கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 13 - மனநலக் காப்பகம்

மனநலக் காப்பகம்
பிரீமியம் ஸ்டோரி
News
மனநலக் காப்பகம்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

அவன் எழுதுவான்

கவிதை சந்தமாக

பல எழுத்துகள் விளிக்கும்

புளியந்தோப்பு மணிக்கூண்டுப் பூங்காவில் ஒவ்வொருநாளும் பக்கம்பக்கமாய்

நிரப்பிக்கொண்டு வருவான்

தாழ் திறவாய்! - கதவு 13 - மனநலக் காப்பகம்

எழுத்துகளைத் தானே படித்து பதிவிட்டுக்கேட்பான்

அவனுக்கு அவனே மேய்ப்பாளன்

கடவுளின் புன்னகையென

அவ்வப்போது சிரிப்பான்

மஞ்சப்பை கொண்ட மானுடன்

வீதியெங்கும் விடைபெறுவான்

தனிமையின் தவத்தில்

சித்தனாய் மணப்பவன்

என்னோடு மட்டும்

கவிதையைக் கலப்பான்

எழுதி எழுதியே

ஏமாந்துபோனவன்

மனதின் கூச்சல் பெருக

மருத்துவ மௌனத்தில் அனுமதித்தான்

தாழ் திறவாய்! - கதவு 13 - மனநலக் காப்பகம்

ஒரு பொழுதில் கவிஞனைக் காண

பீடிக்கட்டு நோட்டு பேனா

வாங்கிக்கொண்டு

மனநல ஆலயம் சென்றேன்

சிமெண்டு சிம்மாசனத்தில்

அமைதி சூழ அமர்ந்திருந்தோம்

நிமிட முள்ளாய் மௌனம் துடித்தது

பிறிதொரு நாள் செல்கையில்

முக்கால் பாகம் முழுமையாய் இருந்தான்

பேசிப்பிரியும்போது

மருத்துவர் சொன்னதாய்

என்னிடம் சொன்னான்

“கவிதை எழுதியே

பித்துப் பிடித்தவனுக்கு

நோட்டும் பேனாவும்

எவன்டா வாங்கியாந்தான்?”