நீங்கள் எப்படிப்பட்ட பிசினஸ்மேன்..? லாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பிசினஸ் செய்பவரா அல்லது லாபம் மற்றும் சமூக நோக்கம் என இரண்டையும் கவனத்தில்கொண்டு பிசினஸ் செய்பவரா?

நீங்கள் எப்படிப்பட்ட பிசினஸ்மேனாக இருந்தாலும் உங்களை மேம்படுத்திக்கொள்ள டேனியல் லுபெட்ஸ்கி என்பவர் எழுதிய `டு தி கைண்ட் திங்க்’ என்கிற புத்தகம் உங்களுக்கு உதவக்கூடும்.

``எல்லைகள் இல்லாச் சிந்தனை செய்யுங்கள். உயரிய குறிக்கோளுடன் பணியாற்றுங்கள். உணர்வுபூர்வமான உற்சாகத்துடன் வாழுங்கள்’’ என்று சொல்லும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், `கைண்ட் ஸ்நாக்ஸ்’ என்னும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாத ஸ்நாக்ஸ் வகை உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

``சிறு வயதிலிருந்தே நான் ஒரு பிசினஸ்மேன். அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு மேஜிக் ஷோ நடத்திக் காண்பித்து காசு பார்ப்பேன். சட்டம் படித்து முடித்த நான், வால்ஸ்ட்ரீட்டில் கிடைத்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, சுயதொழில் தொடங்கியுள்ளேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மக்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும்; போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த உலகில், அவற்றை அகற்றும்வண்ணம் மக்களுக்கிடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பெரும் கனவு. வெற்றிகரமான ஒரு பிசினஸை நிறுவி, அதன்மூலம் இதை நடைமுறைப்படுத்த முடியும் என்ற எண்ணம், என் மனதில் ஆழப் பதிந்திருந்தது.

`லாப நோக்கத்துக்காக மட்டுமல்ல’ என்ற குறிக்கோளுடன் ஒரு பிசினஸைத் தொடங்கி நடத்தவேண்டும் என்பதே என்னுடைய தீராத ஆவல். நல்ல நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, சிறப்பாகத் தொழில் செய்யும் அதே சமயத்தில், அதன்மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மனிதர்கள் வாழ்வு மேம்படுவதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை.

வருடம் 1994. அன்னையர் தினத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில், காலையிலேயே டெலிபோனுக்கு அருகே மிகவும் ஆவலாக அமர்ந்திருந்தேன். ஏனென்றால், அன்றைய தின செய்தித் தாள்களில் நான் புதிதாக ஆரம்பித்த சருமப் பராமரிப்புக்கான பொருள்கள் விநியோகம் செய்யும் பிசினஸ் குறித்த விளம்பரம் வரவிருந்தது. பல்வேறு சருமப் பராமரிப்புக்கான பொருள்களை ஒரு பரிசுப்பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்தால், அன்னையர் தினத்துக்கு அனைவரும் ஓடோடி வந்து பரிசளிப்பதற்காக வாங்கிச் செல்வார்கள் என்பது என் எதிர்பார்ப்பு.

`அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவுக்கான மிகச் சிறந்த பரிசு’ என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்திருந்தேன். என்னுடைய அலுவலகம், நான் குடியிருக்கும் சிறிய அப்பார்ட்மென்ட்டில் ஒரு பகுதியாக இருந்தது. விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, எக்கச்சக்கமாக ஆர்டர் வந்தால், எப்படிச் சமாளிப்பது என்பதே அப்போதைக்கு என் கவலை.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

சருமப் பராமரிப்புப் பொருள்களை உற்பத்தி நிறுவனங்களிடம் ஆர்டர்கள் போட்டாகி விட்டன. எந்த நேரத்திலும் டெலிவரி வந்து சேரலாம் என நினைத்துக்கொண்டிருக்கும் போதே, என்னுடைய அப்பார்ட்மென்ட்டின் இன்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசினால், லாரி டிரைவர், ‘சார், நீங்கள் ஆர்டர் செஞ்ச பொருள் வந்தாச்சு. பொருளை எங்கே இறக்கி வைக்கணும்’ என்று கேட்டார்.

இந்தத் துறையில் முன்அனுபவம் இல்லாததால், `பார்சலை, மாடியில் உள்ள அப்பார்ட் மென்ட்டுக்குக் கொண்டுவந்துவிடுங்கள்’ என்று சொன்னேன். டிரைவரோ, `நீங்கள் கொஞ்சம் கீழே வரமுடியுமா?’ என்றார்.

கீழே சென்று பார்த்தபிறகுதான் புரிந்தது, வந்திருப்பது ஒரு லாரி லோடு பொருள் என்று. நானும் டிரைவரும் கஷ்டப்பட்டு அனைத்தையும் என்னுடைய குருவிக்கூடு மாதிரியான வீட்டுக்குக் கொண்டுபோய் அடுக்கிவிட்டோம்.

வீடு முழுவதும் அட்டைப்பெட்டிகள். கட்டிலில் படுத்துக்கொண்டு அட்டைப் பெட்டி களைப் பார்த்தால், தலையில் விழுந்து விடுமோ எனத் தோன்றும் அளவுக்கு உயரமாக அடுக்கிவைத் திருந்தேன். என் வாழ்க்கையை என் தொழில் ஆக்கிரமித்துக்கொண்டது என்று சொன்னால், அது மிகச் சரியாக இருக்கும் அல்லவா!

ஒரு வாரம் போனது. அன்னையர் தினமும் முடிந்துபோனது. ஆனால், வாடிக்கையாளர்தான் வரவேயில்லை. விளம்பரத்தைப் பார்த்து யாரும் போன்கூட செய்யவில்லை. ‘அன்னையர் தின பரிசுப்பெட்டி என்பது சூப்பர் ஐடியா. போன்கால்களை பேசி ஓயாது’ என்ற கனவில் இருந்த எனக்கு, மரண அடியாக அது இருந்தது.

என்னுடைய சேமிப்பு எல்லாம் அட்டைப் பெட்டிக்குள்ளும், அட்டைப்பெட்டிகள் வீட்டுக்குள்ளும் நிறைந்து கிடந்தது. பயம், மனதைக் கவ்வ ஆரம்பித்தது. வியாபாரம் பூஜ்ஜியமாக இருந்ததால், அடுத்த மாதம் வாடகை கொடுப்பது எப்படி என்ற கேள்வி மனதில் தோன்ற ஆரம்பித்தது. என்னுடைய பெற்றோர் என்ன நினைப்பார்கள் என்பதை நினைத்தால், அழுகையாக வந்தது. கஷ்டப்பட்டு கடனை வாங்கிப் படிக்கவைத்து, என்னுடைய குடும்பத்தில் முதல் பட்டம் பெற்றவன் என்ற நிலையை உருவாக்கினார்கள் அவர்கள். சட்டம் படித்து விட்டு அதை வீணடித்துக்கொண்டிருக்கிறேன் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியது. குற்ற உணர்வு என்னை வாட்டியது. அந்த வார இறுதியில் நான் கொஞ்சம் சாம்பிள் பொருள்களை என்னுடைய பெட்டியில் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி விற்பனை செய்வதற்காகப் புறப்பட்டேன்’’ என்றவரின் வாழ்க்கையில் அடுத்து அவர் கற்றுக்கொண்ட பாடம்தான் திருப்புமுனையாக அமைந்தது. எந்தப் பொருளை நீங்கள் விற்பதாக இருந்தாலும் அதை அன்புடன் விற்றால், வாங்க விரும்பாதவர்கள்கூட உங்கள் பொருளை வாங்குவார் என்பதுதான் அந்தப் பாடம்.

அன்பான வெற்றி

‘‘சருமப் பராமரிப்பு விநியோகத்தில் ஆரம்பித்த நான், இன்றைக்கு `கைண்ட்’ எனும் ஸ்நாக் ஃபுட் கம்பெனியை அமெரிக்காவில் நடத்துகிறேன். ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான ஸ்நாக் பார்களை விற்றுவிட்டோம். ஒரு லட்சத்துக்கும் மேலான கடைகளில் எங்களுடைய தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று என்றால், பெயரைப் போன்றே நிறுவனமும் அன்புடன் செயல்பட்டதால்தான். ஒரு தொழில் நிறுவனம் இதைச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாத அன்பான காரியங்களைச் செய்ததால் மட்டுமே, நாங்கள் இன்றைக்குக் கிட்டத்தட்ட ஒரு மில்லி யனுக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்குச் சேவையை வழங்கிவருகிறோம்.

ஸ்நாக்ஸ் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலில், இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஒன்று, மனிதர்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் பொருள்களைத் தயாரிப்பது. மற்றொன்று, நல்ல சுவையான பண்டத்தைத் தயாரிப்பது. இந்த இரண்டும் எதிரெதிர் துருவங்களைப் போன்றது. இதுவா, அதுவா என்பதே கேள்வியாக இருக்கும் இந்தத் துறையில், நாங்கள் இதுவும் அதுவும் இணைந்த வகை என்று இரண்டு விஷயங்களையும் இணைத்தே வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். `KIND BrAND’ என்பதைக் (AND) கொள்கையாகக்கொண்டு இந்த இரண்டு விஷயங்களையும் கருத்தில்கொண்டு செயல்படுவதை நாங்கள் சொல்ல ஆரம்பித்தோம்.

லாபம் மட்டும் நோக்கமல்ல

நல்ல விஷயங்களைத் தருவது சுலபமான காரியமல்ல. ஆரம்பத்தில், அதுவும் குறுகிய காலத்தில் மிகப் பெரிய சறுக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். `AND’ என்ற எண்ணத்துடன் செயல்பட ஆரம்பிக்கும்போது லாபம் மட்டுமே எனும் குறுகிய நோக்கம் வெளியேற ஆரம்பிக்கும். நல்லதை மட்டுமே தரவேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படும்போது, அதற்கான செலவினங்கள், அதிகப்படியான முதலீடுகள் உற்பத்தி செய்யத் தேவையான வசதிகள் போன்றவையெல்லாம் அதிகரிக்க ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை. செலவைக் குறைக்க நினைத்தால், லாபம் மட்டும் என்ற நோக்கம் தோன்ற ஆரம்பித்து, பல குறுக்குவழிகள் கிடைக்கும். ஆனால், உடல் ஆரோக்கியமும் என்பதைக் கருத்தில்கொண்டு செயல்பட ஆரம்பிக்கும்போது மட்டுமே பல்வேறு விவாதங்களும் புதுமை படைக்கும் சிந்தனைகளும் அதிகரிக்கும் செயல்திறன் எங்களுக்குள் உருவானது” என்றார் ஆசிரியர்.

‘AND’ என்னும் வரைமுறை

``தொழில்முனைவு என்பது, வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்படுவதில் இருக்கிறது. சமூகச் சிந்தனையுள்ள தொழில்முனைவோர்கள் சமூகத்தில் இருக்கும் சிக்கல்களைக் கண்டறிந்து அதை நீக்கப் பாடுபடுகின்றனர். பிசினஸ் சிந்தனையுள்ள தொழில்முனைவோர்கள், சந்தையில் இருக்கும் இடைவெளியைக் கண்டறிந்து அதற்கான தயாரிப்புகளைத் தந்து லாபம் சம்பாதிக்க முயல்கின்றனர். `AND’ என்ற வரைமுறை சமூகப் பிரச்னையைத் தீர்க்கவும் அதே சமயம் ஓரளவு லாபம் பார்க்கவும் முயல்வது எப்படி என்று யோசிக்க வைக்கிறது.

தடைகளைத் தாண்டி...

எதற்காக நம்முடைய நிறுவனம் இருக்கிறது என்பதைத் தீர்க்கமாகத் தெளிவுபடுத்திக் கொண்டால், எந்தச் சூழ்நிலையிலும் மனஉறுதி குறையாது. நம்முடைய பிராண்டை வாடிக்கை யாளர்கள் இந்தெந்த விஷயங்களுக்காகக் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். அதனால் நாம் நம்முடைய பிராண்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு நிறுவனங்கள் செயல்படவேண்டும்.

பிராண்ட், தயாரிப்புகளின் பெயர், வாடிக்கையாளர்களுக்குச் செய்யும் சத்தியம் போன்ற அனைத்திலுமே எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் தயாரிக்கும் பொருளை அன்புடன் விற்பனை செய்தால், தடைகள் பலவற்றையும் தாண்டி நீண்ட காலம் உங்கள் நிறுவனம் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை” என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

லாபம் பார்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இன்றைய வியாபார உலகில், நியாயமாகச் செயல்படுவதின் அவசியத்தை எடுத்துரைக்கும் இந்தப் புத்தகத்தைத் தொழில் முனைவோர் அனைவரும் ஒருமுறை அவசியம் படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்