லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

“வசனத்துக்காக மட்டுமல்ல, வாழ்க்கைக்காகவும்...”

 குடும்பத்தினருடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்தினருடன்...

`பொன்னியின் செல்வன்' ஜெயமோகன் - பூரிக்கும் அருண்மொழி நங்கை

அருண்மொழி நங்கை. தமிழின் முன்னணி எழுத்தாளராக அறியப்படும் ஜெய மோகனின் மனைவி என்பதைத் தாண்டி தானும் ஓர் எழுத்தாளர் என்பதை தனது 'பனி உருகுவதில்லை' நூல் மூலம் நிருபித்திருக் கிறார். தன்னுடைய வாழ்வின் உண்மைச் சம்பவங்களையொட்டி எழுதப்பட்ட அக் கட்டுரைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ஜெயமோகனுடனான தனது காதல் மலர்ந்த தருணம் குறித்த இவரது கட்டுரையும் பெருமளவில் வாசிக்கப் பட்டது. அவரை சந்தித்துப் பேசினோம்...

``பட்டுக்கோட்டை பக்கத்துல ஆலத்தூர்தான் சொந்த ஊர். அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆசிரியர்கள். அப்பா திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவருங்கிறதால வீட்டுல திராவிட நூல்கள் மட்டுமில்லாமல் மார்க்சிய நூல்கள், ரஷ்ய மொழிபெயர்ப்புக் கதை நூல்கள் எல்லாம் இருக்கும். இதனால சின்ன வயசிலிருந்தே வாசிப்புப் பழக்கம் வந்தது. கல்லூரிக் காலத்துல சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றோரின் இலக்கிய நூல்களை வாசிக்க ஆரம்பிச்சேன். இலக்கிய வாசிப்பின் மூலமாதான் எனக்கும் ஜெயனுக்கும் (ஜெயமோகன்) நட்பு ஏற்பட்டு, அது காதலாகித் திருமணம் செஞ்சுக்கிட் டோம். ஜெயனோட சேகரிப்புல இருந்த பல வகைப் பட்ட நூல்களையும் வாசிச்சேன்'' என்றவர் தான் எழுத்துக்குள் வந்ததைப் பற்றிப் பேசினார்.

“வசனத்துக்காக மட்டுமல்ல, வாழ்க்கைக்காகவும்...”

``மொழிபெயர்ப்பு வழியாதான் எழுதவே ஆரம்பிச் சேன். டேனிஷ் எழுத்தாளரோட கதையைத் தமிழில் `நீல ஜாடி'ங்குற தலைப்பில் பரிசோதனை முயற்சியா மொழிபெயர்த்தேன். அந்தக் கதை `சுபமங்களா' இதழ்ல வெளிவந்துச்சு. ஜெயன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நடத்தின `சொல்புதிது'ங்குற இணைய இதழ்ல மொழி பெயர்ப்பும், விமர்சனக் கட்டுரைகளும் எழுதினேன். எங்க ரெண்டு பேருக்கும் அந்நியப்பட்ட தர்மபுரியில அவர் தொலைத்தொடர்புத் துறையிலும், நான் தபால் துறையிலும் வேலை பார்த்தோம். அவரோட கன்னியா குமரி மாவட்டத்துக்கே போயிடலாம்னு முடிவெடுத்து தக்கலைக்கு பணி மாறுதல் வாங்கிட்டு வந்தப்புறம் வேலை, குடும்பப் பொறுப்புகளால என்னால எழுத முடியலை'' என்றவர் ஜெயமோகன் குடும்பப் பொறுப்பு களில் சரி நிகராக பங்கெடுத்துக் கொள்வார் என்கிறார்.

``குழந்தை வளர்ப்பு தொடங்கி வீட்டு நிர்வாகம் வரை ஜெயனும் சரிபாதி பங்கெடுத்துக்குவார். நான் குழந்தைகளுக்கு டிபன் பேக் பண்ணேன்னா, அவர் யூனிஃபார்ம் மாட்டி தயார்படுத்துவார். எனக்கு பாத்திரம் கழுவுறதே பிடிக்காது, அவர்தான் பாத்திரம் கழுவுவார். இப்படி அவர் பொறுப்பான கணவரா இருக்கத் தவறுனதில்லை. ஜெயனின் எழுத்துகளை முதல்ல படிக்கிறது நான்தான். `விஷ்ணுபுரம்' நாவல் எழுதினப்போ அதோட கையெழுத்துப் பிரதியை படிச்சு என்னோட கருத்தைச் சொன்னேன். அதை ஏத்துக்கிட்டு சில இடங்கள்ல மாற்றமும் பண்ணினார். ஜெயனின் முதல் வாசகர் நான்தான். இன்னிக்கு அவர் வலை தளத்தில் எழுதுறதைக் கூட விடாம படிச்சிடுவேன்'' என்ற வர்தான் மீண்டும் எழுத வந்தது குறித்துக் கூறினார்.

 குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

``ஜெயன் முன்னாடியே வேலை யிலிருந்து விருப்ப ஓய்வு வாங்கிட் டார். அதற்கு நான் உறுதுணையா இருந்தேன். என்னோட 47-வது வயசுல நானும் விருப்ப ஓய்வு வாங்கிட்டேன். பொண்ணும், பையனும் வளர்ந்துட்டதால பொறுப்புகள் குறைஞ்சு நிறைய ஓய்வுநேரம் இருந்துச்சு. அப்பத்தான் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் நடத்தின 1000 மணி நேர வாசிப்பு போட்டியில கலந்துகிட்டு இரண்டா வது ஆளா வந்தேன். அந்த ஓராண் டுல 155 புத்தகங்கள் படிச்சேன். அந்த வாசிப்பு என்னை எழுதத் தூண்டுச்சு. நம்மால எழுத முடியு மாங்குறதுல இருந்த மனத்தடை விலகின மாதிரி இருந்துச்சு'' என்றவர் இசை மீதான ஈடுபாட்டின் விளைவாக இசை குறித்துதான் முதலில் எழுதியதாகச் சொல்கிறார்.

