திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

ஏன் கழுவினாள் குழந்தைகளை? - சிந்தனை விருந்து!

ஏன் கழுவினாள் குழந்தைகளை? - சிந்தனை விருந்து!
பிரீமியம் ஸ்டோரி
News
ஏன் கழுவினாள் குழந்தைகளை? - சிந்தனை விருந்து!

தென்கச்சி சுவாமிநாதன், ஓவியம்: சேகர்

ந்தத் தெருவில், குழந்தைகள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர்.

பக்கத்தில் ஒரு சாக்கடை. அதில் சிலர் தவறி விழுந்துவிட்டார்கள். தாய்மார்களில் ஒருத்தி அதைக் கவனித்துவிட்டாள். பதறிப்போய் ஓடி வந்தாள்.

எல்லா குழந்தைகளையும் தூக்கி வந்தாள். தெரு ஓரம் இருந்த குழாயைத் திறந்துவிட்டு, எல்லா குழந்தைகளையும் கழுவி சுத்தப்படுத்தினாள். அவர்களின் முகத்தைத் துடைத்துவிட்டாள்.

இதற்குள் செய்தி கேள்விப்பட்டு எல்லாத் தாய்மார் களும் அங்கே ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் குழந்தைகள் அனைவரையும் அந்தப் பெண்மணியே சுத்தம் செய்திருந்தாள். அந்தக் குழந்தைகளின் தாய் மார்கள், அவளை நன்றிப்பெருக்குடன் பார்த்தார்கள்.

ஏன் கழுவினாள் குழந்தைகளை? - சிந்தனை விருந்து!

அவளுக்கு நன்றி கூறும் விதமாக, ‘`எல்லா குழந்தைகளையும் பாகுபாடு இல்லாமல் குளிப்பாட்டி சுத்தப்படுத்திய உங்களது சேவையைப் பாராட்டு கிறோம்!’’ என்றனர்.

உடனே, ‘`நான் அப்படி செஞ்சதுக்கு இன்னொரு காரணமும் உண்டு!’’ என்றாள் அவள்.

‘`என்ன அது?’’

‘`எல்லா குழந்தைகளையும் கழுவினாத்தானே, என் குழந்தையை அடையாளம் காண முடியும்’’ என்றாள் அவள்!

நண்பர்களே...

தன் குழந்தை எது என்பதைக் கண்டுபிடிப்பது அந்தத் தாயின் நோக்கம்.

`நான் யார்’ என்பதைக் கண்டுபிடிப்பதுதான் ஆன்மிகத்தின் நோக்கம். உள்ளே இருக்கிற நமது உண்மையான முகம் நமக்கு அடையாளம் தெரிய வேண்டுமானால், அதை மூடி மறைத்திருக்கிற வேண்டாத சில அழுக்குகளை நாம் அப்புறப்படுத்த வேண்டி இருக்கிறது.

அந்த அழுக்குகள் எவை?

ஆணவம்... பொறாமை... பேராசை!

ஆன்மிகம் என்கிற நல்ல நீரைக்கொண்டு உங்களையும் இந்த சமுதாயத்தையும் கழுவுங்கள். அப்போது, நீங்கள் எவ்வளவு அழகானவர் என்பதும், இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதும் உங்களுக்குப் புரியும்!

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.இந்த உலகத்தில் வாழ்வதற்குப் பொருள் வேண்டும்;

வாழ்வதிலும் பொருள் வேண்டும்!

(18.6.08 இதழிலிருந்து...)