Published:Updated:

வனப்பகுதியில் சுற்றித் திரிந்த பீகார் இளைஞர்! - குடும்பத்துடன் சேர்த்துவைத்த பெரியகுளம் போலீஸார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வனப்பகுதியில் சுற்றித் திரிந்த பீகார் இளைஞர்! - குடும்பத்துடன் சேர்த்துவைத்த பெரியகுளம் போலீஸார்
வனப்பகுதியில் சுற்றித் திரிந்த பீகார் இளைஞர்! - குடும்பத்துடன் சேர்த்துவைத்த பெரியகுளம் போலீஸார்

வனப்பகுதியில் சுற்றித் திரிந்த பீகார் இளைஞர்! - குடும்பத்துடன் சேர்த்துவைத்த பெரியகுளம் போலீஸார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித்திரிந்த வடமாநில இளைஞரை அவரது குடும்பத்துடன் சேர்த்துவைத்துள்ளனர் பெரியகுளம் போலீஸார்.

வனப்பகுதியில் சுற்றித் திரிந்த பீகார் இளைஞர்! - குடும்பத்துடன் சேர்த்துவைத்த பெரியகுளம் போலீஸார்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வடமாநில இளைஞர் ஒருவர் சுற்றித்திரிவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியகுளம் வடகரை போலீஸார், அந்த இளைஞரைப் பிடித்தனர்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அந்த இளைஞரை காவல்நிலையம் அழைத்துவந்தனர். இளைஞரிடம் நடந்த விசாரணை பற்றிக் கூறிய காவலர்கள், ``அவர், மனவளர்ச்சி குன்றிய இளைஞர் என அவரைப் பிடித்து விசாரித்த பிறகுதான் தெரிந்துகொண்டோம். உடனே அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துவந்தோம். அவருக்கு தேவையான சாப்பாடு முதலிய உதவிகளைச் செய்து, பெரியகுளத்தில் உள்ள காப்பத்தில் வைத்தோம்.

பின்னர் அந்த இளைஞர் தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டோம். வீடியோவைப் பார்த்து, அவரது தாய் மற்றும் சகோதரர் பெரியகுளம் வந்தனர். அந்த இளைஞரின் பெயர் டிங்கு குமார் பஸ்வான் என்பது பிறகுதான் தெரியவந்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அவர் மன வளர்ச்சி குன்றிய நிலையில் வீட்டை விட்டு ஓடிவந்துள்ளார். டிங்கு குமார் பஸ்வானை அவரது குடும்பத்தினர் நீண்ட நாள்களாக தேடிவந்துள்ளனர். இந்நிலையில்தான் பெரியகுளத்தில் அவரை கண்டுபிடித்தோம். இப்போது அவரது குடும்பத்தோடு டிங்கு குமார் பஸ்வானைச் சேர்த்துவைத்துவிட்டோம். மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர். 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு