Published:Updated:

உங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா?

உங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா?
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா?

நாணயம் புக் செல்ஃப்

உங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா?

நாணயம் புக் செல்ஃப்

Published:Updated:
உங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா?
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா?

‘ஒவ்வொரு நாளிலும் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதானே இறுதியில் நம் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தோம் என்பதை நிர்ணயிக்கிறது’ என்ற பொன்மொழியுடன் ஆரம்பிக்கிறது கரோலின் வெப் எனும் பெண்மணி எழுதிய ‘ஹெள டு ஹேவ் எ குட் டே’ எனும் புத்தகம். 

உங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா?

‘‘நான் முதன்முதலாக ஒரு லோக்கல் சூப்பர் மார்க்கெட்டில் கிளார்க்காகப் பணிபுரிந்தேன். சம்பளம் என்று சொற்பத் தொகையைத் தந்தார்கள். தொடர்ந்து துடைக்கப்படும் தரையையும், பல ஷெல்ப்களையும் மட்டுமே கொண்டது அந்த உலகம். அது தவிர பெரிய வேலையில்லை. யாரும் பாராட்டக்கூட மாட்டார்கள். கொஞ்சம் நாள்களானவுடன் சில நண்பிகள் கிடைத்தார்கள். அவர்களுடன் இரவுச் சாப்பாட்டுக்கு உணவு விடுதிகளுக்கு எப்போதாவது செல்வேன். அதைத் தவிர, சுவாரஸ்யமான ஒன்று என எதையும் சொல்வதற்கில்லை. ஆனாலும், எனக்கு அந்த வேலை பெருமிதத்தைத் தந்தது. பில் போடும் வேகத்தில் வாடிக்கையாளர்களைப் பிரமிக்க வைப்பேன். நான் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறேன் என்ற மனநிறைவு எனக்கு இருந்தது.

ஆறு வருடங்களுக்குப் பின், எனக்கு ஒரு பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் வேலை கிடைத்தது. எனக்கென்று ஒரு ரூம், டேபிள், அட தனியாக ஒரு குப்பைத்தொட்டியெல்லாம் இருந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! கைநிறைய சம்பளம் வேறு. ஆனாலும், அங்கே நான் மகிழ்ச்சியாக இல்லை. ஏனென்றால், என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். எக்கச்சக்கமான ரிப்போர்ட்களை சிரத்தையுடன் எழுதுவேன். எனக்கே தெரியும், அதை யாரும் படிக்கப் போவதில்லை என்று. ஆனாலும், நான் மிகுந்த அதிர்ஷ்டக்காரி என்பதால் மட்டுமே அந்த வேலை கிடைத்தது என்பது எனக்குப் புரிந்தது. கஷ்டப்பட்டு அந்த வேலையின் கான்ட்ராக்ட் காலகட்டம் முடியும்வரை இருந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்.

இப்படி என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு வேலைகளை நான் செய்துவந்துள்ளேன். ஹோட்டல் சர்வர், ரிசப்ஷனிஸ்ட், பணியாள் என உடலுழைப்பினைக் கேட்கும் வேலைகள்; எகனாமிஸ்ட், மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட், எக்ஸிக்யூட்டிவ் கோச் என மூளையை உபயோகிக்கவேண்டிய வேலைகள்; தனியார் மற்றும் அரசுப்பணிகள் பலவற்றிலும் இருந்துள்ளேன். என்னுடைய சொந்தமான ஸ்டார்ட்அப்பில் ஆரம்பித்து, குளோபல் நிறுவனம் வரை நான் பணிபுரிந்துள்ளேன். இவை அனைத்திலும் நான் கண்டறிந்த விஷயம் ஒன்றே ஒன்றுதான். அடிமட்ட வேலைகளில் இருக்கும் போது நான் பல நாள்கள் சந்தோஷமாக இருந்துள்ளேன். உயர்பதவிகளில் இருக்கும்போது பல நாள்கள் வருத்தமாக இருந்துள்ளேன். பணிபுரியும் நிலைக்கும் சந்தோஷத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதே நான் கண்டறிந்த உண்மை.

