சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது பெற்ற கவிஞர் சபரிநாதனுக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டேயிருக்கின்றன. மகிழ்ச்சியின் மின்னல் தெறிக்க, உரையாடத் தொடங்கினார்.

“தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை என்கிற சிற்றூரில்தான் பிறந்தேன். 2011-ம் ஆண்டிலிருந்து பணிநிமித்தமாகச் சென்னையில் வசித்து வருகிறேன். பாரதி, பாரதிதாசன், வானம்பாடிக் கவிதைகள், கலீல் ஜிப்ரான், உமர்கயாம், ரூமி கவிதைகள் என மிக நீண்ட காலமாகக் கவிதைகள் மட்டும்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். பிறகு, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போதே அப்பா மற்றும் அப்பாவின் நண்பர்கள் மூலமாக மார்க்சிய நூல்கள் கிடைத்தன. அதுமூலமாகத்தான் வரலாறு, தத்துவம் சம்பந்தமான வாசிப்பு நிகழ்ந்தது. ஒருகட்டத்தில் கவிதைகளைவிட மார்க்சியம் சார்ந்து அதிகம் வாசிக்க ஆரம்பித்தேன். தத்துவார்த்தத்தின் மீது அதிக ஆர்வம் வரவும் மார்க்சிய நூல்கள்தான் துணைபுரிந்தன. கல்லூரிக்குப் பிறகுதான் புனைவுகளை வாசிக்க ஆரம்பித்தேன். எந்தத் துறை சார்ந்த நூல்கள் என்றாலும் அதுக்குள் உள்ளார்ந்து பயணம் செய்யப் பிடிக்கும்.”

“இலக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, சமூக வலைதளத்தில் எழுதுவது ஆகியவற்றிலிருந்து நீங்கள் விலகி இருப்பதுபோல் தெரிகிறதே?”

“இலக்கியக் கூட்டங்களுக்குப் போவது நல்ல விஷயம்தான். சமூக ஊடகங்களில் இயங்கக் கூடாது என்கிற கருத்தியல் நிலைப்பாடு எதுவும் இல்லை. பள்ளி, கல்லூரிக் காலங்களிலிருந்தே குரூப் மெயிலில் இருந்தது கிடையாது. என்னுடைய வேலையை நான் செய்துகொண்டிருக்கிறேன். அப்படிச் செய்யும் வேலையை இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. எனவே, சமூக ஊடகங்கள் தேவைப்படவில்லை.”

“எல்லாவற்றையும் பகடி செய்வது என்கிற மனநிலை இலக்கியத்துக்குள்ளும் வந்துவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பகடி மட்டும் போதாது. என் முதல் தொகுப்பில்கூட சீரியஸ்னெஸ் ரொம்பக் குறைவாக இடம்பெற்று, துடுக்குத்தனமும் விளையாட்டுத்தனமும்தான் அதிகமாக இருக்கும். எழுதி முடித்தபோது எனக்கே இது போதாது என்றுதான் தோன்றியது. பகடி செய்வதன் காலகட்டமாக இது இருக்கலாம். ஆனால், அதுவே முன்னுதாரணம் ஆகிவிடக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், பகடியைவிட சீரியஸ்னெஸ் கவர்ச்சிகரமாக இருக்கிறது. நாம் அதிகமாகப் பகடி செய்துகொண்டு, எல்லாத்தையும் சலிப்பூட்டக்கூடிய நிலைக்குக் கொண்டுபோய்விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பகடியை மட்டும் வைத்துக்கொண்டு நீண்டநாளுக்குக் கவிதை எழுத முடியாது. வெறும் பகடிக்குள் எழுதுவது முட்டுச்சந்துக்குள் சுற்றுவதுபோல்தான்.”

``கலை, இலக்கியப் பின்னணிகொண்ட கோணங்கி, தமிழ்ச்செல்வன், முருகபூபதி குடும்பத்தில் உறுப்பின ராகியிருக்கிறீர்கள். அதுகுறித்துச் சொல்லுங்கள்...’’

“ஹா ஹா... எழுத்தாளர்கள் ஒரு எழுத்தாளருக்கே தம் வீட்டுப்பெண்ணை மணம் செய்துகொடுப்பது ஆச்சர்யமான ஒன்று. இப்போதும் இது எனக்கு ஆச்சர்யம்தான். முதலில் இவர்களுக்கு வாசகனாகவும் மூத்த எழுத்தாளரை அணுகும் இளம் எழுத்தாளனாகவும் இருந்தேன். இப்போது உறவினராகவும் ஆகியுள்ளேன். அதே நேரம் இன்னும் வாசகனாகவும் இன்னும் இளம் எழுத்தாளனாகவும், இயல்பாக நிறைய எழுத்தாளர் களைச் சந்திக்க வேண்டி இருக்கும். லௌகீகக் குடும்பப் புரிதல் எதிர்பார்ப்பு குறித்த சிக்கல்கள் கிடையாது எனக்கு. இப்படி எழுத்தாளர்கள் கலைஞர்கள் நிறைந்த குடும்பப் பின்னணி கொண்ட என் மனைவிக்கு ஒரு எழுத்தாளர் விசித்திரமானவராகக் காட்சி அளிக்க மாட்டார் இல்லையா?”

“அடுத்து என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?”

“கவிதைத் தொகுப்பு ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். கூடுதலாக, Czeslaw milosz என்கிற அமெரிக்கக் கவிஞரின் கவிதைகளை மொழிபெயர்க்கும் பணியையும் தாஸ்தாயெவ்ஸ்கி நாவல் குறித்துக் கட்டுரை நூல் ஒன்றையும் எழுதி வருகிறேன்.”

- பச்சோந்தி; படம்:ப.சரவணகுமார்