பிரீமியம் ஸ்டோரி

எட்டு வயசுல இருந்து

செனாய்க்கு சாரட் வண்டி ஓட்டுறான்

சத்யம் தியேட்டர் பின்புறம் வீடு

சாராயம் விக்கிறவனோட

தொடர்பு இருந்தும்

அம்மாவின் இஷ்டத்துக்காக

மொறப்பொண்ணையே

கல்யாணம் பண்ணிக்கிட்டான்

ஒருநாள் சினிமா பார்த்துட்டு

ராத்திரி லேட்டா வீட்டுக்கு வந்தான்

வாசலில் மாமியா காவல் காக்க

பொண்டாட்டி

சாராயக்காரனோடு இருந்தாள்

ஆத்திரத்தில்

மனைவியின் ரெண்டு கையையும் வெட்டி

அக்கலத்துல வெச்சுக்கிட்டு

மாமியா தலையைச் சீவி

இடதுகையில பிடிச்சுக்கிட்டு

ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல

சரண்டர் ஆயிட்டான்

தூக்குத்தண்டனையின்னு தீர்ப்பு

கடைசி ஆசைய கேட்டாங்க

தார தப்பட்டையோட

என் ஊரச் சுத்தி வரணும்

நான் சாகும்போது

அம்மா ஒப்பாரி பாடணும்

பறை ஓசையோடு

ஊரச் சுத்தி வந்தபிறகு

தூக்குமேடையில்

கழுத்தில் கயிறு மாட்டியவாறு அவன்

மருத்துவர் காவல் அதிகாரி நீதிபதி

உடனிருக்க

அம்மா கானா ஒப்பாரி பாடினாள்

அவள் உருக்கத்தைக்கேட்டு

மூன்று அதிகாரியும் மெய்மறக்க

தூக்குநேரம் தள்ளிப்போனதால்

தண்டனை ரத்தாகி

அதே தாரைதப்பட்டையுடன்

ஏரியா வந்து சேர்ந்தான்

‘ஆல்தோட்ட பூபதி.’

தாழ் திறவாய்! - கதவு 15 - ஜெயில்

* கானாப்பாடகர்களால் வழிவழியாகப் பாடப்படும் பாடல்கள் `ஆல்தோட்ட பூபதி' `நட்சத்திரப்பங்களா.' சில நூற்றாண்டுகளுக்குமுன் நடந்ததாகச் சொல்லப்படும் ஆல்தோட்ட பூபதியின் கதைப்பாடலை நான்குமணிநேரம் மூத்த பாடகர்கள் பாடுவார்கள். அதைச் சுண்டக்காய்ச்சி 40 வரிகளில் தந்திருக்கிறேன். `செனாய்' - சட்ட நிபுணராகச் சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு