Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ரலாறு அறியாத சமூகம், வரலாறு படைக்க முடியாது என்பது அறியப்பட்ட உண்மை. வரலாற்று ஆய்வு என்பது, வெறுமனே கடந்தகாலம் குறித்த தகவல்களைத் திரட்டுவது மட்டுமல்ல. சமகால வாழ்க்கை, வரலாற்றுத் தொடர்ச்சியின் எந்தக் கண்ணியில் இருக்கிறது என்பதைப் பரிசீலிக்கவும், எதிர்காலம் குறித்த கனவுகளை வார்த்தெடுக்கவும் அது உதவ வேண்டும். அவ்வகையில், தமிழில் வரலாற்று ஆய்வுகள் இன்னும் வளமை பெற வேண்டும்.

தலையங்கம்



வரலாறு குறித்துப் பேசும்போது, இரண்டு அம்சங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். கடந்தகால வரலாறு குறித்து எழுதப்படுபவை எல்லாமே நூறு சதவிகித உண்மைகள் அல்ல. கடந்தகாலத்தை நூறு சதவிகிதம் அறிந்து பதிவதென்பது மனித எத்தனங்களுக்கு அப்பாற்பட்டது. கிடைத்த வரலாற்றுத் தரவுகளைக்கொண்டு விருப்பு வெறுப்பு சாய்வுகளுக்கு அப்பால் எழுதப்படும் வரலாற்றுப் பதிவுகளே, சாத்தியப்பட்டவரை கடந்தகாலம் குறித்த குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளிக்கின்றன. அறிவியல் முடிவுகள்  எப்படிப் புதிய புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மாற்றமடைகின்றனவோ அதேபோல் ‘வரலாற்று உண்மைகளும்’ புதிய தரவுகள் ஆதாரங்களின் அடிப்படையில் மாற்றமடையவே செய்யும். எனவே, ‘வரலாற்று உண்மைகள்’ என்பதே சாத்தியத்தின் அருகில் நிற்கும் வசதிக்குட்பட்ட வார்த்தைதான்.

மேலும், வரலாறு என்பது ஒருபடித்தானது அல்ல. மன்னர்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட அரச வரலாறு, ஏகாதிபத்திய நலன்களுக்கேற்ப எழுதப்பட்ட காலனிய வரலாறு, வர்க்கப் பார்வையின் அடிப்படையில் எழுதப்பட்ட மார்க்சிய வரலாறு என்று வரலாறெழுதியலில் பல வகைகள் உள்ளன. இவ்வாறான ‘மைய வரலாற்று’ ஆய்வுகள், வாய்மொழி வரலாறுகளையும் மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், கதைப்பாடல்கள் ஆகியவற்றில் படிந்திருக்கும் நுண்வரலாற்றுக் கூறுகளையும் கணக்கில்கொள்வதில்லை. இந்த விமர்சனத்தின் அடிப்படையில் எழுந்தவைதாம் ‘விளிம்புநிலை வரலாற்று’ ஆய்வுகள்.

ஒடுக்கப்பட்டோர் பார்வையிலிருந்து வரலாற்றை அணுகும்போது, அது எல்லோருக்கும் உவப்பான கருத்துகளை அளிப்பதில்லை. வரலாறு என்பது முடிந்துபோனதல்ல; ஆய்வுகளின் வழியாகவும் விவாதங்கள், விமர்சனங்கள் வழியாகவும் தொடர்ச்சியாகக் காலந்தோறும் கடத்தப்படுவது என்கிற அணுகுமுறை எல்லோருக்கும் அவசியம். வரலாற்றை அணுகவும் ஆயவும்  எழுதவும் பேசவும் விவாதிக்கவும் விமர்சிக்கவும் எல்லோருக்குமான ஜனநாயக வெளியை நாம் வளர்த்தெடுக்க வேண்டியது காலத்தின் அவசியம்!

- ஆசிரியர் 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism