Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 21 - பாத்திரக்கடை

பாத்திரக்கடை
பிரீமியம் ஸ்டோரி
News
பாத்திரக்கடை

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

பூனை உருட்டாத பாத்திரங்களாய்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடையில்
சில்வர் உருப்படிகளில்
கண்கள் கூசின
ஏற்றாத கொத்துவிளக்கு
கடவுள் இல்லா மணியோசை
கூவாத குக்கர்
நெற்றி தேடும்
குங்குமச்சிமிழ்
நிலாச்சோற்றுக்கு ஏங்கும்
வெள்ளிக்கிண்ணம்
கணவன் மனைவி சேகரிக்கும்
கல்யாணச் சீர்வரிசை
பாட்டி விளையாடும் பல்லாங்குழி
ஒவ்வொரு பொருளும்
குடும்ப உறுப்பினர்கள்
புகையாத சமையற்கட்டாய்
இருந்தது பாத்திர வீடு
கடை வாசலில்
பாத்திரத்துக்குப் பேர் எழுதுபவனோடு
பேசினேன்

தாழ் திறவாய்! - கதவு 21 - பாத்திரக்கடை

உன்னைப்போலவே
நானும் கூலிக்காரன்
நீ பாத்திரத்தில் எழுதுகிறாய்
நான் பாத்திரத்துக்காக எழுதுகிறேன்.