Published:Updated:

மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்
மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்

மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்

மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்

`கமலி’ என்ற ஆவணப்படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் மாமல்லபுரத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி. ஸ்கேட்டிங் போர்டும் கையுமாகச் சுற்றித்திரியும் சிறுமி கமலியையும் அவரின் தாய் சுகந்தியைப் பற்றியும் பேசுகிறது அந்த ஆவணப்படம். மும்பை இன்டர்நேஷனல் ஷார்ட் பிலிம் திருவிழாவில் இரண்டு விருதுகளை அள்ளியுள்ளது. அட்லாண்டா திரைப்பட விழாவிலும் விருதை வென்றுள்ளது. உலகம் முழுவதும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த கமலியையும் அவரின் தாய் சுகந்தியையும் காண கடற்கரை நகரத்துக்கு விரைந்தோம்.

மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்

கோடை விடுமுறை முடிந்திருந்ததால் மாமல்லபுரம் கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்தக் கடற்கரையில்தான் மீன்கடை நடத்தி வருகிறார் சுகந்தி.  `சார் சவாரி வர்றீங்களா’ என்று குதிரையில் அமர்ந்திருந்த சிறுவனின் குரல் நம்மை வரவேற்றது. ஒருசில காதல் ஜோடிகளும் வெளிநாட்டவரும்தான் அங்கு உலாவிக்கொண்டிருந்தனர். அவர்களுக்காகத் தள்ளுவண்டியில் கடை விரித்துக் காத்திருந்தார் ஒரு பெண்மணி. அவரிடம் சுகந்தி குறித்து விசாரித்தோம். ` அந்த அக்கா கடை அங்க தாங்க இருக்கும்' என தண்ணீரால் சூழப்பட்டிருந்த இடத்தைக் காட்டினார். `ஆனா இன்னைக்கு அவங்க வரல. அவங்க வீடு அந்தாண்ட இருக்குற குப்பத்துலதான் இருக்கு அங்க போய்ப் பாருங்க' என்றார். அந்தப்பெண் காட்டிய இடத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் இருந்தது. ` அந்தக் கோயிலுக்கு பின்னால்தான் அந்தக் குப்பம் இருக்குது அப்படியே நடந்து போங்க' என்றார். 

மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்

நாம் சென்ற நேரம், மீனைக் கழுவிக்கொண்டிருந்தார் சுகந்தி. `` நான் வழக்கமா கடை போடுற இடத்துல தண்ணீர் வந்து நிக்குது. அதனாலதான் வீட்டுல இருக்கேன்" என்றபடி ஸ்கேட்டிங் போட்டியில் கமலி வாங்கிய பரிசுகளை நம்மிடம் காட்டினார். வீடு முழுவதும் நிறைய ஓவியங்கள் சுவரில் வரையப்பட்டிருந்தன. குழந்தையின் கிறுக்கலாக மட்டுமல்லாமல் சில கடவுள்களின் ஓவியங்களும் வரையப்பட்டிருந்தன. `` இதெல்லாம் கமலிதான் வரைஞ்சா, ரொம்ப திறமையான பொண்ணு. அந்த ஆவணப்படம் எடுக்கக் கமலிதான் காரணம். அவளுக்கு ஸ்கேட்டிங் மேல இருக்குற ஈடுபாடுதான் எங்கள வெளி உலகத்துக்குக் காட்டியிருக்கு" எனப் பெருமைப்பட்டவர், `` எனக்குக் கல்யாண வாழ்க்கை சரியா அமையல. கூவத்தூர் பக்கத்துல இருக்கிற தென்பட்டிணம் கிராமத்துலதான் கட்டிக்கொடுத்தாங்க. கமலிக்கு 3 வயசு இருக்கும். என் ரெண்டாவது பையன் வயித்துல 6 மாசம், அப்போ என் வீட்டுக்காரர் இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்டார். வேற வழியில்லாம அங்கிருந்து கிளம்பி என் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். என் தம்பி சந்தோஷ்தான் இப்ப என்னையும் குழந்தைகளையும் பார்த்துக்கிறான். 

மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்

6 வருஷத்துக்கு முன்னாடி கடற்கரையில் ஜுஸ் கடை நடத்தி வந்தேன். அப்போ அங்க ரெண்டு மூணு கடைதான் இருக்கும். அந்த வருமானம் எனக்குப் போதுமானதா இருந்தது. ஆனா இப்போ 20 கடைகளுக்கு மேல் வந்துடுச்சு. இப்போ மீன் கடை போட்டுதான் குடும்பத்தை நடத்தி வர்றேன். இங்க இருந்து நைட் 10 மணிக்கு காசிமேடு போய் அங்கிருந்து ஏலத்துல மீன் எடுத்துக்கிட்டு  வர்றதுக்குள்ள விடிஞ்சுடும். காலையில மீன் எல்லாம் சுத்தம் பண்ணி வியாபாரத்துக்கு கொண்டு போவேன். ரெண்டு புள்ளைங்களும் தனியார் ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. என் சக்திக்கு மீறிதான் படிக்க வைக்கிறேன். இங்கிருக்கிற பசங்க ஸ்கேட்டிங் விளையாடுவாங்க. அதைப் பாத்து அதுல கமலிக்கு ஈர்ப்பு வந்துடுச்சு. அவளும் ஸ்கேட்டிங் பண்ண ஆரம்பிச்சுட்டா. யாரும் அவளுக்கு கத்துக் கொடுக்கல. நானும் அவ இஷ்டம்னு விட்டுட்டேன்.

என் தம்பிதான் ஸ்கேட்டிங் சொல்லிக் கொடுப்பான். ஸர்பிங்கும் பண்ணுவா. கோச் எல்லாம் யாரும் இல்ல. அதுக்கான வசதியும் இல்ல. என்னதான் இருந்தாலும் இங்க இருக்கிற சிலர் ஏன் இப்படி பண்ற.. பொண்ணுக்கு ஸ்கேட்டிங் எல்லாம் எதுக்கு, கை கால் ஒடஞ்சுடுச்சுன்னா நாளைக்கு யார் வந்து கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு சத்தம் போட்டாங்க. கமலியோட விருப்பம்தான் எனக்கு பெருசாப்பட்டது. அவ ஸ்கூல்ல இருந்து வந்ததும் பைய தூக்கி போட்டுவிட்டு ஸ்கேட்டிங் போர்டு தூக்கிட்டு ஓடிடுவா. சனிக்கிழமை ஸ்கேட்டிங், ஞாயிற்றுக் கிழமை ஸர்பிங் விளையாடிட்டு இருப்பா.

மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்

இந்த ஆவணப்படம் எடுத்த சாஷா ரெயின்போ, ஒரு பாட்டு எடுக்குறதுக்காகதான் வந்தாங்க. வெளிநாட்டைச் சேர்ந்த ஆனி சென்னையில் ஐ.டி கம்பெனியில வேலை பார்க்குறாங்க. எங்களுக்கு அவங்க 6 வருஷமா பழக்கம். அவங்க மூலமாதான் சாஷா தெரியும். `ஆல்பா ஃபேமிலி' என்ற வீடியோவுக்காக கமலிய கேட்டு வந்தாங்க. வீடியோ ஷூட்டுக்காக நாங்க பெங்களூருக்குப் போனோம். அப்போதான் வெளியுலகத்த முதல்முறையா பார்க்குறேன். அதுவரைக்கும் வேற எங்கயும் போனதில்ல. பெங்களூரு போனதும் சாஷா, என்கிட்ட எங்கிருந்து வர்றீங்க; அந்தக் கிராமத்துல எப்படி உங்க குழந்தையை ஸ்கேட்டிங் பண்ண அனுமதிச்சிங்கன்னு கேட்டார். நான் மீனவக் குப்பத்துல இருந்து வர்றேன். என் பொண்ணு ஆசைப்பட்டத செய்ய விரும்புறேன்னு அவருகிட்ட சொன்னேன். ஒரு பாட்டு எடுத்து முடிச்சாங்க.. நாங்க திரும்ப வந்துட்டோம்.

6 மாசத்துக்கு அப்புறம்தான் சாஷா எனக்கு போன் செய்து பேசினார். ஆவணப்படம் எடுப்பதாகக் கூறினார். முதலில் தயக்கமாக இருந்தாலும் அப்புறம் சரின்னு சொல்லிட்டேன். என் கமலிய பார்த்து நிறைய பேர் வெளிய வரணும்னுதான் ஒத்துக்கிட்டேன். தெனமும் நான் என் குழந்தைகளுக்காக செய்யறதைப் படமாக்கினாங்க. இதுக்காக நான் நடிக்கல. இங்க ஷூட் செய்யும்போதுகூட நிறைய பேர் ஏன் இங்க கேமரா வைக்கிறாங்கன்னு எல்லாம் சத்தம் போட்டாங்க. இதையெல்லாம் மீறிதான் இந்த ஆவணப்படம் வந்திருக்கு. அது எடுத்து 3 வருஷமாச்சு.. அந்தப் படத்தோட டிரெய்லர்தான் இப்போ விட்டிருக்காங்க.  

மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்

மும்பையில் நடந்த இன்டர்நேஷனல் ஷார்ட் பிலிம் போட்டியில் இந்த ஆவணப்படம் போட்டுக்காட்டப்பட்டது. இதற்காக நான், கமலி எல்லாம் மும்பைக்குப் போனோம். அப்போதான் முதல்முறையா பிளைட்ல போனோம். 10 மணிக்கு விழா தொடங்கியது. நிறைய படங்கள் போட்டாங்க. அதுக்கெல்லாம் பெரிய அளவில் வரவேற்பு இல்ல. `கமலி’படம் போடும்போது நான் எழுந்து கடைசி இருக்கையில் போய் உட்கார்ந்துக்கிட்டேன். படம் முடிந்ததும் ஏகப்பட்ட கைத்தட்டல்கள் வந்தது. நான் அப்படியே அழுதுட்டேன். இயக்குநர் என்னைக் காட்டிப் பேசினார். அன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அந்த விழாவில் சிறந்த இயக்குநர் மற்றும் பெஸ்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் பிலிம்னு அவார்டு கிடைச்சது. கமலி படம் 2020 ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆஸ்கர் பத்தியெல்லாம் நான் எதுவுமே கமலிகிட்டே சொல்லல.. இப்பவே நாம பெரிய ஆள் அப்படிங்கிற கர்வம் அவளுக்கு வந்துடுச்சுன்னா அது நல்லா இருக்காது. அதனால எந்தப் போட்டிக்குப் போனாலும் முதல் நாள்தான் சொல்லி அழைச்சுட்டு போவேன்.

மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்

கமலி பெங்களூருல நடந்த ஸ்கேட்டிங் போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கா. ஸ்கேட்டிங் போட்டிக்காக சீனா போயிருந்தோம். ஆனா அங்க 12 வயசுக்கு மேலதான் ஸ்கேட்டிங் விளையாட அனுமதிப்பாங்கலாம். அதனால கலந்துக்கமுடியல. ஆனா நிறைய இன்டர்நேஷனல் ப்ளேயரோட அறிமுகம் கிடைச்சது. கமலிக்கு ஸ்பான்ஸர் கிடைச்சா நல்லா இருக்கும். நாங்க சம்பாதிக்கிறது குழந்தைங்க ஸ்கூல் பீஸ் கட்டவே சரியா இருக்கு. அதையே தவணை முறையிலதான் கட்டுறேன். போட்டிக்குப் போகும்போது எல்லாம் ஆனி தான் மத்தவங்ககிட்ட கேட்டு ஸ்பான்ஸருக்கு ரெடி பண்ணுவாங்க. இப்ப கமலிய பார்த்துட்டு அவகூட படிக்கிற ரெண்டு மூணு பொண்ணுங்க ஸ்கேட்டிங் பண்ண வர்றாங்க. ஆஸ்கர் என்னங்க ஆஸ்கர் என் பொண்ணு ரெண்டு பேருக்கு ஸ்கேட்டிங் சொல்லி தர்றதே நூறு ஆஸ்கருக்கு சமம்" எனப் பெருமிதப்பட்டார் சுகந்தி. 

மீன் கடை சுகந்தியின் `ஸ்கேட்டிங் போர்டு' கமலி! - ஆஸ்கருக்காகக் காத்திருக்கும் மீனவக் குடும்பம்

நாம் பேசி முடித்த தறுவாயில் பள்ளியில் இருந்து வீடு திரும்பியிருந்தார் கமலி. `` ரெண்டு பேருக்கு நான் டீச்சர் தெரியுமா?" எனக் குறும்பாகப் பேசியவர், `` எங்க மாமாவோட ஃப்ரெண்ட் கொடுத்த ஸ்கேட்டிங் போர்ட்லதான் நான் ஸ்டார்ட் பண்ணுனேன். 4 வருஷமாக ஸ்கேட்டிங் பண்றேன். ஸர்பிங், ஸ்கேட்டிங் ரெண்டும் பண்ணுவேன். ஸ்கூல்ல கபடி விளையாடுவேன். ஸ்கேட்டிங்தான் எனக்கு ஃபர்ஸ்ட். எனக்கு யாரும் சொல்லித் தரலை. பசங்களைப் பாத்துக் கத்துக்கிட்டேன். மும்பை, பெங்களூரு, மங்களூர், சீனாவுக்கு எல்லாம் போட்டிக்காகப் போயிருக்கேன். சீனா போகும்போது நிறைய இன்டர்நேஷனல் ப்ளேயர்ஸ் நல்லா பேசுனாங்க. அவங்களும் நிறைய சொல்லிக் கொடுத்தாங்க. கமலி டாக்குமெண்ட்ரி சீக்கிரம் வந்துடும். இப்ப டிரெய்லர்தான் விட்டுருக்காங்க. மும்பையில ஸ்கிரினிங் பண்ணும்போது நான், அம்மா பார்க்கப் போனோம். ஸ்கிரினிங் பண்ணுனதுக்கு அப்புறம் எங்கள ஸ்டேஜுக்கு கூப்பிட்டாங்க. நான் பயந்துகிட்டு போகல.. அம்மாதான் போனாங்க. அங்க போய் அம்மா அழுதுட்டாங்க.. பேசவே இல்ல. நிறைய போட்டிகளில் கலந்துக்கணும். நிறைய ப்ரைஸ் வாங்கணும்" என உற்சாகத்தை வெளிப்படுத்தியபடியே ஸ்கேட்டிங் போர்டை தூக்கிக்கொண்டுப் பறந்தார் கமலி.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு