அமெரிக்க எஃப்.டி.ஏ (FDA) எந்த நேரத்தில் என்ன சொல்லி விடுமோ என்கிற பயம் இந்திய மருந்துத்துறை நிறுவனங்களுக்கு எப்போதுமே இருக்கும். இந்தப் பயத்தை இன்னும் அதிகமாக்குகிறமாதிரி, சமீபத்தில் ஒரு புத்தகம் வெளியாகி, மருந்து தயாரிக்கும் இந்திய நிறுவனங்களுக்கு மேலும் கிலி ஊட்டியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரீன் எபான் என்ற புலனாய்வுப் பத்திரிகை யாளர் எழுதிய ‘பாட்டில் ஆஃப் லைஸ்’ (Bottle of lies) என்ற புத்தகம் அமெரிக்கத் தொழில் துறையில் மட்டுமல்லாது, இந்தியத் தொழில் துறையிலும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் கேத்ரீன் எபான் அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்?

அமெரிக்காவின் மருந்துக்கடை

அமெரிக்காவில் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பொதுவான மருந்துகளின் (Generic) தரத்தில் பல்வேறு மோசடிகள் நடந்துவருகின்றன என்பதைப் பற்றி பரபரப்பாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். அமெரிக்காவில் நுகரப்படும் பல பொதுவான மருந்துகள் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, இந்தியாவி லிருந்துதான் அதிகப்படியான மருந்துகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாதான் அமெரிக்காவின் மருந்துக் கடை என்று சொல்லும் அளவிற்கு இந்திய மருந்துகள் அங்கே புழக்கத்தில் உள்ளன.

இப்படி இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் மருந்துகளின் தரத்திலும், அவற்றைத் தயாரிக்கும் தொழிற் சாலை களின் தரத்திலும், தயாரிப்பு முறைகளிலும் பல கோளாறுகள் இருக்கின்றன; அமெரிக்காவின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.டி.ஏ-வினால் இதுபோன்ற தரக் குறைபாடுகளை முழுவது மாகக் கட்டுப்படுத்த முடிய வில்லை என்பதுதான் இந்தப் புத்தகத்தை எழுதிய கேத்ரீன் முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு.

ஊழியரின் வாக்குமூலம்

தன்னுடைய குற்றச்சாட்டு களுக்கு ஆதாரமாகப் புகழ் பெற்ற ஓர் இந்திய மருந்து நிறுவனத்தின் முன்னாள் ஊழியரின் வாக்குமூலத்தை முன்வைக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர். அந்த இந்திய மருந்து நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், தான் வேலை பார்த்த மருந்து நிறுவனத்தில் நடக்கும் தரக் குளறுபடிகளைக் கண்டு பொறுக்க முடியாமல் நிறுவனத்திடம் பலதடவை முறையிட்டுள்ளார். ஆனால், பலன் ஏதும் இல்லாததால், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, தான் பார்த்த தர மோசடிகளை எஃப்.டி.ஏ அமைப்பிடம் எடுத்துச் சொல்லி வாக்குமூலம் தந்தார். அதையடுத்து பலகட்ட விசாரணைகள், வழக்குகள் என்று இந்த விஷயம் பயணித்தது.

வெறும் கண்துடைப்பு

இந்திய மருந்து நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகள் மற்றும் மருந்து தயாரிப்பின் தரம் குறித்த விஷயங்களில் எஃப்.டி.ஏ-வின் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்புதான் என்றும் குற்றம்சாட்டுகிறார். மேலும், எஃப்.டி.ஏ-வின் நேரடி ஆய்வுகளும் இதுபோன்ற தர மோசடிகளைப் பெரிய அளவில் தடுக்க முடியவில்லை என்று வாதிடுகிறார். இதுபோன்ற நேரடி ஆய்வுகள் என்பது திடீர் ஆய்வுகள் என்றில்லாமல், முன்கூட்டியே சொல்லிவிடுவதால், மருந்து நிறுவனங்கள் முன்கூட்டியே தயாராகி, தங்கள் தவறுகளை எளிதாக மறைத்துவிடுகின்றன என்று குற்றம் சாட்டுகிறார் எபான்.

முறையற்ற குற்றச்சாட்டு

கேத்ரீன் எபான் தனது புத்தகத்தில் சொல்லியிருந்த கருத்துகள் அத்தனையையும் முற்றிலுமாக மறுத்திருக்கிறது இந்திய மருந்து நிறுவனத் துறை ஏற்றுமதிக் கூட்டமைப்பு. புத்தகத்தின் ஆசிரியர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறிப்பிட்ட நிறுவனத்தில் ஏற்பட்ட தவறுதான். இதற்காக ஒட்டுமொத்த இந்திய மருந்துத் துறையையே குற்றம்சாட்டுவது முறையாகாது என்று சொல்லியிருக்கிறது.