இந்த நிகழ்வுகளே ஒரு மனிதனைப் பணியிடத்தில் சந்தோஷமாக வைத்திருப்பது எது என்கிற கேள்வியை எனக்குள் கேட்கத் தூண்டியது. இன்றைய நாள் நன்றாக இருந்ததா என்ற கேள்வியை பலரிடமும் கேட்டு, அதற்கான காரணகாரியங்களைக் கண்டறிந்து தொகுக்க உதவியது. அதுவும் நான் 12 வருட காலம் மெக்கின்சி அண்டு கோவில் இருந்தேன். அந்த காலகட்டத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட பணி நிறுவனங்கள் பணியிடத்தில் பாசிட்டிவ் கலாசாரத்தை வளரச் செய்வது எப்படி என்பதைக் கண்டுபிடிப்பதாகும். இது என்னுடைய மனதில் இருந்த நேரடியான கேள்விகள் பலவற்றிற்கும் பல்வேறு நிறுவனப் பணியாளர்களிடமிருந்து பதில்களைப் பெற உதவியது’’ என்கிறார் ஆசிரியை.

பணியிடத்தில் நல்ல நாள் என்றால் எது என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் சொல்லும் பதில், அவர்களுடையை செயல்பாடு புரொடிக்டிவ்வாகவும் (நிறுவன வளர்ச்சிக்கு உதவும் வகையில்), அதேசமயம் நிறுவனம், ‘அட, இவருடைய பணி சிறப்பாக இருக்கிறதே’ என்று உணரும் வகையிலும் இருக்கும் நாள்களே என்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா?

மேலும், ‘நான் ஒரு சிறந்த காரியத்தைச் செய்கிறேன்’ என்ற நம்பிக்கையுடனும் உடனிருப்பவர்கள் உதவியுடனும் செயல்படும் நாள்களும் சிறந்தவை என்கின்றனர் பலர். இறுதியாக, நாளின் முடிவில் வருத்தத்துடன் கூடிய சோர்வுடன் இல்லாமல் மகிழ்ச்சியுடன் கூடிய களைப்புடன் இருக்கிற நாள்களே நல்ல நாள்கள் என்கின்றனர் பலர்.

என்னதான் நல்ல விஷயங்கள் வரிசைகட்டி வந்தாலும், அவை வருவதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும் என்பதிலும் கொஞ்சம் உண்மை இருக்கவே செய்கிறது என்று சொல்லும் ஆசிரியை, எல்லாம் நன்றாக இருந்தபோதிலும் ஒரு கிறுக்குப் பிடித்த உடன்பணிபுரியும் நபரோ அல்லது வாடிக்கையாளரோ அன்றைய தினத்தை மொத்தமாக காலிசெய்துவிடலாம் என்பதாலேயே இதைச் சொல்கிறேன் என்கிறார் ஆசிரியை.

ஆனாலும், நாம் கொஞ்சம் முயற்சி செய்தால் (மனித மூளை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் – நம் மூளையும் எதிராளியின் மூளையும்) ஒரு நல்ல நாளை எதிர்கொள்வதில்/அமைத்துக்கொள்வதில் அதிர்ஷ்டத்தின் அளவைக் குறைத்து நம்முடைய திறமையின் பங்கினை அதிகரித்துக்கொள்ள முடியும் என்பதைத்தான் இந்தப் புத்தகம் சொல்கிறது.

நல்ல நாளை அமைத்துக்கொள்வதற்கு என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை ஏழு பிரிவாக பிரித்துச் சொல்லியிருக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை கரோலின் வெப்.

முன்னுரிமை தர வேண்டியவை என்னென்ன, உற்பத்தித்திறனை அதிகரிப்பது எப்படி, உடனிருப்பவர்களிடம் நல்லுறவில் இருப்பது எப்படி, புத்திசாலித்தனமாகச் சிந்திப்பது எப்படி, நல்லதொரு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்வது எப்படி, தோல்வி களில் இருந்து மீண்டெழுவது எப்படி, மகிழ்ச்சியுடன் கூடிய ஆற்றலை அனுபவிப்பது எப்படி என்று.

