Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

சிவன்குமரன்

படிப்பறை

சிவன்குமரன்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை
மகாபாரதம், இந்திய நிலவியலின் பெருங்கதையாடல். வாய்மொழி இலக்கியங்களிலிருந்து நவீன இலக்கியங்கள்வரை செல்வாக்கு செலுத்தும் காவியம். மற்ற நிலங்களைவிடத் தமிழகம் மகாபாரதத்தோடு நெருங்கியே உறவாடியிருக்கிறது. தமிழகத்துக்கென்று தனித்த கதைகள் சேர்ந்த பாரதப் புனைவுகள் உண்டு.

திரௌபதி இங்கு மக்களின் தெய்வமாக இருக்கிறாள். நவீன இலக்கிய காலத்தில் பாரதியின் பாஞ்சாலி சபதம் மிகவும் வலிமையான மீட்டுருவாக்கம். இந்தப் பின்னணியில்தான் நவீனப் புனைவுகளில் மகாபாரதக் கதைகளை நோக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும் பேசப்படும் பாரதக் கதையின் மூலவடிவத்தையும், கதைமாந்தர்களையும் மீள்வாசிப்பு செய்யும் நோக்கோடு மேற்கொள்ளப்படும் இக்கதைகளை ஒரு தொகுப்பாக வாசிப்பதென்பது அலாதியானது. அப்படி ஒரு தொகுப்புதான் ‘பத்மவியூகம்.’

தமிழில் எழுதப்பெற்று வெளிவந்த மீளுருவாக்கச் சிறுகதைகளைத் தொகுத்து (16 கதைகள்) வெளியிட்டிருக்கிறது பரிசல் புத்தக நிலையம். இன்று பெண்ணெழுத்து ஆணெழுத்து என்ற புதிய அணுகுமுறைகள் பார்வைகள் வந்துவிட்டபோது, கௌரவர்களின் ஒரே தங்கை ‘துச்சலை’யை எப்படி அணுகியிருக்கின்றனர் என்பதை உணர, இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெருந்தேவியின் ‘துச்சலை’ கதையும், கணேசகுமாரனின் ‘துர்சலை’ கதையும் உதவக்கூடும். ‘மாயச்சேலை’யில் ‘`எல்லாக் கதையையும் ஆம்பளைங்க சொல்லியே கேக்கக்கூடாது. அது பொம்பளைங்க கதை, பொம்பளைங்களைப் பத்தி ஆம்பளைங்க சொல்ற கதை பாதிக்குப் பாதி அபாண்டமாயிருக்கும்’’ எனப் பெண் கதாபாத்திரத்தின் வழிபேசும் சைலபதி நாட்டுப்புறக் கதைகளிலிருந்து தன் கதையை விரிக்கிறார்.

எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தொ.மு.சி.ரகுநாதன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன், அவெண்ணிலா, ஜா.தீபா ஆகியோர் கதைகளுடன் வாஸந்தி, கல்யாணராமன் ஆகியவர்களின் புதிய கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. புதிய கதைகளின் எழுத்துப்பிழைகள் களையப்படாமை கண்களை உறுத்தினாலும், சீர்மையான ஒரு தொகுப்பு இது. இந்தத் தொகுப்பை நேர்த்தியாகச் செய்திருக்கும் சுப்பிரமணி இரமேஷுக்கு வாழ்த்துகள்.

படிப்பறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பத்ம வியூகம்

தொகுப்பாசிரியர்:

சுப்பிரமணி இரமேஷ்

வெளியீடு: பரிசல் புத்தக நிலையம்

235,P-பிளாக், எம்.எம்.டி.ஏ காலனி,

அரும்பாக்கம், சென்னை-600106

கைப்பேசி: 93828 53646

பக்கம்: 208

விலை: ரூ.200

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism