்லத் திரும்பி
யானை கட்டியிருந்த
இடத்தைக் காணத் தொடங்கியிருந்தேன்
பின்னொரு இரவில் ஊர்க்காட்டில்
அந்த யானையைப் போல
ஒரு நிழலைக் கண்டதாகக் கூறிய
நண்பனிடம் நான் எதுவும் பேசவில்லை
நினைவில் காடுள்ள யானை சாவதில்லை
யானை நடையில்
ஊர் தாண்டிக்கொண்டிருந்தேன்..!

- கவிஜி

தனிமை தீர...

ஊர் திரும்பும்
ஒவ்வொரு முறையும்
ஒரு பூனைக்குட்டியோ
நாய்க்குட்டியோ
புதிதாய் இருக்கிறது வீட்டில்
பாவம், தனிமையில் என்ன செய்வாள்
வளர்த்துப் பழக்கப்பட்ட அம்மா.

- அரவிந்தன்

நம்பிக்கை

காற்றிலாடும் மரக்கிளை
வெகு நேரமாய் அசைத்துக் கொண்டிருக்கிறது
ஒரு நட்சத்திரத்தை

- மகேஷ் சிபி

அம்மாவின் கைகள்
பக்கத்து வீட்டிலிருந்து பலகாரம் கொடுத்தனுப்பும்போதெல்லாம்
பாத்திரத்தில் நாலுபிடி
சர்க்கரையிட்டுத் திருப்பிக் கொடுப்பாள் அம்மா.

சாப்பிட்டு முடித்துக் கழுவுவதற்குப் போடும் சோற்றுப் பானையில்
ரெண்டுபிடிச் சோறிருக்கும்.
ஒருபோதும்
பாத்திரத்தைத் துடைக்கமாட்டாள்
அம்மா.

மூடை அரிசி தீர்ந்தாலும் புதிதாய்
வாங்கும் வரை நாலுபிடி அரிசியாவது மிச்சமிருக்கும்
அரிசிச் சாக்குப்பையில்.

ஒருபோணி இட்லி மாவுக்கு
அரைப்பிடி உப்பிடுவாள்.

சோறூட்டும்போதெல்லாம்
தட்டின் விளிம்போரம் கைப்பிடி
சோற்றுக் கொழுக்கட்டையை
மோதிரம் மினுங்க
வரிசையாய் அடுக்குவாள்.

நெற்றியில் பெரிதாய் குங்குமம்
அப்பி நடுவீட்டில் கிடத்தியிருக்கையில்
அம்மாவின் விரித்தபடி உறைந்திருக்கும் கைவிரல்களைப்
பார்த்தபடியே விம்முகின்றன
ரத்த சொந்தங்கள்.

- ஜெயாபுதீன்

நினைவில் காடுள்ள நான்
எனக்கும் அந்த யானைக்கும்
ஏதோ இருந்திருக்கிறது
காடு பிடிக்கும் என்பதையும் தாண்டி
யானை கோயில் யானை ஆவதில்
எல்லாம் எந்த விருப்பமும்
இல்லை எனக்கு
கல்லூரி நாள்கள் முழுக்க
யானை கட்டியிருக்கும்
கோயில் வீதி வழியே சென்றது
எங்கள் தொடர்பின் நம்பிக்கை
திருவிழா நாள்களில்
சீவி சிங்காரித்து பட்டாடை உடுத்தி
ஊர்வலம் வரும்போதெல்லாம்
ரகசியமாய்ப் பார்த்துக்கொள்வோம்
வயதானதோ என்னவோ
யானை செத்துப்போனது தெரிகையில்
யானை எடைக்குக் கூடுதலாக
துக்கமிருந்தது
அதன்பிறகு அவ்வழியே
செல்லும் போதெல்லாம் என்னையும்
அறியாமல் மெல்லத் திரும்பி
யானை கட்டியிருந்த
இடத்தைக் காணத் தொடங்கியிருந்தேன்
பின்னொரு இரவில் ஊர்க்காட்டில்
அந்த யானையைப் போல
ஒரு நிழலைக் கண்டதாகக் கூறிய
நண்பனிடம் நான் எதுவும் பேசவில்லை
நினைவில் காடுள்ள யானை சாவதில்லை
யானை நடையில்
ஊர் தாண்டிக்கொண்டிருந்தேன்..!

- கவிஜி

தனிமை தீர...

ஊர் திரும்பும்
ஒவ்வொரு முறையும்
ஒரு பூனைக்குட்டியோ
நாய்க்குட்டியோ
புதிதாய் இருக்கிறது வீட்டில்
பாவம், தனிமையில் என்ன செய்வாள்
வளர்த்துப் பழக்கப்பட்ட அம்மா.

- அரவிந்தன்

நம்பிக்கை

காற்றிலாடும் மரக்கிளை
வெகு நேரமாய் அசைத்துக் கொண்டிருக்கிறது
ஒரு நட்சத்திரத்தை

- மகேஷ் சிபி