Published:Updated:

`அதுவும் வெள்ளை; இதுவும் வெள்ளை!'- எல்லையில் சிக்கிய ரூ.2,700 கோடி போதைப் பொருள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`அதுவும் வெள்ளை; இதுவும் வெள்ளை!'- எல்லையில் சிக்கிய ரூ.2,700 கோடி போதைப் பொருள்
`அதுவும் வெள்ளை; இதுவும் வெள்ளை!'- எல்லையில் சிக்கிய ரூ.2,700 கோடி போதைப் பொருள்

`அதுவும் வெள்ளை; இதுவும் வெள்ளை!'- எல்லையில் சிக்கிய ரூ.2,700 கோடி போதைப் பொருள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 500 கிலோ அளவில் 2,700 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

`அதுவும் வெள்ளை; இதுவும் வெள்ளை!'- எல்லையில் சிக்கிய ரூ.2,700 கோடி போதைப் பொருள்

இந்திய- பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் உள்ள சுங்கச் சாவடியில் நேற்று முன்தினம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வண்டிகளையும் சோதனை செய்வதுபோல அன்று பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப்புக்கு உப்பு மூட்டைகள் ஏற்றிவந்த ஒரு லாரியையும் சோதனை செய்துள்ளனர்.

அவர்களின் சோதனையில் கல் உப்புகள் அடங்கிய மூட்டைகளில் ஒரு மூட்டை மட்டும் மிகவும் அதிக வெள்ளை நிறமாக மாவு போன்று இருந்துள்ளது. அதில் சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியையும் கைப்பற்றி சோதனை நடத்தியுள்ளனர். 

`அதுவும் வெள்ளை; இதுவும் வெள்ளை!'- எல்லையில் சிக்கிய ரூ.2,700 கோடி போதைப் பொருள்

லாரியில் வைக்கப்பட்டிருந்த 600 உப்பு மூட்டைகளையும் பிரித்து சோதனை செய்ததில், அதில் 15 மூட்டைகளில் சுத்தமான ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மூட்டைகளில் 532 கிலோ ஹெராயின் இருந்ததாகவும் அதன் மொத்த மதிப்பு 2,700 கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனுடன் பல வகை போதைப் பொருள்களின் கலவையாக 52 கிலோ கொண்ட ஒரு மூட்டையும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

`அதுவும் வெள்ளை; இதுவும் வெள்ளை!'- எல்லையில் சிக்கிய ரூ.2,700 கோடி போதைப் பொருள்

இதுபற்றிப் பேசியுள்ள அமிர்தசரஸ் சுங்கச்சாவடி ஆணையர் தீபக் குமார் குப்தா, ``அட்டாரியில் பறிமுதல் செய்யப்பட்ட 532 கிலோ ஹெராயினின் சர்வதேச மதிப்பு 2,700 கோடி ரூபாய். இந்திய சுங்கத்துறை வரலாற்றில் இவ்வளவு மதிப்புடைய போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறை. உப்பு மூட்டைகளில் உள்ள முகவரி உண்மையா என விசாரணை நடத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு