Published:Updated:

``வேலையே இல்லாதபோது எங்குபோய் வேலை கேட்க?” - கேள்விகளால் கவனம் ஈர்த்த உ.பி சிறுமி

``வேலையே இல்லாதபோது எங்குபோய் வேலை கேட்க?” - கேள்விகளால் கவனம் ஈர்த்த உ.பி சிறுமி
``வேலையே இல்லாதபோது எங்குபோய் வேலை கேட்க?” - கேள்விகளால் கவனம் ஈர்த்த உ.பி சிறுமி

``வேலையே இல்லாதபோது எங்குபோய் வேலை கேட்க?” - கேள்விகளால் கவனம் ஈர்த்த உ.பி சிறுமி

உலகின் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படும் நாடாளுமன்றத் தேர்தல், தற்போது நடைபெற்றுவருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிவருகின்றனர்.  இந்தியாவில் உள்ள பல கிராமங்கள், நாட்டின் சராசரி வளர்ச்சியை விட்டுத் தள்ளியே உள்ளன. அங்கு வாழும் மக்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். இதற்கு ஒரு உதாரணம்தான், சுனைனா என்ற 14 வயது சிறுமி. இவருக்கு இன்னும் வாக்களிக்கும் வயது வரவில்லை என்றாலும், ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் பாதிக்கப்படுபவர்களில் முதல் ஆளாக இருப்பது இவர்தான்.

``வேலையே இல்லாதபோது எங்குபோய் வேலை கேட்க?” - கேள்விகளால் கவனம் ஈர்த்த உ.பி சிறுமி

ஆங்கில செய்தி ஊடகமாக என்டி டிவி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் மோகன்லால்கான்ஜ் நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பேட்டி எடுத்தனர்.  மூத்த பத்திரிகையாளரான ப்ரனோய் ராய், அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்ணிடம்,  ‘உங்களுக்கு தொடர்ந்து பணி கிடைக்கிறதா?’  எனக் கேட்டார். அதற்கு அந்தப் பெண்,  ‘இல்லை. எங்களுக்கு அதிகமாக பணிகள் கிடைப்பதில்லை’ எனப் பதில் அளிக்கிறார். அப்போது குறுக்கிட்ட சுனைனா, பேசத்தொடங்குகிறார்.  “ வேலையே இல்லாதபோது, நாங்கள் எங்கு போய் வேலை செய்வோம்? விளை நிலங்கள் அனைத்தும் காலியாகவே உள்ளன. வழக்கமாக இங்கு தானியங்கள் அதிகம் விளையும். ஆனால், தற்போது அது குறைந்துவிட்டது. பிறகு எங்களுக்கு எங்கிருந்து வேலை கிடைக்கும்? 

``வேலையே இல்லாதபோது எங்குபோய் வேலை கேட்க?” - கேள்விகளால் கவனம் ஈர்த்த உ.பி சிறுமி

வேலை மட்டுமல்ல, எல்லாமே இங்கு குறைந்துவிட்டது. நாங்கள் எதை, எந்த அளவு விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். அதையேதான் நாங்கள் உணவாகவும் உண்ணுவோம். முதலில் நெல் பயிர்களை விதைத்தோம். அது வளர்ந்த பிறகு அறுவடை செய்து வீட்டுக்குக் கொண்டுவந்து எங்கள் உணவுக்குப்போக மீதியை விற்பனை செய்வோம். ஆனால், தற்போது நாங்கள் உண்ணும் அளவுக்குக்கூட விளைச்சல் இல்லாதபோது, எதை நாங்கள் விற்பது?  

``வேலையே இல்லாதபோது எங்குபோய் வேலை கேட்க?” - கேள்விகளால் கவனம் ஈர்த்த உ.பி சிறுமி

நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். முன்பெல்லாம் எங்கள் பகுதியில் பலர் விவசாயம் செய்துகொண்டிருந்தனர். ஒரு புறம் பயிரிடுவது மறுபுறம் அதை அறுவடை செய்வது என வேலைகள் அதிகமாக இருக்கும். அதன்மூலம் வரும் பணத்தைவைத்து நாங்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வீட்டுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொள்வோம். தற்போது எங்கள் வீட்டில் உண்ணுவதற்கு ஒன்றும் இல்லை. நீண்ட காலமாகவே நாங்கள் இந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்துவருகிறோம். நிலம்கூட எங்களிடம் இல்லாதபோது, நாங்கள் எப்படி வேலைசெய்வது. 

தற்போது, ஒரு சிறிய அளவிலான காலி நிலம் மட்டுமே எங்களிடம் உள்ளது. அதையும் விலங்குகளின் மேய்ச்சலுக்காக வைத்துள்ளோம். எங்கள் தந்தை ஐந்து படி அரிசிதான் வாங்கிவருவார். அதை வைத்துதான் மாதம் முழுவதும் உண்ண வேண்டும். எங்களிடம் ஒரு சிலிண்டர்தான் உள்ளது. அதுவும் காலியாக உள்ளது.  பணம் இருந்தால்தானே வேறு ஒரு சிலிண்டர் வாங்க முடியும்... எங்கள் யாருக்கும் தான் வேலையே இல்லையே. இந்த சிலிண்டரின் விலை ரூ.900 எங்கள் தந்தை வேறு சிலிண்டர் வாங்கி பல மாதங்கள் ஆகிறது. 

``வேலையே இல்லாதபோது எங்குபோய் வேலை கேட்க?” - கேள்விகளால் கவனம் ஈர்த்த உ.பி சிறுமி

எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. நிச்சயம் ஒரு நாள்  நான் டாக்டர் ஆவேன் என நம்பிக்கை உள்ளது. எங்கள் கிராமத்தில் நிறையப் பேர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். நான் மருத்துவர் ஆனால், அவர்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பேன். வெளியில் இருந்து எங்கள் கிராமத்துக்கு வரும் மருத்துவர்கள் அனைவரும், நோயாளிகளிடம் அதிகம் பணம் வாங்குகின்றனர். நான் எங்கள் கிராமத்துக்காக மருத்துவர் ஆகவேண்டும்’' என்றார்.

சிறுமி சுனைனா பேசிய வீடியோ, இந்திய அளவில் வைரலாகிவருகிறது. இதை அனைத்து அரசியல் தலைவர்களும் ஷேர் செய்து வருகின்றனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மோடி  ஜி, உங்கள் கொள்கைகள் சுனைனாவுக்கு என்ன செய்துள்ளது பாருங்கள். எங்கள் நியாய் திட்டத்தின் மூலம் அவர் (சுனைனா) தைரியமும் மன அமைதியும் பெறுவார். அது வறுமையை ஒழிக்கும். அந்தத் திட்டத்தின்மூலம் சுனைனா உள்பட மில்லியன் மக்களின் வாழ்க்கை மாறும்’ எனப் பதிவிட்டுள்ளார். 

சுனைனாவின் பேட்டியைப் பார்த்த பலர், அவர் படிப்பதற்கு உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.  ‘டாக்டர் சுனைனா’ என்ற பெயரில் அவருக்கு மின் அஞ்சல் முகவரி தொடங்கப்பட்டு, அதன்மூலம் பணம் வசூலிக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Photos And News Credits : NDTV
 

அடுத்த கட்டுரைக்கு