Published:Updated:

“வாசிப்பு வாழ்க்கையை மாற்றும்!”

ஆனந்தி
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்தி

‘தி புக் ஷோ’ ஆனந்தி

“வாசிப்பு வாழ்க்கையை மாற்றும்!”

‘தி புக் ஷோ’ ஆனந்தி

Published:Updated:
ஆனந்தி
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்தி

ரேடியோ ஜாக்கி, வீடியோ ஜாக்கி மற்றும் நடிகையாக நமக்குப் பரிச்சயமானவர் ஆனந்தி. புத்தக வாசிப்பை மையப்படுத்தி நூல் அறிமுகத்துக்கென அவர் தொடங்கி நடத்திவரும் ‘தி புக் ஷோ’ என்கிற யூடியூப் சேனல் 4 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ் கிரைபர்களைப் பெற்றுள்ளது. நூல்கள் குறித்த அவரது எளிமையான, சரளமான அறிமுகத் துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ‘தி புக் ஷோ’ சேனல் குறித்தும், மீடியா பயணம் குறித்தும் ஆனந்தியிடம் பேசினோம்…

“கோவைதான் என் சொந்த ஊர். விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டிருந்தப்போ ஒரு எஃப்.எம்-ல பகுதி நேர ரேடியோ ஜாக்கியா இருந்தேன். சென்னை வந்தப்புறம் ‘ஒய் பிளட் சேம் பிளட்’ ஷோ பண்றதுக்கான வாய்ப்பு வந்துச்சு. அந்த ஷோதான் எனக்கு வெளிச்சத் தைக் கொடுத்தது” என்றவர் தனது வாசிப்பு ஈடுபாடு குறித்துப் பேசினார்.

“எனக்கு வாசிப்பு ரொம்ப பிடிக்கும். நான் வேலை பார்த்த ரேடியோ ஸ்டேஷன்ல கையில புத்தகத்தோட இருந்தா அது ஆனந்தின்னு என்னை தொடர்புபடுத்திக் கிட்டாங்க. வாசிப்பு நம்ம வாழ்க்கையில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். ஆரம்பத்துல மாயா ஜாலக் கதைகள், த்ரில்லர் கதைகளைத்தான் வாசிச்சேன். அது நல்ல பயிற்சியா இருந்தது. அதுக்கப்புறம்தான் காதல் கதைகள், கட்டுரை நூல்கள் எல்லாம் வாசிச்சேன். ஆங்கில வழியில் படிச்சதால நிறைய ஆங்கில புத்தகங்கள் வாசிப்பேன். தமிழில் நான் படிச்ச முதல் புத்தகம் ‘பொன்னியின் செல்வன்’. நா.முத்துக்குமார் கவிதைகள், எஸ்.ராமகிருஷ்ண னின் ‘தேசாந்திரி’க்குப் பிறகு சு.வெங்கடேசன் எழுதின ‘வேள்பாரி’ நாவலை வாசிக்க ஆரம் பிச்சிருக்கேன்” என்கிறார்.

“வாசிப்பு வாழ்க்கையை மாற்றும்!”

‘தி புக் ஷோ’ சேனல் தொடங்கும் யோசனை வந்தது எப்படி?

“பரிதாபங்கள் சேனல் சுதாகர்தான் `நீதான் நிறைய படிப்பியே… புக் ஷோ பண்ணு'ன்னு சொன்னார். கோபி – சுதாகர் நகைச்சுவைக் கூட்டணியில மில்லியன் பார்வைகளைத் தாண்டுற வீடியோக்களுக்கு மத்தியில இந்த புக் ஷோவெல்லாம் நல்லா போகுமாங்குற சந்தேகம் இருந்துச்சு. அது நல்லா போகலைன் னாலும் பரவால்ல… நல்ல விஷயத்தைப் பண்ணோம்ங்கிற திருப்தியாவது கிடைக்கு மேன்னுதான் புக் ஷோ பண்ணேன். எதிர் பார்த்ததைவிட நல்லாவே போச்சு. அப்புறம் தான் இதுக்குன்னு தனியா ஒரு சேனல் தொடங்கி அதுக்கு ‘சுதந்திரப் பறவை’ன்னு பெயர் வெச்சு அது இப்ப ‘தி புக் ஷோ’ சேனலா இருக்கு. நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. புத்தகத்தை அறிமுகப்படுத்துறதுக்கான நோக்கம் அதை மக்கள் வாங்கிப் படிக்கணும் கிறதுதான். அப்படி நான் அறிமுகப்படுத்தின புத்தகங்களைப் படிச்சிட்டு பலரும் அனுபவங் களைப் பகிர்ந்துக்கிறாங்க.

நம்ம சமூகத்தில் வெளிப்படையா பேசப் படாத விஷயங்களைப் பத்தின புத்தகங்களை யும் அறிமுகப்படுத்தியிருக்கேன். எழுத்தாளர் லதா எழுதின ‘கழிவறை இருக்கை’ புத்தகத்தை உதாரணமா சொல்லலாம்’’ என்பவர், புக் ஷோ வுக்காக புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் முறை குறித்து சொல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எனக்கா தோணுற புத்தகங்களைப் படிச்சு குறிப்புகள் எடுத்துக்கிட்டு அறிமுகப்படுத்து வேன். சயின்ஸ் ஃபிக்‌ஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். புத்தகத்தின் வழியா அப்படியோர் உலகத்துல வாழ்ந்து பார்த்திட முடியுமே... பூனை வளர்க்க ஆரம்பிச்சபிறகு ‘திங்க் லைக் எ கேட்’ புத்தகத்தை வாங்கினேன். அந்தந்த நேரத்தோட மனநிலையைப் பொருத்துதான் என் புத்தகத் தேர்வு இருக்கும்” என்றவரிடம் அடுத்த திட்டம் குறித்து கேட்டோம்…

“வாசிக்கிறதோட மட்டுமல்லாம அதைச் செயல்படுத்தலாம்ங்குற எண்ணம் இருக்கு. மக்களோடும் எழுத்தாளர்களோடும் கலந்துரை யாடுற திட்டம் இருக்கு. அவங்க படிச்ச நல்ல புத்தகங்களைப் பத்தி தெரிஞ்சுக்கணும்’’ என்கிறார் ஆனந்தி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism