Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

பச்சை வைரம் - கொ.மா.கோ.இளங்கோ

படிப்பறை

பச்சை வைரம் - கொ.மா.கோ.இளங்கோ

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

வரலாற்றில் ரத்தம் தோய்ந்த பக்கங்கள் நிறைய உள்ளன. வெள்ளையர்கள் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக்கி விலங்குகளைப்போல நடத்திய கொடூரம் அப்படியான ஒரு ரத்தவாடையடிக்கும் சரித்திரம். இன்று நினைத்தாலே திகிலடைய வைக்கும் இந்தக் கொடூரம் பல காலம் நீடித்தது. அமெரிக்கப் புரட்சியாளர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையில் நடந்த போருக்குப் பிறகு படிப்படியாக முடிவுக்கு வந்தது. அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்யப்பட்டார்கள். ஒரு குழுவைக் கப்பலில் ஏற்றிவந்து மேற்கு ஆப்பிரிக்காவை ஒட்டிய சியாரோ லியோன் பகுதியில் ஓர் இலவ மரத்தடியில் விடுவித்தார்கள். விடுதலையான ஆப்பிரிக்கர்கள், அந்த மரத்தடியில் கூடிப் பிரார்த்தனை செய்தார்கள். ஒருவருக்கொருவர் நன்றி சொல்லி அன்பை, நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த மரத்தையே மையமாகக் கொண்டு தங்களுக்கான இருப்பிடங்களையும் வளங்களையும் உருவாக்கிக்கொண்டார்கள். அந்த நகரம், ‘விடுதலைத் திருநகர்’ என்று அழைக்கப்பட்டது. அந்த ‘இலவ மரம்’ மேற்கு ஆப்பிரிக்கர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. ‘பச்சை வைரம்’ என்று அதைக் கொண்டாடுகிறார்கள்.

படிப்பறை

சியரா லியோன் நாட்டில் பிளேக் நோய்க்குப் பெற்றோரைப் பறிகொடுத்து, பட்டுக்கூடு காப்பகத்தின் பராமரிப்பில் வசிக்கும் 13 வயது பிளிகி, தம் மூதாதையரின் ‘பச்சை வைர’ விடுதலை வரலாற்றை அறிந்துகொள்ளும் பயணம்தான் இந்த நாவல்.

அடிமை வணிகம் என்ற கனமான வரலாற்றுக் கூற்றைப் பதின் பருவக் குழந்தைகள் அறிந்துகொள்வதற்குத் தக்க அரசியல் கலந்து, சுவாரஸ்யக் கதையாக மாற்றியிருக்கிறார் நாவலாசிரியர் கொ.மா.கோ.இளங்கோ. வனங்களுக்கும் மலையுச்சிகளுக்குமான பயணம், ஆங்காங்கே நிலத்தில் தட்டுப்படுகிற நினைவுச்சின்னங்கள் பிளிகியின் மனதில் எழுப்புகிற எழுச்சி, கதையின் உள்ளீடாக ஆங்காங்கே சொல்லப்படுகிற நாட்டுப்புறக்கதைகள் என, வெறுமனே கருத்துகளை வார்த்தைகளில் சுமத்திவிடாமல் நேர்த்தியாக சிறுவர்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர்.

நாவலை வாசித்துக்கொண்டிருக்கிற நாமும் வெள்ளையர்களின் கொடுங்கோன்மைக்கு ஆளானவர்கள். அதனால் கதையோடு வெகு எளிதாக ஒன்றமுடிகிறது. அடிமைகளாக்கப்பட்டோருக்கு நேர்ந்த துயரங்களை பிளிகியையும் அவளின் வயதொத்த சிறுவர்களையும் கொண்டு கதையின் போக்கிலேயே தனி நாடகமாக்கியிருப்பது நல்லதொரு யுத்தி.

பச்சை வைரம் - கொ.மா.கோ.இளங்கோ

வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

தொலைபேசி: 044-24332424

இ-மெயில்: thamizhbooks@gmail.com

பக்கங்கள்:128

விலை: ரூ.120

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!