`நீங்களும் செஃப் ஆகலாம்' என்கிற அருமையான புத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

யார் வேண்டுமானாலும் சமைத்துப் பார்க்கும்படியான எளிமையான செய்முறைகள் இந்தப் புத்தகத்தில் ஏராளமாகக் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

சுவையோடு ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி, குழந்தைகள் ஆர்வத்துடன் சாப்பிடும் வகையில் தனித்தன்மையுடன் இந்த ரெசிப்பிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இட்லி, சப்பாத்தி, தோசை, பூரி, காபி, டீ, சட்னி பகுதிகள் விதவிதமான சமையற் குறிப்புகளுடன் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்குமான செய்முறைகளையும் தேவையான பொருள்களையும் அட்டவணைகளில் கொடுத்திருப்பது புதுமையான ஐடியா. நாம் பக்கங்களைத் திரும்பத் திரும்ப புரட்டித் தேட வேண்டாம். அட்டவணையைப் பார்த்தாலே என்ன செய்யப் போகிறோம், என்னென்ன பொருள்கள் தேவை என்பதை நாம் மிக எளிதாக அறிந்துகொள்ளலாம்.

இட்லி... தமிழ்நாட்டில் காலம் காலமாக உள்ள மிகவும் பாரம்பர்யமான ஓர் உணவு. இட்லியில் இவ்வளவு வெரைட்டிகளா என்று நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன இந்தப் புத்தகத்தில் உள்ள ரெசிப்பிகள். ஸ்டஃப்டு இட்லி, கீமா இட்லி என இட்லியில் ஏகப்பட்ட வெரைட்டிகள். குறிப்பாக நவதானிய இட்லி, சிறுதானிய இட்லி, இட்லி மஞ்சூரியன் போன்றவை மிகச் சிறப்பு.

தோசை, இட்லிக்குத் தேவையான பொடி வகைகளால் பக்கத்துக்குப் பக்கம் சுவை கூடுகிறது. இதே போலத்தான் பூரி வகைகளும்... கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் கலர்ஃபுல் ஆக இருக்கின்றன. அதுவே சுவையையும் உறுதிப்படுத்துகிறது. பொடி வகைகளில் ஆந்திரா பொடி, மகாராஷ்டிரா பொடி, கர்நாடகா பொடி, தஞ்சாவூர் பொடி என்று அசத்தி இருக்கிறார்.

அடுத்ததாக சப்பாத்தி, பரோட்டா வகைகள்... விதவிதமான மசாலாக்களைக்கொண்டும், காய்கறிகளைக்கொண்டும், தானியங்களைக்கொண்டும், சப்பாத்தி, பரோட்டா வகைகளை அளித்திருக்கிறார் இந்த செஃப்.

மெக்ஸிகன் பரோட்டா, மஞ்சூரியன் பரோட்டா போன்றவற்றை நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம். குழந்தைகளுக்கு இவையெல்லாம் நிச்சயம் பிடிக்கும்.

பொடி வகைகள் தயாரிக்கக் கற்றுக்கொடுத்தது மட்டுமல்ல... விதவிதமான ரசம் செய்யும் விதங்களும், அவற்றின் மருத்துவ பயன்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. துவையல் வகை களுக்கும் அப்படியே.

மொத்தத்தில் சமையலறைக்கே சென்றிராதவர்கள்கூட மிக எளிமையாக இந்தப் புத்தகத்தைப் பார்த்தே அருமையாகச் சமைக்கக் கற்றுக்கொண்டு விடலாம்.

இந்தப் புத்தகத்திலுள்ள படங்கள் ஒவ்வொன்றும் நம் ஆர்வத்தைத்தூண்டும் வகையில் அமைத்திருப்பது மற்றொரு சிறப்பு. `இப்பவே செய்து பார்க்கணும்' என்று நம் மனத்தைச் சுண்டி இழுக்கின்றன படங்கள் ஒவ்வொன்றும். அதுமட்டுமல்ல... சமைக்க வழிகாட்டும் வீடியோ இணைப்புகள் ரொம்பவே புதுமையான ஸ்பெஷல் விஷயம்.

பார்வைக்கு சுவாரஸ்யமானது மட்டுமல்ல... பயன்படவும் கூடியது என்பதால், ஒவ்வொரு சமையலறையிலும் அவசியம் இருக்கவேண்டிய புத்தகம் இது. ஆசிரியர் கிளாஸிக் செட்டிநாடு லக்ஷ்மி வெங்கடேஷுக்குப் பாராட்டுகள்!

நீங்களும் செஃப் ஆகலாம்

ஆசிரியர்: லக்ஷ்மி வெங்கடேஷ்

வெளியீடு: விகடன் பிரசுரம்

757, அண்ணா சாலை, சென்னை-600002

Tel: +91 44 42634283/84

Ext: 511

books.vikatan.com