வெறுமனே கருத்துகளைச் சொல்லாமல் ஆராய்ச்சி ரீதியான உண்மை கள், நடைமுறையில் உபயோகப் படும் டெக்னிக்குகள், நிஜ வாழ்க்கையில் நடந்த விஷயங் கள் (பல எக்ஸிக்யூட்டிவ்களிடம் கேட்டவை) போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது இந்தப் புத்தகம்.

1. ஒரு நாளில் அலுவலகத்தில் நடக்கும் அனைத்து விஷயங் களையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது போனாலும், சில விஷயங்களை நாம் கையில் எடுத்து நடத்துவது சாத்தியமான ஒன்றே. எல்லா விஷயங்களையும் கன்ட்ரோல் செய்ய முடியும் என்று சொல்லும் பலர் இருக்கின்றனர். இதை ஒருபோதும் நம்பாதீர்கள் என்று சொல்லும் ஆசிரியர், இந்த சில விஷயங்களையும் நாம் கையில் எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், ஒரு நாளில் நடப்பது அனைத்தும் அதன்போக்கிலேயே நடந்துவிட்டுப் போகட்டும் என்று நாம் சரணாகதி அடைந்தது போன்ற நிலையாகும் அது.

2. பணியிடத்தில் பணிச்சுமை நம்மைப் பிழிகிறது. மாலையில் வீட்டுக்குச் சென்றவுடனேயே டிவி, சினிமா, நாடகம் என நாம் பொழுதுபோக்கில் மூழ்குகிறோம். வீட்டுக்குச் சரியான நேரத்தில் செல்ல முடியாதவர்கள் வார இறுதியில் பொழுதுபோக்கை நாடுகிறோம். வார இறுதியும் கிடைக்காதவர்கள் கோடை விடுமுறை போன்ற நாள்களில் பொழுதுபோக்கை நாடுகிறோம். ஒரு வேலைநாளில் இந்தப் பொழுதுபோக்கு விஷயங்கள் மூளைக்குத் தேவைப்படுவது அவ்வப்போதே தவிர, நாளின் இறுதியிலோ, வார இறுதியிலோ அல்லது வருட இறுதியிலோ அல்ல. பொழுதுபோக்குகள் மனதைக் குதூகலிக்கச் செய்து மூளைக்குத் தேவையான சக்தியினை வழங்கவல்லது. எனவே, பணியிடத்தில் பணிக்கு நடுவே இந்த சக்தி கிடைக்குமாறு நாம் வழிவகைகளைச் செய்து கொள்ளவேண்டும் என்று சொல்லும் ஆசிரியர். அதற்கான பலவிஷயங்களை இந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார்.

3. ஒரு நாளில் குறைந்தபட்சம் மூன்று நல்ல விஷயங்களைச் செய்வது, இரக்கம் காட்டுவது, சுவாரஸ்யமான விஷயங்களைக் கண்டுபிடிப்பது, நல்ல மனிதர்களுடன் தொடர்பில் இருப்பது, புன்னகை பூப்பது போன்ற பல விஷயங்களும் பொழுதுபோக்கின் அளவிற்கு மூளைக்கு சக்தியை வழங்கவல்லது. எனவே, இவற்றில் எதையாவது ஒன்றைத் திட்டமிட்டு செய்ய முயன்றாலே அது போதுமானது என்கிறார் ஆசிரியர்.

4. ஒவ்வொரு நடைமுறையிலும் பல்வேறு விதமான ஐடியாக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், எது உங்களுக்கு வொர்க்-அவுட் ஆகும் என்பதைக் கண்டறிய சில ட்ரையல் அண்டு எரர் முறைகளைக் கையாளவேண்டியிருக்கும் என்று சொல்லும் ஆசிரியர், அந்த முயற்சிகளை எடுக்கத் தவறி விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு புத்தகத்தை நிறைவு செய்துள்ளார்.

பணியிடத்தில் சுகமான நாள்கள் குறைவாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், சுகமான நாள்களை உருவாக்கிக்கொள்வது எப்படி என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் படித்துப் பயன்பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்