Published:Updated:

`என்னைத்தானே படம் பிடிக்கிறாய்; இதோ எடுத்துக்கொள்!'- வைரலாகும் கழுகு புகைப்படங்கள்

எப்போதோ யாரோ எடுக்கப்பட்ட புகைப்படங்கள்கூட, திடீரென வைரல் ஆகும். அப்படியான புகைப்படங்களை நெட்டிசன்கள் கொண்டாடி மகிழ்வார்கள். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டீவ் பைரோ என்கிற புகைப்படக் கலைஞர், ஒரு சில வாரங்களுக்கு முன்பாக எடுத்த கழுகு ஒன்றின் புகைப்படமும் அப்படித்தான் இப்போது வைரலாகியிருக்கிறது. 

ஸ்டீவ் பைரோ என்கிற புகைப்படக் கலைஞர் இயற்கை சார்ந்த இடங்கள் மற்றும் வன விலங்குகளைப் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் அண்மையில் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்குச் சென்றிருந்தார். அவர் அங்குள்ள பறவைகளை விதவிதமாக புகைப்படம் எடுத்தார். அப்போது, அங்கிருந்த நீர்நிலையின் மீது பறந்துகொண்டிருந்த கழுகு ஒன்றைப் புகைப்படம் எடுக்கத் தயார் ஆனார். பொதுவாக விலங்குகளும், பறவைகளும் புகைப்படங்களை எடுக்கத் தயாராகும் போதுதான், அந்த இடத்திலிருந்து விலகிச் செல்லும் அல்லது அப்படியே அசையாமல் நிற்கும். ஆனால், புரூஸ் எனப் பெயரிடப்பட்ட இந்தக் கழுகு மட்டும், ஸ்டீவ் பைரோ தன்னைப் புகைப்படம் எடுப்பதை அறிந்து, அவரை நோக்கிப் பறந்து வந்தது. நேர்கொண்ட பார்வையுடன், 2 இறக்கையும் தண்ணீரில் உரசியபடி ‘போஸ்’ கொடுப்பதுபோல நேர்த்தியாகப் பறந்து வந்தபோது, ஸ்டீவ் பைரோ அதை தத்ரூபமாக படம் பிடித்தார். 

`என்னைத்தானே படம் பிடிக்கிறாய்; இதோ எடுத்துக்கொள்!'- வைரலாகும் கழுகு புகைப்படங்கள்

அந்தப் புகைப்படத்தை இப்போது பார்க்கும்போது, ``என்னைத்தானே படம் பிடிக்கிறாய். இதோ எடுத்துக்கொள்" என்று அந்த கழுகே சொல்லும்படியாக இருக்கிறது. தத்ரூபமான அந்தப் புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் ஸ்டீவ். தற்போது அந்தப் படம் உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது. இது குறித்து அவர், ``வழக்கம்போல பறவைகளைப் படம் பிடித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் புரூஸ் கழுகு என் கண்ணில் பட்டது. நான் அதைத்தான் கிளிக் செய்கிறேன் எனத் தெரிந்துகொண்டு, என்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது போலத்தான் எனக்குத் தோன்றியது. அந்தக் கழுகு நேர்கொண்ட பார்வையுடன் என்னை நோக்கி வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல் ஆகும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. இந்தப் புகைப்படம் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு