Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

இந்த நிழல் உலகத்தோடு தொடர்புடைய பலர் இப்போது உயிருடன் இல்லை.

படிப்பறை

இந்த நிழல் உலகத்தோடு தொடர்புடைய பலர் இப்போது உயிருடன் இல்லை.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

அன்பு, பாசம், காதல், கோபம், காமம், வன்முறை, துரோகம், மோதல், பழிவாங்குதல் என்று அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்துகிற நகரம் மதுரை. அந்த நகரின் பின்னணியில் மேற்கண்ட அனைத்து உணர்வுகளோடு அரசியலையும் கலந்து விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் லஷ்மி சரவணகுமார் ஜூனியர் விகடனில் எழுதிய ‘ரெண்டாம் ஆட்டம்’ தொடர் இப்போது புத்தகமாகியிருக்கிறது.

ஒரு கொலை, அதற்குப் பின்னேயுள்ள அதிகார மோதல், இணக்கமாக இருந்த மனிதர்களை அந்த மோதல் வேட்டைக்களத்தில் எதிரெதிரே நிறுத்துவதால் நிகழும் ரத்த கணங்கள், அதைத் தொடர்ந்து வரும் பழிக்குப் பழி என்று இந்தக் கதை பேசும் விஷயங்கள் ஒவ்வொன்றும் காலந்தோறும் அரசியல் களம் கண்டுகொண்டிருப்பதுதான். ஆனால் அவற்றை நிஜங்களோடு கலந்து ஒரு சுவாரஸ்யப் பின்னணியில் லஷ்மி சரவணகுமார் எழுதியிருப்பதுதான் இந்நாவலைச் சிறப்பாக்குகிறது. “இந்த நிழல் உலகத்தோடு தொடர்புடைய பலர் இப்போது உயிருடன் இல்லை. தப்பிப் பிழைத்த பலர் வடுக்களைச் சுமந்துகொண்டு அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் நாவலாசிரியர். அதைப் படித்தபிறகு நாவலுக்குள் உட்புகும்போது செல்வம், காளி, முத்தையா, மருது, மணி, ஜெகதி, சுப்பு, கிருஷ்ணவேணி, சோமு, ராமமூர்த்தி, அறிவழகன், பாண்டியன், கருப்பு, அம்சவல்லி என்று நாவலின் கதாபாத்திரங்கள் உயிரோட்டத்துடன் நம்முடனேயே வாழ்கின்றன.

படிப்பறை

மதுரை மண்ணைச் சுற்றி எத்தனை கதைகள் எழுதப்பட்டாலும் எழுதப்படாத கோணத்தில், மதுரையின் இருண்ட வீதிகளுக்குள் பயணிக்கிறது கதை. எழுத்தில் லஷ்மி சரவணகுமார் காட்டியிருக்கும் பரபரப்பை, தன் ஓவியங்களில் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார் ஓவியர் பாலகிருஷ்ணன்.

தொடராக வந்துகொண்டிருந்தபோதே ‘புத்தகமாக வரும்போது இந்த ஓவியங்களோடு வரவேண்டும்” என்ற வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க வண்ண ஓவியங்களோடு பதிப்பித்திருக்கிறது விகடன். கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உடல்மொழி, காமத்தையும் காதலையும் காட்டும் கண்கள், வீசப்படும் அரிவாள்கள், தெறிக்கும் ரத்தம் என்று ஒவ்வொரு அத்தியாத்திலும் பாலகிருஷ்ணன் ஓவியங்கள் கச்சிதமாக அமைந்திருக்கின்றன.

அரசியல் அதிகாரங்களுக்காகப் பழிவாங்கல்களும், பகடையாட்டமும் தொடரும் இக்காலகட்டத்தில் சரியாக வெளியாகியிருக்கிறது இப்புத்தகம். முழுமையாகப் படித்துமுடித்தபின் ஒரு முழுநீள ஆக்‌ஷன் த்ரில்லரைப் பார்த்த திருப்தியைத் தருகிறது ரெண்டாம் ஆட்டம்!

ரெண்டாம் ஆட்டம் -ல ஷ்மி சரவணகுமார்

ஓவியங்கள்: பாலகிருஷ்ணன்

விகடன் பிரசுரம்

தொடர்புக்கு:

80560 46940

books.vikatan.com

பக்கங்கள் : 432

விலை : ரூ. 650

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism