Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 17 - வளையல் கடை

தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
News
தாழ் திறவாய்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

முதன்முதல்

வளையலைப் பார்த்தது

கிளியின் கழுத்தில்

காலத்தின் பொழுதுபோக்கில்

அம்மாவின்

மணிக்கட்டு

செப்பு வளையத்தில்

மஞ்சள் நீராட்டுப் புன்னகையில்

ஆறாம் வகுப்பு டீச்சரின் கைகளில்

தாழ் திறவாய்! - கதவு 17 - வளையல் கடை

சீமந்தத்தின்

சந்தனம் தோய்ந்த

வளவித் திருவிழாவில்

மூங்கில் அடுக்கில்

வீதியில் கூவும்

வியாபார ஓசையில்

தென்னங்குருத்தில்

வளையல் போடும்

அக்கா மகளின் கடிகாரத்தில்

பிளஸ் டூவில் என்னோடு

பிரம்படி வாங்கிய

ஐந்து பெண்களின் அழகில்

வளையல் எனக்கு வகுப்பெடுத்துள்ளது

ஒரு புரட்டாசிப்பொழுதில்

அனுமன் வேசம் போட்டு

வளையல்கடையின் வாசலில்

நின்றுகொண்டிருந்தவரோடு

நானும் நின்று

வண்ணங்களின் மொழிபெயர்ப்பாய்

மின்னிக்கொண்டிருப்பதைப் பார்த்து

மனம் உடைந்துபோனது

முதலிரவுக் கண்ணாடி வளையலாய்.