Published:Updated:

கடலோரத்து ஒற்றைப்பனை

கடலோரத்து ஒற்றைப்பனை
பிரீமியம் ஸ்டோரி
கடலோரத்து ஒற்றைப்பனை

குமார செல்வா

கடலோரத்து ஒற்றைப்பனை

குமார செல்வா

Published:Updated:
கடலோரத்து ஒற்றைப்பனை
பிரீமியம் ஸ்டோரி
கடலோரத்து ஒற்றைப்பனை

மலான் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று இயற்கை எய்துபவர்கள் ‘பரக்கத்’ (நல்மரணம்) அடைவார்கள் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. மே 10-ஆம் தேதி அதிகாலை நேரம் அல்லா அளப்பரிய இரக்கங்களினால் தனது சொர்க்க வாசலைத் திறந்து தோப்பில் முகம்மது மீரானைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

மீரான் பிறந்த தேங்காய்ப்பட்டணம் பண்டைத் தமிழகத்தின் 49 சிறுநாடுகளில் ஒன்றான தெங்கநாட்டின் தலைநகரமாகும். ‘தென்பத்தன்’ என்று அரேபிய அறிஞர்களாலும், ‘தென்பட்டணம்’ என்று பாலகவி பக்கீர் சாகிபு புலவராலும் சிறப்பிக்கப்பட்டது. அரபிக் கடலோரத்தில் அமைந்த அதன் கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு வீதிதான் தோப்பு. அதையே அடையாளமாகக் கொண்டு தன் எழுத்துகளில் ஊரின் அலாதியான இயற்கையையும், மனிதர்களின் தலைமுறை உலகங்களையும் வரைந்து காட்டியவர் தோப்பில்.

கடலோரத்து ஒற்றைப்பனை

குளச்சல் போருக்கு இன்றும் ஆதாரமாகத் திகழும் உண்டவிட்டான் (குண்டுவிட்டான்) பாறையும், போரில் மடிந்த டச்சுவீரர்களின் செமித்தேரியும், ஆனைப்பாறையும், சேண்டப்பள்ளியும், கொச்சத்திமூலையும் (சமணஸ்தலம்), வலியாறு, புத்தனாறு, குழித்துறை ஆறுகளும் மீரான் கைவண்ணத்தில் புதுப்பிறவி எடுத்தன.

இஸ்லாமியர்கள் என்றால் வெளிநாட்டுப் பணத்தில் உயர்ந்த வீடுகளும், சாலையில் வழுக்கும் விலையுயர்ந்த கார்களும், நறுமணவாசனைத் திரவியங்களும் எனப் பழகிப்போன சாமானியனின் மனநிலையிலிருந்து விலகி, வறுமையும் நோயும் பீடித்து அறியாமையும் சேர்ந்து தகர்ந்துபோன ஒரு வாழ்வியலை வெளியுலகுக்குத் தன் எழுத்துகளால் காட்டித் தந்தவர் மீரான்.

தந்தை எம்.ஓ.முகம்மது அப்துல் காதர் பனையோலை சுமந்து விற்றும், சுறாப்பீலி, கணவாய் நாக்கு, கடற்சங்கு வாங்கி விற்றும் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதர். ஊர்த்தலைமையின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை இஸ்லாமியர்களின் பாடுகளை எழுத வேண்டும் என்ற உணர்வு தந்தையிடமிருந்து மகனுக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

தன்னுடைய நாவல்களில் வரும் அகமதுகண்ணு, ஐதுரூஸ், ஈனாபீனாகூனா, பரீதுப்பிள்ளை போன்ற முதலாளிகளும், இவர்களுக்கெதிரான மஹ்மூது, மெகபூப்கான், காசிம் போன்ற கலகக்காரர்களும் மீரான் தனது சொந்த வாழ்க்கையிலிருந்து பெற்ற கதைமாந்தர்கள் ஆவர்.

மூடுண்ட ஒரு சமூக அமைப்பில் ஏழை மக்களை இறைநம்பிக்கையாலும், பழக்கங்களாலும் முதலாளிகளுக்கு அடிமைப்படுத்தும் மதப்பண்டிதர்களான இம்பிச்சிகோயா தங்ஙள், கல்லுண்டி மம்மூதுகோயா, மடாயிபாவா, குத்தூஸ் தம்பிலெப்பை ஆலிம்  போன்ற பாத்திரங்களும் மீரான் வைத்த சுவாரசியம் ததும்பும் விமர்சனங்களாகும்.

காலம் கடந்து செல்லும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத சமூகத்தின் மீது அவர் வைத்த விமர்சனங்களால் வெகுண்டு எதிராகச் செயல்பட்டவர்களையும் தன்னை ஏற்கச் செய்தவர் மீரான். இஸ்லாமிய சமூகத்தில் நிகழ்ந்த நல்ல பல மாற்றங்களுக்கு இவருடைய எழுத்துகள் துணைநின்றதுண்டு.

‘சாய்வு நாற்காலி’ நாவலில் கடலோரத்து ஒற்றைப்பனைமரம் ஒன்றை இவ்வாறு சித்திரிப்பார். “முதல் உலகப்போர் நடக்கும்போது தென்பத்தன் கிராமத்தையே நடுங்க வைத்த சூறாவளிக் காற்றிலும் இந்த ஒற்றைப்பனை சாயவில்லை.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோப்பில் முகம்மது மீரானும் சாயமாட்டார்.