Published:Updated:

A.R.Rahman பகிர்ந்த தமிழணங்கு ஓவியம்; எப்படி உருவானது? ஓவியர் சந்தோஷ் நாராயணன் உடன் ஒரு நேர்காணல்

ரஹ்மான் பகிர்ந்த தமிழன்னை ஓவியம்

"கருப்பு நிறம் அவலட்சணம் என யார் சொல்கிறார்கள். கருப்பு நிறம் யாருக்கு பிடிக்காது என்பதையும் சேர்த்துப் பார்க்கணும். அப்படி பார்க்கும் போது எதிர்ப்பவர்கள் யார் எனத் தெரிஞ்சுடும்" - சந்தோஷ் நாராயணன்

A.R.Rahman பகிர்ந்த தமிழணங்கு ஓவியம்; எப்படி உருவானது? ஓவியர் சந்தோஷ் நாராயணன் உடன் ஒரு நேர்காணல்

"கருப்பு நிறம் அவலட்சணம் என யார் சொல்கிறார்கள். கருப்பு நிறம் யாருக்கு பிடிக்காது என்பதையும் சேர்த்துப் பார்க்கணும். அப்படி பார்க்கும் போது எதிர்ப்பவர்கள் யார் எனத் தெரிஞ்சுடும்" - சந்தோஷ் நாராயணன்

Published:Updated:
ரஹ்மான் பகிர்ந்த தமிழன்னை ஓவியம்
சூருடைச்‌ சிலம்பில்‌, சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண்டு உருவின்‌ அணங்குமார்‌ வருமே
கபிலர் அகநானூற்று பாடல்
`தாம்வேண்டு உருவின்' என்கிற வரியை `விரும்பிய உருவினை எல்லாம்‌ எடுத்துக்‌ கொண்டனவாக' என அணங்குகளின் தோற்றத்திற்கு விளக்கம் அளிக்கிறார் புலியூர் கேசிகன்.

எழுத்தாளரும் ஓவியருமான சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு என்கிற ஓவியம்தான் இந்த வாரத்தின் வைரல். திரிந்த சடையும் கயல் விழிகளும் வெள்ளை நிற சேலையில் ழகர வேலை ஏந்தி கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறார் தமிழ்த்தாய். இதுவரை யாரும் காணாத உருவத்தில் சந்தோஷ் நாராயணன் வரைந்திருக்கிறார்.

2019-ல் சந்தோஷ் வரைந்த இந்த ஓவியத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிரவே, அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரமாரியாக வரத் தொடங்கின. இந்த ஓவியம் குறித்து சந்தோஷ் நாராயணனிடம் பேசினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

"இந்த ஓவியத்தின் பின்னணி பற்றிச் சொல்லுங்க..."

"2019 இந்தி திணிப்பு சார்ந்த பிரச்னைகள் நடந்தப்போ, அதற்கு வழக்கமாக ஏன் எதிர்க்கிறோம் என்பதைப் பற்றி வரையாமல் தமிழுடைய பெருமையைப் பற்றி வரையணும்னு நினைச்சு செய்ததுதான் இது. பொதுவாகவே தமிழன்னை சாந்தமாக இருக்கணும் என்பதெல்லாம் கிடையாது. சங்க இலக்கியத்துல அமைதியைப் பற்றி பாடுகிற அதே புலவர்கள் புறநானூற்றுல வீரம், கோபம், சினம் பற்றியெல்லாம் பாடுகிறார்கள். தமிழணங்கு சினத்தின் வடிவம், எதிர்ப்புணர்வின் வடிவம்."

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"தமிழ்த்தாயைக் கருப்பு நிறத்தில் வரைந்ததற்கு விமர்சனங்கள் வருதே... "

"கருப்பு கூடாதுன்னு யாரு பேசுறாங்கன்னு பார்க்கணும்.பொதுவாக எதிர்ப்பு என்பது இல்லை. கருப்பு நிறம் அவலட்சணம் என யார் சொல்கிறார்கள். கருப்பு நிறம் யாருக்கு பிடிக்காது என்பதையும் சேர்த்து பார்க்கணும். அப்படி பார்க்கும் போது எதிர்ப்பவர்கள் யார் எனத் தெரிஞ்சுடும். நம்முடைய தொல் வடிவத்துல வரைஞ்சுருக்குறேன். திராவிடர்கள் தமிழர்களின் தொல்வடிவம் கருப்பாக தான் இருந்திருக்க வாய்ப்பு அதிகம். ஏன் உலகம் முழுவதும் இருக்கிற மனிதர்கள் முன்பு கருப்பு நிறத்தில் தான் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என ஆய்வாளர்கள் சொல்கிற கட்டுரை ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். கருப்பு என்பது நமது ஆதி நிறம். அடிப்படையான இயற்கையான நிறம். கருப்பு என்பது அழகில்லை என்று நினைப்பவர்களுடைய மனநிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதைத் தான் யோசிக்க வேண்டி உள்ளது."

