Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

கபிலம்

படிப்பறை

கபிலம்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

குளிர்ச்சியும் மணமும் கொண்ட நறைக்கொடியைக்கொண்டு இளைய மேகங்களை அடித்துக் கலைக்கும் குரங்குகள்... பழுத்து வெடித்த பலாவும் அது விழும்போது உடைந்து சிதறிய தேனும் கலந்ததால், மதுவாக மாறிப்போன சுனைநீரை அருந்தி போதையுற்று மென்னடைபோடும் மயில்கள்... மதநீரை வண்டுகள் மொய்க்கும்படியாக வெறிகொண்டு, கரும்பாறையைப் பெண்யானை என நினைத்துத் தழுவும் ஆண் யானை கள்... வேட்டையில் விலங்குகளின் ரத்தம் குடித்த அம்புச் செந்நிறத்தின் கண்களுடைய பெண்கள், ஊண் வணிகன் இறைச்சியைக் கொத்தும் மரத்துண்டைப்போல மார்பில் வடுக்கள் கொண்ட ஆண்கள்... என அழகும் வளமும் நிறைந்தது குறிஞ்சித்திணை.அத்தகைய குறிஞ்சியின் நிகரற்ற புலவர் கபிலர்.

படிப்பறை

சங்க இலக்கியத் தொகை நூல்களில், எண்ணிக்கையில் அதிகம் எழுதி முதலிடம் பெறுபவர் கபிலர். அவரின் 235 மொத்தப் பாடல்களில், அகப்பாடல்கள் 197. அவற்றிலும் குறிஞ்சித் திணைக்குரியவை 191. ஒரு குறிப்பிட்ட திணை சார்ந்து, எண்ணிக்கை அளவிலும் நுட்பமான சித்திரிப்பிலும் இவ்வளவு விரிந்து இயங்கியவர் என, கபிலருக்கு ஒப்பாக யாரையும் குறிப்பிட இயலாது. சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற கபிலரின் மொத்தப் பாடல்களையும் தொகுத்ததோடு, அதற்கு உரை எழுதி, அருஞ்சொற்பொருள் வழங்கிச் சிறப்பித்திருக்கிறார், முனைவர் ம.ரா.போ.குருசாமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாடற்செய்திகளைச் சுவைபட விளக்குவதோடு, அவற்றில் தற்கால ஆய்வு மற்றும் விமர்சனப் பார்வையையும் வெளிப்படுத்தி யிருக்கிறார் குருசாமி. ‘கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பட்டியலிட்டிருக்கும் தொண்ணூற்றொன்பது பெயர்களும் மலர்களுடையவை அல்ல, அவற்றுள் இலைகளும் கொழுந்துகளும்கூட உண்டு’ என்ற நச்சினார்க்கினியரின் கூற்றை ஏற்கும் அதேசமயம், முந்தைய பல உரையாசிரியர்களின் பார்வையைச் சில இடங்களில் பணிவோடு மறுப்பதும் கபிலரையே ஓரிடத்தில் வருத்தத்துடன் கடிந்துகொள்வதும் நூலின் சுவாரஸ்யமான பகுதிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இளம்பெண்களின் ‘காமநோய்’ மிகுதியைத் தணிக்க, அவர்களுக்கு ‘வெறியாட்டு’ எனும் சடங்கு நிகழ்த்தப்படுவதுண்டு. அதில் இளம் ஆட்டைப் பலியிடுவது வழக்கம். அப்படி நடத்தப்படும் தொடர்ச்சியான பலிகளின் குருதி படிந்து படிந்து மிகுதியாகப் புலால் நாறும் பாறைமீது நின்று, தன்னைப் பிரிந்துசென்ற தலைவன் வாழும் மலையை ஏக்கத்தோடு ஒரு பெண் பார்த்து நிற்கும் சித்திரத்தை எழுதியிருக்கிறார் கபிலர். தமிழையும் குறிஞ்சி வாழ்வையும் காதலையும் இயற்கையின் பேரழகையும் துய்க்க விரும்பும் ஒருவர் இந்நூலில் மயங்கித் திளைத்துப் போவார்கள்!

கபிலம்

முனைவர் ம.ரா.போ.குருசாமி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை.

பக்கங்கள் : 570 ; விலை : 390 ரூபாய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism