Published:Updated:

ஓடுகாலி... இந்த வார்த்தையைச் சொல்லும் முன் கவனியுங்கள்...

அவள் நூலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் நூலகம்

அவள் நூலகம்

தின்ம வயதின் நிதர்சனங்கள் மற்றும் அது சார்ந்த சிக்கல்களுக்கு இந்தியச் சமூக மற்றும் சட்டத் தீர்வுகள் குறித்த ‘பார்ட்னர்ஸ் ஃபார் லா அண்டு டெவலப்மென்ட்' அமைப்பு `Why Girls Run Away To Marry' என்கிற ஆய்வு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.

ஒரு பெண் (அ) சிறுமி தனக்கு விருப்பப்பட்ட நபருடன் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்கிறாள். அவளை அந்தக் குடும்பம் ‘ஓடுகாலி’ என்கிறது. சமூகம் ‘வீட்டை விட்டு ஓடிப்போய் திருட்டுக் கல்யாணம் செய்துகிட்டா' என்கிறது. ஆனால், படிப்பையும் கொண்டாட்டமான தனது இளம் பிராயத்தையும் மட்டுமே சிந்திக்க வேண்டிய சிறுமி ஏன் திருமண முடிவை எடுக்கிறாள்? அவள் வீட்டை விட்டு வெளியேறக் காரணம் எது? இப்படி இதுவரை சமூகம் எழுப்பாத பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இதுவரை சமூகம் எழுப்பாத பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

காதல் திருமணங்களை சுய நிச்சயத் திருமணம் (Self arranged marriage) என்று குறிப்பிட்டால்தான், அவர்கள் ஏன் சுயமாக நிச்சயித்துக்கொள்கிறார்கள் என்கிற கேள்வியை முன்வைக்க முடியும். `காதல் திருமணம்' என்று குறிப்பிடும் சூழலில், அது உணர்வு சார்ந்து ஒரு பார்வைக்குள் மட்டும் அடங்கிவிடுகிறது என்று அதற்கான விளக்கத்தையும் இந்த நூலில் முன்வைக்கிறார்கள்.

2016-2017 காலகட்டத்தில் டெல்லி, மும்பை மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 15 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்களை (அ) சிறுமிகளைக் காதல் மற்றும் சிறுவயதுத் திருமணம் சார்ந்த சூழலுக்குத் தள்ளும் சமூகப் பொருளாதார அம்சங்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கம், பதின்ம பாலியல் (Adolescent sexuality) எனப் பல்வேறு அளவுகோல்கள் கருத்தில்கொள்ளப்பட்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதாரணத்துக்கு... மும்பையைச் சேர்ந்தவர் 16 வயதான நீரு... ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த பெற்றோர் அவள் படிப்பை நிறுத்தியதோடு, பிடித்த உடை அணியவும் பிடித்த நண்பர்களுடன் பேசவும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். விளைவு, போனில் இருவரின் நட்பும் ஆழப்படுகிறது. குடும்ப அழுத்தம், இருவரின் சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக ஒரு நாள் ஒருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோயிலில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

நீருவின் பெற்றோர் கொடுத்த போலீஸ் புகார் காரணமாக இருவரும் தேடிக் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். 16 வயதான சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதும் பாலியல் சட்டரீதியிலான குற்றம் என்பதால் நீருவின் கணவர்மீது வழக்கு தொடரப்படுகிறது. நீரு, சிறார் நலவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். இருப்பினும் தான் முழு மனத்தோடுதான் கணவருடன் சென்றதாக நீரு வாக்குமூலம் கொடுத்ததால் வழக்கிலிருந்து கணவர் விடுவிக்கப்பட்டார். 18 வயது நிறைவடைந்தால் மட்டுமே அவர்களது திருமணம் செல்லுபடியாகும் என்பதால், தன் ஆண் நண்பருக்காக நலவாழ்வு மையத்தில் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

சிறுவயதுத் திருமணம் குற்றம் என்று சொல்லும் சட்டம் பதின்மவயதுப் பிள்ளைகள் சந்திக்கும் இதுபோன்ற வளர்ப்புச் சூழல்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஆய்வுகளை மேற்கொண்ட சமூகவியலாளர்கள்.

அவள் நூலகம்
அவள் நூலகம்

கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்த ரோஸி, வறுமை காரணமாக பகுதிநேர வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம். பயணத்தின்போது காதல் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் பணியிடத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார். அதன் காரணமாகக் கருத்தரிக்கிறார். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. காதலரின் வீட்டில் ரோஸியை ஏற்க மறுக்கிறார்கள். பாலியல் வன்முறை தொடர்பான சட்ட ரீதியான செயல்பாடுகளின்போது அவர் கருவை கலைக்கத் தயாரா அல்லது குழந்தையைப் பெற்றெடுக்க விருப்பப்படுகிறாரா என்று கேட்கப்படுகிறது. குழந்தையை வளர்த்தெடுக்கவே விரும்புவதாகச் சொல்கிறார். குடும்பமும் அவரது முடிவுக்குச் சம்மதிக்கிறது. நலவாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ரோஸி, குழந்தையைப் பெற்றெடுக்கிறார்.அது தத்துக்கொடுக்கப்பட்டதும் மீண்டும் படிக்கச் செல்கிறார். படித்து முடித்ததும் காதலரின் வீட்டில் பேசி இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இது ஒருவகையில் வரவேற்கத் தகுந்த மாற்றமாகவே இருக்கிறது.

இருப்பினும், பதின்ம வயதின் பிரச்னை களுக்கு மற்ற குற்றங்களுக்கானது போல தண்டனைகள் மட்டுமே தீர்வாகாது. சட்டத்தின் பரிணாம வளர்ச்சியே காலத்தின் அவசியம்.