Published:Updated:

தொல்லியல் துறைக்கு இழப்பு!

நாகசாமி
பிரீமியம் ஸ்டோரி
நாகசாமி

கல்வெட்டியல்தான் இன்று தமிழ்நாட்டு வரலாற்றைக் கட்டமைக்க முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கிறது.

தொல்லியல் துறைக்கு இழப்பு!

கல்வெட்டியல்தான் இன்று தமிழ்நாட்டு வரலாற்றைக் கட்டமைக்க முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கிறது.

Published:Updated:
நாகசாமி
பிரீமியம் ஸ்டோரி
நாகசாமி

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞரும் கல்வெட்டு ஆய்வாளருமான இரா.நாகசாமி வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார்.

இந்திய வரலாறு, தொல்லியல், புராதனக் கட்டடக் கலை, ஓவியம், இலக்கியம், கல்வெட்டெழுத்து, கோயில் சடங்குகள், தத்துவம் எனப் பல்துறை வல்லுநராக முக்கியப் பங்களிப்புகளை நாகசாமி வழங்கியிருக்கிறார். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த நாகசாமி, 1959 முதல் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலர், தமிழக அரசின் தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகளை வகித்துவந்தார். அதைத் தொடர்ந்து, 1966-ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராக நியமிக்கப்பட்டு, 1988-ல் பணி ஓய்வுபெறும்வரை இயக்குநராகத் தொடர்ந்தார்.

சேக்கிழாரின் பெரியபுராண வரலாற்றுப் பாதை குறித்த ஆய்வுக்காகத் தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றார்; இந்திய அரசு வழங்கும் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷண், இவரது சாதனைகளுக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரம்.

தொல்லியல் துறைக்கு இழப்பு!

தொல்லியல் துறையை மாணவர்கள், இளைஞர்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியாக அத்துறை குறித்த கையேடுகளை மலிவு விலையில் கொண்டுவந்தார். பள்ளி, கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று தொல்லியல் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வுப் பயணங்களை நடத்தினார்.

கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தைச் சேர்ந்த கோமகன், “எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மாளிகைமேட்டில் 1980-களில் முதன்முறையாக அகழ்வாய்வைத் தொடங்கி, ராசேந்திர சோழனை உலகுக்கு வெளிக்கொண்டுவந்த பெருமை நாகசாமியைச் சேரும். அவர் இயக்குநராக இருந்த காலகட்டத்தில் நடந்த இந்த அகழ்வாய்வைத் தொடர்ந்து ராசேந்திர சோழனுக்கான கருத்தரங்கையும், பத்மா சுப்ரமணியம், சொர்ணமுகி ஆகியோரைக் கொண்டு கலை நிகழ்ச்சிகளையும் அவர் ஒருங்கிணைத்தார். அவருடைய இந்த முன்னெடுப்பு என்றென்றும் பாராட்டத்தக்க மிக முக்கியப் பங்களிப்பாகும்,” என்றார்.

“கல்வெட்டியல்தான் இன்று தமிழ்நாட்டு வரலாற்றைக் கட்டமைக்க முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், ராஜகோபால், பத்மாவதி, மார்க்சிய காந்தி, பூங்குன்றன் என தொல்லியல், கல்வெட்டுத் துறையில் முக்கிய அறிஞர்களை உருவாக்கிய பெருமை ஓர் ஆசிரியராக நாகசாமிக்கு உண்டு. அவருடன் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்கூட, ஏற்றுப் போற்றக் கூடிய பங்களிப்புகளையும் அவர் வழங்கியிருக்கிறார். அந்த வகையில், நாகசாமியின் இழப்பு கல்வெட்டு, தொல்லியல் துறைக்குப் பேரிழப்பு” என்றார் கோமகன்.