அஞ்ஞை

சருகோ இறகோ கோபுர நிழலோ
மழைநீர்த் தேங்கலில்
விழுவதெல்லாம் ஓவியமாகிவிடுகிறது
அம்மாவுக்கு

திமிறும் அருவிக்கு தாயத்து கட்டி
அடக்கப் பார்க்கும் சிட்டுக்குருவியாகிறாள்

கருகி விழும் இந்த விண்கல் வாழ்வை
பஞ்சுக் கொட்டையாக்கி ஊதத் தருகிறாள்

மகளின் கறைபடிந்த ஆடை கண்டு
கண் சிமிட்டிச் சிரித்தபின்
கசக்கித் தோய்க்கிறாள் ஆயாசமாய்

குளவிக் கொடுக்கு வாழ்வை நேசிக்கிறவள்தான்
சொல்கிறாள்
அறுந்துபோன பல்லி வால்
துளிர்க்கிற கதையையும்

குழந்தைகள் தூங்கியதும்
நட்சத்திரங்களோடு அழுகிறவளின் கண்ணீர்
விடிந்ததும் தும்பைப் பூக்களாகி
செடிகளில் ஒட்டிக்கொள்கின்றன.

- ஜெயநதி

கதவின் பின்னால் ஒரு துர்மரணம்

நான் தட்டாமல் விட்ட
ஏதோ ஒரு கதவுக்குப் பின்தான்
அந்த யாரோ அவள்
தொங்கிக்கொண்டிருக்க
வேண்டும்

பிறழ் எண்ணில்
தற்கொலை செய்யப் போவதாக
வந்த அழைப்பின் அழுகையை
துருப்புச்சீட்டாக வைத்து
இன்னமும் அந்த வீதியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்

அலைந்து திரிந்து கனத்து இப்போது
பதற்றத்தோடு நின்றுவிட்ட
எனைச் சுற்றி அடுத்தடுத்து
காற்றில் பல கதவுகள்
முளைத்துக்கொண்டிருந்தன

ஒரு மரணத்துக்கும்
ஒரு வாழ்வுக்குமான இடைவெளியை நிரப்ப
ஏதோ ஒரு கதவு போதுமானதாயிருக்கிறது...!

- கவிஜி

குடை நினைவுகள்

சாலை ஓரத்தில்
குடைகளை வரிசையாக விரித்து
விற்பனை செய்யும் வியாபாரி
ஒரு காலக்கோழி.

சிறுவயதில்
தலையில் அணிந்த குடையால்
மழைத்தாரைகளை
எம்பி எம்பி முட்டியிருக்கிறேன்.

முளைக்கயிற்றை அறுத்தோடிய மாட்டை இழுத்து வருவதைப்போல
பெருங்காற்றோடு போராடி
குடையை இழுத்துத் திருப்பியிருக்கிறேன்.

அத்தை வீட்டுக்குக் கொடுத்து
திரும்பி வராத குடையைக் குறித்து இன்னமும் குறைப்பட்டுக்கொள்வாள் அம்மா.

அப்பா விரும்பிய விசாலமான குடை
அவருக்கு அமையவேயில்லை.

சுப்புலட்சுமி டீச்சரின் கைப்பையில்
அடக்கமாக ஒரு குடை உறங்கும்.

மாடசாமி பாட்டையாவுக்கு
குடை ஒரு கைத்தடி.

கிழிந்த குடை தைக்கும்
இஸ்மாயில் பாய்
ஏதோ வானத்தையே தைத்தாற்போல பெருமைப்படுவார்.

இரையைத் தேடி
நிலத்தைக் கிளறும் கோழியைப்போல
கடந்து செல்பவர்களின்
குடை ஞாபகங்களைக் கிளறுகிறார்
குடை வியாபாரி.

- முத்துக்குமார் இருளப்பன்

கூர்

நீரோடு நீராடி
முற்றும் துறந்து துறவியானது
தன் கூராடை களைந்த
ஆற்றின் கூழாங்கற்கள்..!

- ச.மோகனப்பிரியா

அஞ்ஞை

சருகோ இறகோ கோபுர நிழலோ
மழைநீர்த் தேங்கலில்
விழுவதெல்லாம் ஓவியமாகிவிடுகிறது
அம்மாவுக்கு

திமிறும் அருவிக்கு தாயத்து கட்டி
அடக்கப் பார்க்கும் சிட்டுக்குருவியாகிறாள்

கருகி விழும் இந்த விண்கல் வாழ்வை
பஞ்சுக் கொட்டையாக்கி ஊதத் தருகிறாள்

மகளின் கறைபடிந்த ஆடை கண்டு
கண் சிமிட்டிச் சிரித்தபின்
கசக்கித் தோய்க்கிறாள் ஆயாசமாய்

குளவிக் கொடுக்கு வாழ்வை நேசிக்கிறவள்தான்
சொல்கிறாள்
அறுந்துபோன பல்லி வால்
துளிர்க்கிற கதையையும்

குழந்தைகள் தூங்கியதும்
நட்சத்திரங்களோடு அழுகிறவளின் கண்ணீர்
விடிந்ததும் தும்பைப் பூக்களாகி
செடிகளில் ஒட்டிக்கொள்கின்றன.

- ஜெயநதி

கதவின் பின்னால் ஒரு துர்மரணம்

நான் தட்டாமல் விட்ட
ஏதோ ஒரு கதவுக்குப் பின்தான்
அந்த யாரோ அவள்
தொங்கிக்கொண்டிருக்க
வேண்டும்

பிறழ் எண்ணில்
தற்கொலை செய்யப் போவதாக
வந்த அழைப்பின் அழுகையை
துருப்புச்சீட்டாக வைத்து
இன்னமும் அந்த வீதியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்

அலைந்து திரிந்து கனத்து இப்போது
பதற்றத்தோடு நின்றுவிட்ட
எனைச் சுற்றி அடுத்தடுத்து
காற்றில் பல கதவுகள்
முளைத்துக்கொண்டிருந்தன

ஒரு மரணத்துக்கும்
ஒரு வாழ்வுக்குமான இடைவெளியை நிரப்ப
ஏதோ ஒரு கதவு போதுமானதாயிருக்கிறது...!

- கவிஜி

குடை நினைவுகள்

சாலை ஓரத்தில்
குடைகளை வரிசையாக விரித்து
விற்பனை செய்யும் வியாபாரி
ஒரு காலக்கோழி.

சிறுவயதில்
தலையில் அணிந்த குடையால்
மழைத்தாரைகளை
எம்பி எம்பி முட்டியிருக்கிறேன்.

முளைக்கயிற்றை அறுத்தோடிய மாட்டை இழுத்து வருவதைப்போல
பெருங்காற்றோடு போராடி
குடையை இழுத்துத் திருப்பியிருக்கிறேன்.

அத்தை வீட்டுக்குக் கொடுத்து
திரும்பி வராத குடையைக் குறித்து இன்னமும் குறைப்பட்டுக்கொள்வாள் அம்மா.

அப்பா விரும்பிய விசாலமான குடை
அவருக்கு அமையவேயில்லை.

சுப்புலட்சுமி டீச்சரின் கைப்பையில்
அடக்கமாக ஒரு குடை உறங்கும்.

மாடசாமி பாட்டையாவுக்கு
குடை ஒரு கைத்தடி.

கிழிந்த குடை தைக்கும்
இஸ்மாயில் பாய்
ஏதோ வானத்தையே தைத்தாற்போல பெருமைப்படுவார்.

இரையைத் தேடி
நிலத்தைக் கிளறும் கோழியைப்போல
கடந்து செல்பவர்களின்
குடை ஞாபகங்களைக் கிளறுகிறார்
குடை வியாபாரி.

- முத்துக்குமார் இருளப்பன்

கூர்

நீரோடு நீராடி
முற்றும் துறந்து துறவியானது
தன் கூராடை களைந்த
ஆற்றின் கூழாங்கற்கள்..!

- ச.மோகனப்பிரியா