தமிழணங்கு ஓவியம்
தமிழணங்கு ஓவியம்

"இதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது"

"தமிழணங்கு என்கிற வார்த்தை தமிழ்த்தாய் வாழ்த்தில் வருகிற ஒன்று. அணங்கு என்பது கொற்றவை மாதிரி, மண் சார்ந்த தமிழ் பெண் தேவதையை குறிக்கிற வார்த்தை தான். வைதீக மரபில் வரும் சிற்ப வடிவத்திற்கு பதிலாக நாட்டாரிய வடிவில் இசக்கி, நீலி, யட்சி போல வரைய முற்பட்டேன். ஹரப்பால கிடைச்சுருக்கிற சிலை வடிவத்தைப் பாருங்க. கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இருக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை கொண்டவர்கள் தான் இதனை எதிர்ப்பார்கள். இந்த மண்ணின் தன்மை தமிழின் தொன்மையைப் புரிந்துகொள்பவர்கள் இதனோடு உணர்ச்சிபூர்வமாக கனெக்ட் ஆகிறார்கள்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"நீங்க முன்பு விகடனில் கலைடாஸ்கோப் , அஞ்ஞான சிறுகதைகள் எழுதியிருந்தீங்க. மினிமலிசம் சார்ந்து நிறைய செயல்படுறீங்க. அதைப் பற்றி"

"ஆர்ட்க்குள்ள மினிமலிசம் கொஞ்ச வருடத்திற்கு முன்பு இருந்து தான் தான் ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். தமிழுக்கு இது புதுசு இல்லை. முன்ன இருந்தே நம்ம கிட்ட இருக்க சுருங்க சொல்லுதல் என்பதே மினிமலிசம் தான். வெஸ்டர்ன்ல இருந்து வந்த கான்செப்ட் இது. வெஸ்டர்ன்ல இருக்கிற ஆர்ட், வாழ்க்கைமுறை இவற்றில் மினிமலிசம் பற்றி ஒரு கட்டுரை தொகுப்புகூட எழுதியிருக்கிறேன். சொல்ல போனா காந்தியை ஒரு மினிமலிஸ்ட்னு சொல்லலாம். தற்சார்போடு வாழ்வதுதான் நம்ம வாழ்க்கை. இந்த 25 வருஷம் தான் நுகர்வு அதிகமாகியிருக்கிறது. அந்த வளர்ச்சி தவிர்க்க முடியாது என்றாலும் அதீதமாக போயிடாம இருக்கணும் என்பது தான் மினிமலிஸ்ட் வாழ்க்கைமுறை"

ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்வு
ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்வு

"ஏ.ஆர்.ரஹ்மான் உங்க ஓவியத்தைப் பகிர்ந்திருந்தார். இதை எப்படி பார்க்குறீங்க"

"ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்ததால தான் இவ்வளவு பரந்தளவிலான ரீச் கிடைச்சிருக்கு. இன்னொன்னு இதை நான் வரைந்ததால என்னுடைய ஓவியம் என்பது கிடையாது. சமூகத்தோட ஒட்டுமொத்த உணர்வை தான் கலைஞர்கள் வெளிப்படுத்துறாங்க. அவனுக்கு பென்சில், பேனா, டிஜிட்டல் டூல் தெரியும் என்பதால் அதன் வழியாக சொல்கிறான். இந்த நேரத்தில் மொத்த மக்களுடைய சமூக உணர்வு என்பதாகத் தான் நான் இதை பார்க்கிறேன். இதுல நான் ஒர்க் பண்ணியிருக்கிறேன். அவ்வளவு தான்"

சந்தோஷ் நாராயணன் வடிவமைத்த ரைட்டர் பட போஸ்டர்
சந்தோஷ் நாராயணன் வடிவமைத்த ரைட்டர் பட போஸ்டர்

"கலைத்துறையில் அடுத்து என்ன செய்துட்டு இருக்கீங்க"

"சமீபத்தில் வெளியான ரைட்டர் படத்தில் பணியாற்றி இருந்தேன். அதுபோல சில ப்ராஜெக்ட்டுகள் போய்ட்டு இருக்கு. அடுத்த ஸ்கிரிப்ட் ஒன்னும் பண்ணிட்டு இருக்கேன். விஷுவலாகவும் யோசிப்பதால் படம் இயக்குற முடிவிலும் இருக்கேன்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism