எஸ்.சங்கரநாராயணன், தமிழ்ப் புனைகதை உலகில் நாற்பது ஆண்டுக்காலமாகத் தொடர்ந்து இயங்கிவருபவர். புனைவு வாசிக்கும் மகிழ்வைக் கொஞ்சமும் குறையாமல் வழங்கியிருக்கிறது இவரது கட்டுரை நூல், ‘உலகெனும் வகுப்பறை.’

தமிழ்ப்படைப்புகள் மற்றும் படைப்பாளிகள் குறித்த நூல் இது. பலரும் கவனிக்கத்தவறும் தெறிப்புகளைத் தன் வாசிப்பில் கண்டு வெளிப்படுத்தும் இந்த நூல் முழுவதும் அதிகம் பேசப்படாத கதைகளும் அவற்றில் ஒளிந்துகிடக்கும் அற்புதமான நுட்பங்களும் அடையாளம் காட்டப்படுகின்றன.

ராஜமய்யர், லா.ச.ரா, தி.ஜா, ஜெயகாந்தன், சுஜாதா போன்ற மறைந்த எழுத்தாளர்களில் தொடங்கி அண்மைக்காலத்தில் எழுதிவரும் எழுத்தாளர்களின் படைப்புகள்வரை நீள்கிறது இவரின் பிரமாண்ட வாசிப்பு. அதே நேரம் விமர்சனமும் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுகிறது. அதற்கு உதாரணமாக ‘ஜெயமோகன்களின் விஷ்ணுபுரம்’ கட்டுரையைச் சொல்லலாம். 90களின் தொடக்கத்தில் வியப்பை ஏற்படுத்திய புனைவு விஷ்ணுபுரம். அந்தக் காலத்தில் பலரும் விஷ்ணுபுரம் முன்வைக்கும் அரசியல் சார்ந்தே விமர்சித்துவந்த நிலையில் அதில் காணப்பட்ட தகவல் முதல் எழுத்துவரையிலான சகல பிழைகளையும் பட்டியலிட்டு அவர் முன்வைத்த விமர்சனம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

எஸ். ச புனைகதையாளர் மட்டுமல்ல, சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட. எனவே ஒரு மொழிபெயர்ப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் அதன் சவால்களை எதிர்கொள்ளும் உத்தியையும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார்.

‘உலகெனும் வகுப்பறை’ தமிழ் இலக்கிய உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், படைப்புகள், சர்ச்சைகள் என அனைத்தையும் உள்வாங்கித் தன்னுள் பதிவு செய்துகொண்டிருக்கிறது. ஒருவகையில் இந்த நூல், படைப்பின் ரகசியங்களை வாசகர்கள் முன்வைப்பதோடு படைப்பில் இயங்க விரும்புபவர்களுக்கான உந்துதலையும் திறவுகோலையும் அளிக்கிறது. தமிழ்ப் புனைகதை இலக்கியம் குறித்த நல்ல அறிமுகத்தைப் பெற வாசிக்க வேண்டிய நூல் ‘உலகெனும் வகுப்பறை.’

உலகெனும் வகுப்பறை

எஸ்.சங்கரநாராயணன்

நிவேதிதா பதிப்பகம்

10/3, வெங்கடேஷ் நகர் பிரதான சாலை

விருகம்பாக்கம்

சென்னை - 600092

8939387276 / 8939387296

பக். 496

விலை : ரூ.400