இந்திய மருந்து நிறுவனத் துறை சொல்வதிலும் நிறைய உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. கடந்த காலங்களில் அதாவது, பதினைந்து ஆண்டுகளுக்கோ அதற்கு முன்போ இதுபோன்ற கடுமையான தர ஆய்வுகள் இருந்ததில்லை. என்றாலும், சமீப காலமாக எஃப்.டி.ஏ-வின் தர ஆய்வுகள் மிகக் கடுமையாக நடந்து வருகின்றன. இந்தியாவின் மருந்து ஏற்றுமதிகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதால், தர ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. அமெரிக்க மருந்துத் தேவையில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 45% ஆக இருப்பதால், எஃப்.டி.ஏ அமைப்பின் ஆய்வுகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேசத் தரத்துக்கு...

மருந்துத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் பல இந்திய நிறுவனங்கள் தங்களின் மருந்து மற்றும் மருந்து தயாரிப்புகளின் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தியுள்ளன என்பதே பல நிபுணர்களின் கருத்து. மேலும், பல நிறுவனங்கள் பங்குச் சந்தை பட்டியலில் இருப்ப தால், தரம் சார்ந்த சிறு பிரச்னைகள் எழுந்தால்கூட, அந்த நிறுவனங்களின் எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கும் என்பதை அந்த நிறுவனங்கள் உணர்ந்து வைத்துள்ளன.

குறைந்துவரும் புகார்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்களும் இந்த தரக் கோளாறு குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும்விதமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ஓ.ஏ.ஐ எனப்படும் அதிகாரபூர்வ நடவடிக்கை சுட்டிக்காட்டலானது வெகுவாகக் குறைந்துள்ளது. உதாரணமாக, 2018-ல் இந்தியாவில் மொத்தம் 174 எஃப்.டி.ஏ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஏழு மட்டுமே ஓ.ஏ.ஐ வளையத்திற்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதாவது, ஓ.ஏ.ஐ என்பது கட்டுப்பாட்டு அமைப்பின் நேரடி நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் என்பது பொருள். மீதமுள்ளவற்றில் 91 ஆய்வுகளுக்கு சுயநடவடிக்கை தேவை என்றும் 76 ஆய்வுகளுக்கு எந்தவிதமான நடவடிக்கையும் தேவையில்லை என்பதுமே கடந்த ஆண்டின் நிலை. ஆகவே, இந்தியாவின் மருந்துப் பங்களிப்பு அதிகரிக்க அதிகரிக்க, எஃப்.டி.ஏ-வின் தர ஆய்வுகளும் கூடிக்கொண்டே செல்கிறது. இந்திய மருந்து நிறுவனங்களும் அவற்றுக்கு ஏற்ப தங்களது தரத்தில் பல மாற்றங்களைச் செய்துவருகின்றன.

கடந்த ஆண்டில் எஃப்.டி.ஏ-வின் ஆய்வுக் கூடங்கள் வெளிநாட்டிலிருந்துவந்த 323 மருந்து களின் மாதிரிகளைத் தர ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் இந்தியாவைச் சேர்ந்தவை. ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட 323 மருந்து மாதிரிகளும் எஃப்.டி.ஏ-வின் பல்வேறு தர ஆய்வுகளில் வெற்றி பெற்றுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும்.

கேத்ரீன் எபான் போன்ற நிறைய பேர் அமெரிக்காவில் மருந்துத் துறைக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கின்றனர் என்பது கடந்த கால நிகழ்வுகளைப் பார்த்தாலே தெரியும். மேலும், கடந்த காலங்களில் மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள், முக்கியமாக மருந்து விலை விஷயத்தில் மருந்து நிறுவனங்களின்மீது பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிருப்தி நிலவிவந்தது உண்மை. அதன் காரணமாக மருந்து நிறுவனங் களின்மீது மக்களுக்கு எப்போதுமே ஒரு சந்தேகப் பார்வை இருந்ததால், இதுபோன்ற மருந்துத் துறை புலனாய்வுகள் எப்போதுமே மக்களிடம் பரபரப்பாக பேசப்படும்.

ஆனால், இந்தியாவில் இயங்கிவரும் மருந்து நிறுவனங்களின் தற்போதைய சூழலைப் பார்த்தால், அந்த நிறுவனங் களுக்கு எஃப்.டி.ஏ-வின் கிடுக்கிப்பிடிகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் தங்களின் மருந்து மற்றும் தயாரிப்பின் தரத்தை சர்வதேச அளவுக்குத் தொடர்ந்து உயர்த்தி வருவதைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.

மேலும், இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அமெரிக்கா ஒரு மிகப் பெரிய மருந்துச் சந்தை என்ற காரணத்தால், இந்திய மருந்து நிறுவனங்களும் தங்களின் பங்குக்குப் பலவித தர முன்னேற்பாடு களை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு நாடு களிலிருந்து குறிப்பாக, சீனாவிடமிருந்து வரும் போட்டியைச் சமாளிக்கவும் இந்திய மருந்து நிறுவனங்கள் தங்களின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தி வருகின்றன.

கேத்ரீன் எபான் போன்றவர்கள் மிகைப்படுத்தப் பட்ட குற்றச்சாட்டுகளைச் சொன்னாலும், எஃப்.டி.ஏ-வின் கழுகுக் கண் இந்திய மருந்து நிறுவனங்களின்மேல் இருப்பது அந்த நிறுவனங் களுக்கும் நல்லது. மருந்தை உபயோகிக்கும் மக்களுக்கும் நல்லது!