சினிமா
Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 12 - ஒலிப்பதிவுக்கூடம்

தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
News
தாழ் திறவாய்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

காதல் ஓர் இலவம்பஞ்சு

பறக்கத் தெரியும்

திசை தெரியாது

பல்லவியைப் படியெடுத்து

குயில் கூடத்தில்

கவிதை பேசும் கிளியாய்ப் பறந்தேன்

தாழ் திறவாய்! - கதவு 12 - ஒலிப்பதிவுக்கூடம்

சீவாலியை பலூனாய் ஊதும் நாதஸ்வரம்

பிரம்புடன் இருக்கும்

வாத்தியாராய் டிரம்ஸ்

ஆலங்குச்சியில் பல்துலக்கும்

வயலின்

சிற்பங்களின் தனங்களாய் தபேலாக்கள்

தலைநிமிர்ந்து நிற்கும்

தம்புரா

மடியில் தவழும் வீணை

குயில் ஊதும் புல்லாங்குழல்

இன்னபிற இசை உயிர்கள் வந்துபோகும்

ஆலயமாய் ஒலிப்பதிவுக்கூடம்

ஆர்மோனியத்தின் பற்கள்

அகராதிச் சொற்கள்

பேனாவும் பேப்பரும் தொழில்முறை நண்பர்கள்

இசை தாயாய் ஆசீர்வதிக்க

கவிஞனின் கர்ப்பத்தில்

எத்தனை கருவூலங்கள்

சந்தங்களுக்கு எழுதுவது சொந்தங்களுடன் சுவாசிப்பது

கூடத்திலிருந்து ஒரு குரல்

‘தேர்தலுக்கான பாட்டு’ என்றார்

கருத்துப்பிழையுள்ள கட்சிக்காரர்

‘வேட்புமனு போடாமலே

வெற்றிபெற வேண்டுமா?’ என்றேன்

பதிவுக்கூடத்திலிருந்து

பதில் வரவில்லை!