``தஞ்சாவூர் மாவட்டம்ங்கிறதால இயல்பாவே கர்னாடக இசை கேட்கும் சூழல்லதான் வளர்ந்தேன். என் பாட்டி ஊர்ல இருந்த குஞ்சிதையர்ங்கிற வித்வான் மூலமா கர்னாடக இசை பரிச்சயம் ஆச்சு. என்னோட அந்த இசை ரசனையை மையப்படுத்தி `மரபிசையும் காவிரி யும்'ங்கிற தலைப்புல அனுபவக் கட்டுரை எழுதி எனக்குன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சு பதிவிட்டேன்.

முதல் கட்டுரைக்கே நல்ல விமர் சனங்கள் வந்தது. அதை 15,000 பேர் வாசிச்சிருந்தது பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது. ஜெயன் அந்தக் கட்டுரையைப் படிச்சிட்டு `மொழி வசப்பட்டிருக்கு... தொடர்ச்சியா எழுது'ன்னு சொன்னார். கணவன் - மனைவியா நாங்க எவ்வளவு அணுக்கமா இருந்தாலும், எழுத்துன்னு வர்றப்ப கறாராத்தான் இருப்போம். அவர் என்னை மகிழ்விக்கணும்னு பேசுற ஆள் இல்லை.

முதல் கட்டுரையில் கிடைச்ச உத்வேகம் தான் தொடர்ச்சியா 22 கட்டுரைகள் எழுதி `பனி உருகுவதில்லை' நூல் வர காரணமா இருந்தது. என்னோட நினைவில் நான் பார்த்த மனிதர்களை, சம்பவங்களை எழுதியிருக்கேன். நடந்த நினைவுகளை எழுதினாலும் அதுல புனைவு கலந்தால்தான் அழகா இருக்கும். `Truth but more truth' - அதாவது உண்மை இன்னும் அழுத்திச் சொல்லப்படுகிறதுன்னு தன் வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடுறாங்க. அ.முத்து லிங்கம், யுவன் சந்திரசேகர் போன்ற மூத்த எழுத்தாளர்கள் தந்த விமர்சனம் என்னை செழுமைப்படுத்திக்க உதவுச்சு'' என்றவர் இக் கட்டுரைத் தொகுப்புக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு தனக்குள் பெரும் நம்பிக்கையை விதைத்திருப்பதாக நெகிழ்கிறார்.

 ஜெயமோகன் மணி விழாவின்போது...
ஜெயமோகன் மணி விழாவின்போது...

``பெண்கள் நிறைய பேர் இன்னிக்கு எழுதிக் கிட்டிருக்காங்க. இன்னும் பலரும் எழுத வரணும். அடக்குமுறைகளைக் கடந்து எழுத வர்றவங்க பெண்ணியம் சார்ந்து எழுதலாம். ஆனால், அதைத் தாண்டியும் பல தளங்களில் பெண்கள் எழுதணும்'' என்றவர் கீழ தஞ்சையை களமாகக் கொண்டு ஒரு நாவல் எழுதும் திட்டத்தில் இருப்பதாகக் கூறுகிறார்.

``திருவாரூர் பக்கத்துல இருக்க புள்ளமங்கலம் தான் என் அம்மா ஊர். அந்த கிராமத்துலயே முதன்முதலா படிச்சு ஆசிரியப்பணிக்கு வந்த பெண் அவங்கதான். அந்த கிராமிய சூழல், குடும்ப அமைப்பை வெச்சு ஒரு நாவல் எழுதணும். எனக்கும் ஜெயனுக்கும் சுயநலம் கலக்காத அன்பு எப்பவும் இருக்கும். ரெண்டு பேருமே இன்னொருத்தங்க இயல்பைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்திசைவோடு இருப்போம். என்னுடைய அடுத் தடுத்த எழுத்துப்பணிக்கும் ஜெயன் ஆதரவா இருப்பார்'' என்றவர் தன் கணவர் ஜெயமோகன் திரைக்கதையில் பங்களித்து, வசனம் எழுதி யிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

`` `பொன்னியின் செல்வன்' கலை நேர்த்தியும், பிரமாண்டமும் சேர்ந்த படமா வந்திருக்கு. இயக்குநர் மணிரத்னம் இந்தக் கதையை காட்சிகளா கற்பனை செய்திருக்கும் விதம் பிரமிக்க வைக்குது. இந்தப் படத்துல ஜெயன் பங்களிச்சிருக்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

`பொன்னியின் செல்வன்' பட வசனங்களை கடினமில்லாம நவீன தூய தமிழ்ல எழுதியிருக்கிறது பெரிய ப்ளஸ். இவரோட கதை, வசனத்தில் வெளியான `வெந்து தணிந்தது காடு' திரைப் படத்தையும் ரசிச்சேன். எல்லா கதைகளையும் நான் முதல்லேயே திரைக்கதையாக வாசிச்சிரு வேன். ஜெயன் என்னோட அபிப்ராயத்தைக் கேட்பார். அது அவருக்கு ரொம்ப முக்கியம்'' என்கிறார் அருண்மொழி நங்கை.