Published:Updated:

குப்பை, சேற்றில் புதைந்திருக்கும் தங்கம்! - 200 ரூபாய்க்காக நள்ளிரவில் நடக்கும் வேட்டை

குப்பை, சேற்றில் புதைந்திருக்கும் தங்கம்! - 200 ரூபாய்க்காக நள்ளிரவில் நடக்கும் வேட்டை
குப்பை, சேற்றில் புதைந்திருக்கும் தங்கம்! - 200 ரூபாய்க்காக நள்ளிரவில் நடக்கும் வேட்டை

நாள் முழுவதும் கடினமாக உழைத்துவிட்டு, இரவில் தங்களின் எதிர்காலத்தை எண்ணி பலரும் கனவு கண்டுகொண்டிருப்பர். ஆனால், அதே இரவில் தங்களின் எதிர்காலத்துக்காக உழைப்பவர்களும் உள்ளனர். அதிகாலையும் இல்லாமல் நள்ளிரவும் இல்லாமல், இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் ஒரு கூட்டம், பேப்பர்களைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கும். மற்றொரு கூட்டம், பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்வதற்காகத் தயாராகிக்கொண்டிருக்கும். இப்படி பல்வேறு மக்கள் வாழும் இதே நாட்டில் மற்றொரு கும்பலும் உண்டு. இவர்களின் வேலையும் நள்ளிரவு நேரத்தில்தான் நடைபெறும். 

குப்பை, சேற்றில் புதைந்திருக்கும் தங்கம்! - 200 ரூபாய்க்காக நள்ளிரவில் நடக்கும் வேட்டை

இரவு நேரத்தில் துடைப்பம், பிரஸ் ஆகியவற்றைக்கொண்டு சாலையோரங்களைக் கூட்டி, மண்ணையும் சேற்றையும் அள்ளிக்கொண்டிருப்பர். அவர்கள், சமூக சேவகர்களோ நாட்டின் மீது அக்கறைகொண்டவர்களோ கிடையாது. மும்பையின் ஜவேரிப் பகுதியில் தங்கத்தை வேட்டையாடும் கும்பல் அது. அவர்கள், கிலோ கணக்கில் தங்கத்தை எடுப்பது கிடையாது. அந்தக் கும்பலுக்குக் கிடைக்கும் தங்கத்தில், ஒரு நாளுக்குக் குறைந்தது 200 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கிடைக்கும். 

குப்பை, சேற்றில் புதைந்திருக்கும் தங்கம்! - 200 ரூபாய்க்காக நள்ளிரவில் நடக்கும் வேட்டை

ஜவேரி பஜார், பரபரப்பான மும்பை பகுதியில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்குப் பின்னால் உள்ள மிகச் சிறிய தெரு. இந்தப் பகுதிதான், இந்தியாவுக்குத் தேவையான 60 சதவிகிதம் தங்கத்தைத் தருகிறது. இங்கு 7000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளும், தங்கப் பட்டறைகளும் உள்ளன. ஒரு கடையின் மொத்தப் பரப்பளவு 150 சதுர மீட்டர் மட்டுமே இருக்கும். ஆனால், அவற்றின் ஒரு நாள் வர்த்தகம் கோடியைத் தாண்டும். இந்த தங்கப் பட்டறைகளில் பணிபுரியும் நகை ஆசாரிகள், தங்களின் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லும்போது, அவர்களின் சட்டை, தலைமுடி ஆகியவற்றில் இருக்கும் தங்கத்துகள்கள், அவர்கள் வெளியில் வரும்போது கடையின் வாசலில் வெளியேறிவிடும். சிலர், வேலை முடிந்ததும் தங்களின் கை கால்களைச் சுத்தம்செய்கையிலும் தங்கத்துகள்கள் வடிகால் வழியாக வெளியேறுகிறது. அவற்றைக் கண்டுபிடிக்கும் வேலையைத்தான் நடு இரவில் செய்கிறது இந்தக் கும்பல். 

குப்பை, சேற்றில் புதைந்திருக்கும் தங்கம்! - 200 ரூபாய்க்காக நள்ளிரவில் நடக்கும் வேட்டை

சாலையில் உள்ள தங்கத்தை எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு, அவர்கள் உயர் ரக இயந்திரங்களையோ கருவிகளையோ பயன்படுத்துவதில்லை. சாதாரண கத்தி, பிரஸ், துடைப்பம் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதைப் பற்றி ஆரிஃப் என்ற 17 வயது சிறுவன் பேசும்போது, “எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த வேலையைச் செய்கிறோம். இது, எங்களின் பரம்பரைத் தொழில் என்றே கூறலாம். தினமும் அதிகாலையில் மக்கள் வரும் முன் நாங்கள் வந்து, ஜவேரி பஜார் கடைகளின் வாசலில் உள்ள மண் மற்றும் சேற்றை அள்ளிச்செல்வோம். அதில் கிடைக்கும் தங்கத்துகள்கள் மண்ணுடன் நன்கு கலந்திருக்கும். அதிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுத்து, எங்களின் பிழைப்பை தேடிக்கொள்கிறோம். 

