Election bannerElection banner
Published:Updated:

`நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமா?!’ -பயிலரங்கில் பயிற்சி அளிக்கிறார் பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினரை சிறந்த பேச்சாளராக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பை ஜூனியர் விகடன் ஏற்படுத்தித் தருகிறது. இந்த வாரம், ஆளுமைமிக்க பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேச்சுப் பயிற்சியை வழங்கவிருக்கிறார்.

அரசியல் மீதான ஆர்வம், சமூகத்தின் மீதான அக்கறை, இலக்கியங்கள் மீதான ஈர்ப்பு என்று இன்றைய தமிழ்ச் சூழலானது நெகிழவைப்பதாகவே இருக்கிறது. மேடைகள்தான் என்றில்லாமல், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என்று பலதரப்பட்ட வகைகளிலும் நம்முடைய பேச்சு அரங்கேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

நாமும் பேச்சாற்றல்மிக்கவராக விளங்கவேண்டும், பேச்சுத்திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் பலரிடமும் மேலோங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது. இதை மனதில்கொண்டே இளைய சமூகத்தினர், மாணவர்கள், மாணவிகள் ஆகியோர் தமது பேச்சாற்றலை வளர்த்தெடுத்துக் கொள்வதற்கான சிறந்த ஒரு களத்தை ‘ஜூனியர் விகடன்’ ஏற்படுத்திக்கொடுக்கிறது.

https://bit.ly/3tiKyS3

காணொலிப் பயிரங்கம் வாயிலாக அந்த வாய்ப்பு உங்களைத் தேடிவருகிறது. அரசியல், சமூகம், இலக்கியம், ஆன்மிகம், நகைச்சுவை என்று பல்வேறு வகையிலும் உங்களைப் பட்டைத் தீட்டிக்கொள்ள... இந்தப் பயிலரங்கம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். ஜூனியர் விகடனின் ‘தமிழ் மண்ணே வணக்கம்! என்கிற தலைப்பிலான நிகழ்வு, 24.04.2021 (சனிக்கிழமை) மாலை 6 - 7 மணியளவில் நடைபெறுகிறது.

https://bit.ly/3tiKyS3

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

இந்தப் பயிற்சி நிகழ்வில் தமிழகத்தின் ஆளுமைமிக்க பேச்சாளர்களில் ஒருவரான நட்சத்திரப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பங்கேற்று, பேச்சாற்றல் குறித்து பயிற்சி அளிக்கவிருக்கிறார். அவரிடம் நேரடியாகப் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கி முன்பதிவு செய்துகொள்ளுங்கள். இது ஒரு கட்டணமில்லா வெபினார்.

வாருங்கள்... உரக்கப் பேசுவோம், உண்மையே பேசுவோம்!

https://bit.ly/3tiKyS3

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு