Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 18 - ஆடுதொட்டி

தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
News
தாழ் திறவாய்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

தெருவிளக்கு கீழே

கருக்கல் வித்துக்கொண்டிருப்பவள சுத்தி

ஈசலாய் கூட்டம்

கடாயில் கொதிக்கும் கொழுப்பென

கண்கள் பூத்திருந்தாள் முனிமா

அவள் புருஷன்

போதையில் தானே பேசிக்கொண்டான்

விடியகால மூணுமணிக்குத்

தொட்டிக்குப் போகணும்

ஹலால் சொல்லி

ஆடு மாடு கழுத்த அறுப்பாரு பாயி

தோல உரிக்கணும்

நடு எலும்பு வெட்டணும்

தாழ் திறவாய்! - கதவு 18 -
ஆடுதொட்டி

சாணி அள்ளணும்

தெய்சாவுல புடிச்ச சூடான ரத்தத்த

கூறுகட்டி வைக்கணும்

உரிச்ச ஆட்டை

கொழந்தபோல இடுப்புல தூக்கிட்டு

மீன்பாடியில ஏத்தணும்

மூக்கப்பிடிச்சுட்டு வர்றவங்கள

ஒரசாம அங்க இங்க ஓடணும்

வூட்டுக்குப் போயி

மாட்டுக்கொழுப்பையும் கூலியையும்

பொண்டாட்டிகிட்ட கொடுத்துட்டு

குளிக்கப்போனா

முதுகுல ரத்தக்கறைகள கழுவி

தொடச்சுவிடுவா

நாப்பது வருசமா தொட்டியில

வேல பார்க்கிறேன்

எல்லார் கையிலும்

கத்தி அருவாமணை இருந்தும்

ஒருநாள்கூட நடந்ததில்ல

வெட்டுக்குத்து.