குப்பை, சேற்றில் புதைந்திருக்கும் தங்கம்! - 200 ரூபாய்க்காக நள்ளிரவில் நடக்கும் வேட்டை

மும்பையில் உள்ள தேவ் நகர் சேரிதான் நாங்கள் வேலை செய்யும் இடம். சேகரித்த அனைத்து மண்ணையும் நாங்கள் கொண்டுசென்று சுத்தப்படுத்துவோம். முதலில், மண்ணில் இருக்கும் தங்கத்தைப் பிரிக்க, பாயும் நீரில் கழுவுவோம். வெறும் கண்களால் மண்ணில் கலந்துள்ள தங்கத்தைக் கண்டறியமுடியாது. பாதி மண்ணை பாத்திரத்தில் வைத்து, அதில் தெளிந்த நீரை ஊற்றி உன்னிப்பாக விரல்களைவைத்துத் தடவுவோம். சிறிய எடைகொண்ட  தங்கம் எளிதில் சிக்கிவிடும். ஆனால், தங்கத்துகள்களைப் பிரித்தெடுக்க பலமுறை நீரை மாற்றி மாற்றி ஊற்றி, சுத்தம்செய்ய வேண்டும்.  இறுதியில், குறைந்த மணலுடன் தங்கத்துகள் பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும். 

தற்போது, தங்கத்தை கண்களால் பார்க்க முடிந்தாலும் அவற்றைக் கையில் எடுக்க முடியாது. பிறகு, மண்ணில் உள்ள இரும்புத் துகள்களை காந்தத்தின் உதவியுடன் பிரிப்போம். இறுதியில் உள்ள கலவையுடன் பாதரசத்தைக் கலந்து சூடேற்றுவோம். அதன் மூலம் தங்கம் தனியாகப் பிரிந்துவிடும். கிடைத்த தங்கத்தை உலையில் வைத்து உருக்கி, உருண்டையாக்கி கடைகளில் தருவோம். எங்களுக்குக் கிடைப்பது தூய்மையான தங்கம் இல்லை என்பதால், சந்தையில் கிடைக்கும் அதே ரேட் எங்களுக்குக் கிடைப்பதில்லை. மொத்தமாக ஒரு நாளுக்கு 200 முதல் 1500 ரூபாய் வரை கிடைக்கும். அன்றைய தினம் எனக்கு நல்ல நாளாக இருந்தால், லட்சங்களிலும் பணம் கிடைக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். 

குப்பை, சேற்றில் புதைந்திருக்கும் தங்கம்! - 200 ரூபாய்க்காக நள்ளிரவில் நடக்கும் வேட்டை

இந்தியர்களுக்கு தங்கத்தின்மீது எப்போதும் தனிப்பட்ட ஆசை இருக்கும். அதனால், தங்கத்தின் தேவை தினமும் அதிகரித்துக்கொண்டே உள்ளது. பல பெரும் முதலாளிகளும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகவே கருதுகின்றனர். அதனால்தான், நாங்கள் கொடுக்கும் தங்கத்துக்கு தனி ரேட் தருகின்றனர்’ என ஆரிஃபின் கூட்டாளி ஒருவர் கூறியுள்ளார்

பட்டறைகளுக்கு வெளியில் நடக்கும் இந்தத் தொழில் பற்றி தங்க வணிகர்கள், காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ‘தங்க வேட்டையர்கள் எங்களை ஜவேரி பகுதியில் எங்கேனும் பார்த்தாலே ஓடி ஒளிந்துகொள்வார்கள். நாங்கள் அவர்களை எதுவும் செய்யாதபோதும் அவர்களுக்கு எங்கள்மீது பயம் உள்ளது. அவர்கள் செய்வது சட்டத்துக்குப் புறம்பானது என்றாலும் அதனால் சாலை சுத்தமாகிறது. மேலும், அவர்கள் நகைகளைத் திருடவோ கொள்ளையடிக்கவோ இல்லை. தேவையில்லாமல் சாலையில் உள்ள தங்கத்தைவைத்து தங்கள் நாளைக் கழிக்கிறார்கள். இந்தப் பகுதியில், அதுவும் ஒரு தொழிலாகவே பார்க்கப்படுகிறது. அதனால் நாங்களும் பெரிதாக எதுவும் கண்டுகொள்வதில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார் மும்பை காவல் அதிகாரி.

News & Photo Credits : Reuters

Vikatan