Published:Updated:

`ஒற்றைப் புன்னகைக்காக ஒரு வீட்டை விற்றார்' - தந்தைக்காக உருகும் ககன் நரங்! #FathersDay

குடும்பத்தின் நலனுக்காகத் தன் காயங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொள்ளும் உன்னத மனிதர்கள் தந்தையர்கள். அப்படிப்பட்ட தந்தையர்களின் தியாகங்களைப் போற்றும் விதமாக இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இப்படிப்பட்ட தினத்தில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் ககன் நரங் தன் தந்தை குறித்து வெளியிட்டுள்ள பதிவு, வைரலாகப் பரவிவருகிறது. தன் தந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் மிகவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். 

`ஒற்றைப் புன்னகைக்காக ஒரு வீட்டை விற்றார்' - தந்தைக்காக உருகும் ககன் நரங்! #FathersDay

அதில், ``20 வருடங்களுக்கு முன்பு எனது அருகில் இந்த மனிதர் எனக்குத் துப்பாக்கி வாங்குவதற்காகத் தனது வீட்டை விற்றார். நான் ஒரு நாள் நாட்டுக்காகப் பதக்கங்களை வெல்வேன் என அவர் அறிந்ததால் அவர் வாங்கித் தரவில்லை. ஒருநாள் நான் பயன்படுத்திக் கொண்டிருந்த துப்பாக்கியை அதன் ஓனர் மற்றொருவருக்கு விற்றுவிட்டார். இதனால் ஷூட்டிங் ரேஞ்சில் இருந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தேன். அப்போதுதான் தனது வீட்டை விற்று எனக்குத் துப்பாக்கியை வாங்கிக் கொடுத்தார். நாங்கள் 20 ஆண்டுகள் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம்.

அப்போதெல்லாம் நான் விளையாட்டில் இவ்வளவு தூரம் செல்வேன் அல்லது ஒரு உலக சாதனை படைப்பேன், உலகின் நம்பர் 1 ஆக இருப்பேன், இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வெல்வேன் என்று அவருக்குத் தெரியாது. ஆனால், ஒரு தந்தை செய்ய வேண்டியதை அவர் செய்தார். மகனின் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டு வருவதற்காக. இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா. இந்தக் கடனை எப்போதும் திருப்பிச் செலுத்த முடியாது. தங்கள் மகன்களுக்கும் மகள்களுக்கும் புன்னகையைப் பார்ப்பதற்காக மட்டுமே வானத்தையும் பூமியையும் நகர்த்தும் அங்குள்ள அனைத்து அப்பாக்களுக்கும் மகிழ்ச்சியான தந்தையர் தின வாழ்த்துகள்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு