Published:Updated:

பெருந்தமிழர் விருது - பூமணி

பூமணி
பிரீமியம் ஸ்டோரி
News
பூமணி

கோவில்பட்டி அருகில் இருக்கும் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பூமணி தமிழ் சினிமாவுக்கு அளித்த பங்களிப்பும் முக்கியமானது.

அறமும் கருணையும் அக்கறையும் கொண்ட எழுத்து பூமணியுடையது. எழுத்தில் 55 ஆண்டுக்காலம் கடந்து இன்னும் தீவிரமாக நகர்ந்துகொண்டிருக்கிறது இந்தக் கரிசல்காட்டுப் படைப்பாளியின் சமரசமற்ற பயணம். எளிய மனிதர்களின் கனவை, இயலாமையை, வறுமையை, உக்கிரத்தை, மகிழ்ச்சியை, காதலைத் தன் எழுத்தின் வழி பேசும் பூமணி, நாவல்கள், சிறுகதைகளில் நிகழ்த்திய அற்புதங்கள் வாழ்வின் சாட்சியங்கள்.

‘வெக்கை’ தொடங்கி ‘அஞ்ஞாடி’ வரையிலான இவரது நாவல்கள், கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்துவதில் தனித்துவம் பெறுகின்றன. பழங்கதை மரபின் இழை களைச் சிதைக்காமல் தனக்கானதொரு மொழிக்கட்டை உருவாக்கிக்கொண்ட பூமணி, தன் மக்களிடையே புழக்கத்திலிருக்கும் சொற்களைக் கொண்டு கட்டியெழுப்பிய வாழ்க்கைகள் காலத்தின் வரலாறாகி யிருக்கின்றன. வறட்டு சாதியப் பெருமிதங் களால் சூறையாடப்படும் அப்பாவி மனிதர்களின் வாழ்க்கையை ‘வெக்கை’ உணர்வோடு காட்சிப்படுத்தியது.

பெருந்தமிழர் விருது - பூமணி

கோவில்பட்டி அருகில் இருக்கும் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பூமணி தமிழ் சினிமாவுக்கு அளித்த பங்களிப்பும் முக்கியமானது. தீப்பெட்டித் தொழிலறையில் வேலை செய்யும் பெண்ணை மையப்படுத்திய தன் கதையை ‘கருவேலம் பூக்களா’க அவரே இயக்கினார். சினிமாவிலும் அவரது இலக்கியமொழி கவனம் ஈர்த்தது. ‘வெக்கை’ நாவல் வெற்றிமாறனின் திரைமொழியில் ‘அசுரனா’கி தமிழுலகத்தில் தாக்கம் விளைவித்தது.

வாழ்வையே இலக்கியமாய் மாற்றி, இலக்கியத்தையே வாழ்வாய் விழையும் போற்றுதலுக்குரிய எழுத்தாளர் பூமணிக்குப் பெருந்தமிழர் விருது வழங்கிப் பெருமைகொள்கிறது ஆனந்த விகடன்.